Sunday, August 11, 2013

தினமும் ஒரு செய்தி
ஓயாத் உழைப்பு கச்சிதமான வேலை கரிசனம் புன்னகை பூத்த முகம் போன்ற சிறப்பம்சங்களால் உலகப்புகழ் பெற்ற பக்கின்காம் அரண்மனையில் முதன்மை செவகரானார்.அசீம் இதுவே பிரிட்டிஷ் அரசகுடும்பத்தின் அடுத்த வாரிசை உலகுக்கு அறிவிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்று தானத்து இக்காட்சியை கொல்கொத்தாவில் உள்ள குடிசை வீட்டில் அவரது தந்தையும் தாஸ்யம் tv யில் பார்த்து  ஆனந்த கண்ணீர் வடித்தனர்
இந்தியன் என்று பெருமை கொள்வோம்.

தமிழகத்தை செர்ந்த் எஞ்சினீர் ஸ்ரீதர் திருச்சி ரீஜினல் கல்லூரியில் mechanical
படித்துillinoisil படித்து நாசா வில் செவ்வாய் க்ரஹ ஆராச்சியில் ஈடுபட்டார்.
ஆக்சிஜனை அங்கேயே உற்பத்தி செய்யா முடியுமா என ஆராய்ச்சி செய்தர். நாச அந்த முயற்ச்சியை கைவிட்டு விட்டது அனாலும் ஸ்ரீதர் மேலும் தொடர்ந்து முயற்ச்சித்து ப்லூம் பாக்ஸ் என்பதை கண்டு பிடித்துள்ளார்.இதன் தற்போதய விலை கோடிக்கணக்கில் இருப்பதாலுள்ளதால் கூகுள வால்மார்ட் ஈபே பெடெக்ஸ் ஸ்டேப்லே  போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.  இந்த எந்திரம் 2 லட்சம் ரூபாயில் உலகம் முழுவதும் கிடைக்கும் பட்சத்தில் உலக மக்கள் ஸ்ரீதர் பெயரை போற்றி புகழ்வார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
தமிழன் என்று பெருமை கொள்ளுவோம் 
தொலைகாட்சியில் ஒருவர் பேசினார்
ராமாயணத்தை புடுக்கன்னோட்டத்துடன் ஒருவர் எழுதி உள்ளதாக பேசினார். நாம் அறிந்ததெல்லாம் ஒரே இரவில் கூனி கைகயியின் மனதை மாற்றி விட்டால். பாசமிகு அன்னையாக ராமனை வளர்த்த கைகேயி காட்டுக்கு அனுப்பிவிட்டால்.  என்பவது தான் நாம் இதுநாள் வரை அறிந்த ராமாயணம்
கைகேயி ஜாதகம் கணிப்பதில் மிக வல்லவலாம்  தசரதர் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்ததும் கைகேயி அயோத்தி யின் ஜாதகத்தை கணித்து பார்த்தாளாம்  அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்கு யார் அயோத்தி அரியணை ஏறினாலும் அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று அறிந்து கலங்கி விட்டாளாம் தன அருமை மைந்தன் ராமனுக்கு மரணம் வந்து விடுமோ என பயந்து தன ஜோதிட குருவை கைகேய நாட்டிலிருந்து வரவழைத்து தான் கணித்தது சரியா என கேட்டாளாம். அவரும் சரியென்று கூறினாராம்  எப்படியும் எப் அருணை மகன் ராமன் இறக்கவும் கூடாது இந்த விஷயம் வெளியில் தெரியவும் கூடாது. என்ன செய்யலாம் என யோசித்து ராமனை 14 ஆருடங்கள் காட்டுக்கு அனுப்பும்படியும் பரதனுக்கு பட்டம் சூடும்படிஉம் தான் வரம் பெற்றுக்கொள்வதாக கூறினாளாம்  குருவோ உன் மகனை பறிகொடுக்க துநிகிராயே என்ற போது என் மகனைவிடவும் ராமன் மீது நான்வைத்துள்ள பாசம் அளவிற்கறியது. அதையும் இழக்க மாட்டேன் அயோத்தியின் எதிர் காலமும் முக்கியம் அதையும் காப்பாற்ற வேன்ப்டும் கடால் எனக்கு ஒரு வழிகாட்டுவார் என்று சொன்னாளாம்.
உன்னுடைய உயர்ந்த உள்ளத்திற்கு ஒரு குறைவும் வராது இறைவனருளால் உன் மகனும் பிழைத்திருப்பான் என்று வாழ்த்தி சென்றாராம்.
பரதன் மனதில் ஒரு எண்ணம் புகுந்து அண்ணனின் பாதுகைககை பெற்று வந்து 14 ஆண்டு ஆட்சி செய்தான்.
இதை படித்தால் யோசிக்க தான் தோன்றுகிறது. ஒரு இரவில் மனம் மாற வாய்ப்பில்லை. தாங்கள் நேசிப்பவர்களுக்காகவும் தாய் நாட்டிர்காகச்வும் மகத்தான தியாகம் செய்ய துணிந்தவள் கைகேயி என்றே என்ன தொன்று கிறது

என்னுடைய சந்தேகங்களுக்கு யாராவது விடை கூறுங்கள்
காலையில் 6 மனிக்கு உதிக்கும் சூரியன் 7.30 மணிக்கெல்லாம் ஏறத்ஹாழ 40 டிகிரி உயரத்திற்கு வந்து விடுகிறது ஆனால் உச்சிக்கு வர மீதி 45 டிகிரிக்கு 4.30 மணி நேரம் எடுத்து கொள்வது ஏன்
பெட்ரோல் பங்குகளில்pure for sure  என்று போட்டுள்ளதே அது சரியா
sure for pure என்பதுதான் சரி என்கிறேன் எது சரி.

தொலைக்காட்சியில் ஒருவர் கூறினார் சாணத்தின் மகிமை பற்றி சாணத்தை ஒரு மூலையில் அப்படியே போட்டுவைத்து விட்டு இரண்டு நாட்கள் சென்று பாருங்கள் அதில் புழக்கள் நெளியும் அதே சாணத்தை சின்ன பிள்ளையார் என்று பிடித்து வைத்துவிட்டீர்கள் என்றல் மாதம் ஒன்றானாலும் சுருங்கி காயுமே தவிர ஒரு புழு ப[ஊசி வரது என்றார் சிந்திக்க வேண்டிய விழயம் தானே

Tuesday, August 6, 2013

அயல்நாட்டில் வாழும் பிள்ளைகளே உங்கள் குழந்தைகளை அனேக விளையாட்டுகள் உடற்பயிர்ச்சிகளுக்கு அனுப்பினாலும் விளயாட்டாக  உங்கள் எதிரில் காதை இரு கைகளாலும் பிடித்துகொண்டு தோப்பு கரணம் போடச்சொல்லுங்கள். நீங்களெல்லாம் சின்ன வயதில் பிள்ளையார் கோவிலில் தோப்பு கரணம் போட்டிருப்பீர்கள். காரணம் எங்களுக்கும் தெரியாது உங்களுக்கும் சொல்லவில்லை.இனற்று அறிவியலார்களே காதன் நுன்ப்பாகத்தை பிடித்து அழுத்தம் கொடுப்பதால் மூளை நரம்புகள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள். அதனால் தான் அன்றைய ஆசிரியர்கள் படிக்காத மாணவனை காதை பிடித்து திருகி தோப்பு கரணம் போடா சொல்லி தண்டித்தார்கள் போலும்..
நம் இந்து மதத்தில் எந்த சாதியினராக இருந்தாலும்  கர்ப்பிணி பெண்ணுக்கு ஏழாம் மாதம் வலை காப்பு செய்து கை நிறைய வளையல் அடுக்குவார்கள்.
அதற்க்கு அறிவியல் விளக்கம் கூறுகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன் அவர்கள். எட்டு ஒன்பது மாதங்களில் குழந்தை அசைவு குறைந்து வரும் ஒன்பதாம்மாதம் குழந்தையின் அசைவை இளம் தாயினால் சரியாக சொல்ல முடியாது. குழந்தை தாயின் கைகளில் கலகல வென கேட்கும் வளையோசை கேட்டு இங்கும் அங்கும் அசையும் இதை நான்  ஒவ்வோவோருமுரையும் ஸ்கேன் செய்யும்போது கண்டு அதிசயித்திருக்கிறேன். வழக்கம் உண்டோ இல்லையோ சும்மாவாவது கர்ப்பிணி பெண்ணின் கைகலில் வலை அடுக்கி வையுங்கள். என்று கூறியிருக்கிறார்.
எங்கள் சிறு வயதில் பெரியவர்கள் ஓன்று சொன்னால் ஏன் எ தற்க்கு என்று கேட்காமல் எதோ  நன்மைக்குதான் சொல்கிறார்கள் என்று ஏற்று கொள்வோம்
வானில் பளீரென மின்னல் தோன்றியவுடனே பசங்களா    பெரிய இடி இடி க்கப்போகிறது எல்லோரும் அர்ஜுன அர்ஜுன என்று சொல்லுங்கள்
இடியோசை குறைந்துவிடும் என்பார்கள்/
. நாங்களும் சொல்லுவோம் மிஞ்சி கேட்டால் வானத்தில் அர்சுணனும் கர்ணனும் சண்டை போடுகிறார்கள் என்பார்கள். இன்றய அறிவியல் என்ன சொல்ச்கிறது என்றால் பெரிய ஓசை காதை தாக்கும்போது செவிப்பறை மிக்க அதிர்வுகொல்கிறது. பெரிதும் பாதி க்கபடுகிறது அந்த நேரம் வாயை திறந்து ஏதாவது உரக்க பேசினால் காற்று  உட்சென்று செவிப்பறையை எதிர் தாக்குதல் செய்கிறது அதனால் செவிப்பறை பாது காக்கப்பட்டு கிறது. என்கிறார்கள். அர்ஜுனா என்று சொல்லாவிட்டாலும் பெரிய இடி ஓசையின் பொது வாய் திறந்து எதாகிலும் ஒரு ஓசை எழுப்புங்கள். காதை பாது காத்து கொள்ளுங்கள்.

Monday, July 29, 2013

தினமலர் ஆன்மிக மலரிலிருந்து
சோதனைக்குழாய் குழந்தை
மகாபாரதம் கதை அதை நம்ப வேண்டாம். சரித்திர காலத்திற்கு வருவோம். சந்திர குப்தன் என்ற பேரரசன் மனைவி கர்ப்பமானாள் கர்ப்ப காலத்திலேயே ஒருநாள் திடீரென்று இறந்து போனாள்.ஆட்சிக்கு வாரிசு வேண்டுமே.சில நிமிடங்களுக்குள் அவள் வயிற்றிலிருந்து கருவை வெளியே எடுத்தார்  தலைமை மருத்துவர் சுஸ்ருதர். அக்கருவை ஒரு ஆட்டின் கருப்பையினுள் செலுத்தினார். அதுவும் வளர்ந்து ஒரு ஆன் மகவாக பிறந்தது. அந்த குழந்தையே பிந்துசாரர். பிந்து என்றால் ஆடு என பொருள்.
எவ்வளவு பெரிய சாதனை.இனி நான் எழுதுவது
நம் நாடு எல்லா இன்றைய விஞ்ஞான அற்புதங்களையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்துள்ளது. ராவணன் சீதையை விமானத்தில் ஏற்றிசென்றான் என்றும் கண்ணகி கோவலன் இருவரையும் ஒரு விமானம் ஏற்றி சென்ற தேன்றம் அன்றே எழுதி உள்ளார்கள். கற்பனைகளாக கூட இருக்கட்டும் எந்த ஒரு புதிய கண்டுபிடுப்பும் ஒரு அறிவாளியின் கற்பனையில் உதிப்பதுதான் அல்லவா'

தினமலர் ஆன்மீக மலரிலிருந்து சில
சூரிய உதயத்திர்க்குமுன் எழுபவன் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் ஒளவையார்
புத்துணர்வு பெற வாரம் ஒருமுறை கோயிலுக்கு செல்வோம்  வாரியார்.
புதுச்சேரி அரவிந்தர் அசரம் அன்னையின் அருளுரை
பிறர் விழயங்களில் ஒருபோதும் தலைய்டாதே கேட்காமல் யாருக்கும் ஆலோசனை வழங்காதே
ஆர்வம் விழிப்புணர்வு ஒருவனிடம் இருந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் அவன் லட்சியத்தை நெருங்கி கொண்டு இருப்பான்
வாழ்வில் சாதிக்க விரும்புபவனுக்கு ஒருமுகப்படுத்தும் திறன் அவசியம்
ஏழைகளை நேசிப்பது சொர்கத்தின் திறவுகோலாகும்.நபிகள் நாயகம்.
நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும் பைபிள் 

Sunday, June 30, 2013

மாண்புமிகு முதலமைசச்சர் அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் தவிர்கமுடியாத கொடுமையாக இருப்பது வீதியோரங்களில் உள்ள குப்பைகளும் நகராத சாக்கடை களும்தான்.
இனமாக ஆடு மாடுகள் கொடுப்பது தெனாலி ராமன் பூனை வச்லர்த்த கதையாகத்தான் முடியும்.
வீட்டுக்கு ஒரு பிளாஸ்டிக் குப்பைகூடையும் கடை களுக்கு சற்று பெரிய கூடையும் இனமாக வழங்கி விட்டு யார் வீடு தெருவில் குப்பை இருந்தாலும் உடனடி அபராதம் ருபாய் ஐம்பது அப்ன்று அறிவியுங்கள்,எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு தெருவில் குப்பை விழாமல் பார்துகொல்வார்கள் 
நான் படிப்பதில் சில நல்லவை மரியாதையாக பேசுவதும் நடப்பதும் செலவில்லாத செல்வங்கள்
உதவி பற்றி பேசுவோர் அதிகம் அதை செய்வோர் மிக குறைவு
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை சமாளிப்பதற்குஉண்மை  நண்பர்களேஉற்ற துணை
ஏடுகளில் உள்ள கடும் சொற்கள் அறிவை வளர்க்கும் பெரியோரின் கடுஞ்சொற்கள் நல்வாழ்வை வளர்க்கும்
விதி ஒரு கதவை மூடும்போது நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கும் உன்னைப்பார்த்து பிறர் போராமைப்படுகிரார்கள் என்றால் நீ வளர்ந்து இருக்கிறாய் என்று அர்த்தம் சாணக்யன்
பேச்சு பெரியதுதான் ஆனால் மவுனம் அதைவிட பெரியது
தயக்கமும் பலவீனமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்
பெசுகிரவனைவிட கேட்பவனுக்கு அதிக புத்தி வேண்டும் 

Thursday, June 27, 2013

வாழ்கை என்பது இனிம்யானாதா இல்லையா என்பது அவரவர் கண்ணோட்டத்தில்தான் உள்ளது. அதற்க்கு மகாபாரத கதை ஓன்று உள்ளது. நொஇஷ்மர் ஒரு நாள் தருமனையும் துரியோதனையும் அழைத்துஇன்று மாலையிக்குள் உலகில்மிக  நல்லவன் ஒருவனையும்மிக கேட்டவன் ஒருவனையும்  தேடி பிடித்து அழைத்துவாருங்கள் என்றார்.
        மாலையில் தருமன் உலகம் பூராவும் தேடினேன் மிக கேட்டவன் என்று யாரும் தென்படவில்லை என்றார். துரியோதனன் உலகம் பூர தேடினேன் மிக நல்லவன் என்று யாரும் தென்படவில்லை என்றான். பீஷ்மர் சிரித்துவிட்டு உலகில் நல்லவர்களும் கேட்டவர்களும் கலந்துதான் இருக்கிறார்கள். நல்லவனான தருமனுக்கு மற்றவர்களிடம் உள்ள குறைகள் பெரிதாக தெரியவில்லை அதனால் கெட்டவர்கள் என்று யாருமில்லை என்றான். கெட்டவனான துரியோடனனுக்கோ நற்றவர்களிடம் உள்ள நல்லது கண்ணுக்கு தெரியவில்லை குற்றங்கள்தான் தெரிகின்றன். நலாதும் தீயதும் அவரவர் கண்ணோட்டத்தில் தான் உள்ளது என்றார்.

Wednesday, May 29, 2013

வீடுகள் கல்யாண சத்திரங்கள் உணவுவிடுதிகள் போன்றவை புதிதாக கட்டியதாக  இருந்தால் ஹாலிலிருந்து ஒரு அறைக்கு போகும்போது அல்லது கழிப்பரையக்கு  போகும்போது புதிதாக போட்டுள்ள  தளங்கள் ஒரே நிறமுள்ள மார்பில் அல்லது தை ல்சாக இருந்து ஒன்றுக்கொன்று நான்கு அங்குல பள்ளமாக இருக்கின்றன. பலரும் அதை கவனிக்காமல் தடுக்கிவிழ வாய் ப்புண்டு. . அதனால் மேடா ன பகுதியின்  ஓர த்தில் கலர் ஸ்டிக்கர் கோலத்தை ஓட டிவிட்டால் அழகாகவும் இருக்கும் ஆபத்தையும் தவிர்க்கலாம்இதை அஹா 50 காக அனுப்பியுள்ளேன்.

Saturday, May 25, 2013

மங்கையர்மலர் மே மாத இதழில் வாய்த்த போட்டி கட்டுரைக்காக நிர்வாக மேலாண்மையில் சிறந்து விளங்க தேவை படிப்பே அல்லது பயிற்சியே
எழுபது விழுக்காடு மக்கள் பயிற்சியே என்பதை தான் ஏற்றுகொல்வர்ர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
வசதியும் வாய்ப்புகளும் உள்ளவர்கள் தான் படித்து சாதிக்கிறார்கள். வசையின்றி படிக்க முடியாத புட்திஉச்டாலிகல் தானாகவே ஒரு தொழில் தொடங்கி உழைத்து முன்னேறி பல லட்சியங்களை அடைந்துள்ளார்கள். பெரிய தொழிலதிபர்கள் கட்சித்தலைவர்கள் எல்லாம் பயிற்சியால் தாசன் சாதனைகள் படைத்துள்ளார்கள். உ.ம். பில்கேட்ஸ் அம்பானி சகோதரர்கள் ஜி டி, நாய்டு காமராஜர்
நாடார் இன தலைவர் ஒரு முறை பெட்டியில் கூறினார். எங்கள் சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக தகப்பன் இருந்தாலும் பிள்ளையை முன் பின் தேரோயாத ஒரு கடையில் குமாஸ்தாவாக தான் இரண்டு மூன்று வருடங்கள் விட்டு வைப்போம். அப்போது அவன் வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வான். வடிக்கயலர்களிடம் பேசி பழக வேலைக்காரர்களை கவனத்துடன் கட்டி மேய்க்க பணம் சம்பாதிப்பது என்பச்து எவ்வளவு கடினம் என்பது எல்லாம் தெரிந்து கொள்வான். பிறகு தனியாக அவனுக்கு
ஒரு தொழிலோ கடையோ தொடங்கி கொடுபோம் அவனும் அடைந்துள்ள அனுபவத்தால் நன்றாக நிர்வச்கித்து முன்னேறி விடுவான் என்றார். அவ்வளவு என்
ஒரு குடம்பத்தை அதிலும் கூட்டு குடும்பமாக இருந்தால் ஒரு பெண் கணவன் சம்பாதிக்கும் பணத்திற்கு தகுந்த்தற்போல் பட்ஜட் போட்டு மாமியார் மாமனார் கவனித்து பில்லைகக்லி படிக்க வைத்து பெண்களை மனமுதித்து கொடுத்து என சீராக குடும்பத்தை நிர்வாகம் செய்ய எந்த காலேஜில் படித்து வந்தால் அவளுடைய தாய் கொடுத்த பயிற்சியே காரணம்.

இந்த கட்டுரையை எழுதி தபாலில் எசெர்க்க சொல்லி ஒருவரிடம் கொடுத்தேன் . ஒரு வாரம் சென்று இன்று தான் தபாலை போடவில்லை என்று அச்ரிந்து போட்டுள்ளேன். இன்றும் நாளையும் தபாலாபீஸ் விடுமாராயம் அதனால் தான் பிழைகளுடன் இதை அனுப்பியுள்ளேன். மன்னிக்கவும்.  பங்கஜம் 

Sunday, May 19, 2013

நம்பர் 1 I T பெண். தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமா கோபால் T C S நிறுவனத்தின் சர்வ தேச தலைவர் என்ற பதவி வக்ஹிக்கிறார். அதை சாதரணமாக பெற்று விட வில்லை.
16 வயதில் தந்தையை இழந்த ஹேமா தாயின் தூண்டுதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் சென்னை வைஷ்ணவ கல்லூரியில் bsc  mit இல் btech சென்னை I I T இல் ms என படித்து 1985 இல் T C S இல் சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவராக 1985 இல் இத்துறையில் கால் பதித்தார். படிப்படியாக உழைத்து உயர்ந்து 28 ஆண்டு காலமாக ஒரே கம்பனியில் வேலை பார்த்து மிக உயர்ந்த பதவியை எட்டி உள்ளார். பெண்ணினத்துக்கே பெருமை சேர்த்துள்ள ஹேமாவுக்கு ஒரு தாயின் ஸ்தானத்தில் என் வாழ்த்துக்கள். நீங்களும் வாழ்த்த நினைத்தால் hema .g @tcs .com
நன்றி தினமலர் வாரமலர்.

Monday, May 13, 2013

சக்தி மசாலா நிறுவனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அன்னையர் தினத்தன்று நாள் முழுவதும் சன் டிவி  மூலம் அன்னையர் தினத்தை பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள். ஏற்கனவே மாற்றுட்திர்ண்லிகலுக்கு அவர்கள் நிறுவனத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் அளித்துள்ளார்கள். அதற்க்கும் பர்பாராட்டுக்கள்.

Sunday, May 12, 2013

எங்கயோ படித்தது . அன்னையை மற்ற எதற்காக வும் பாராட்டி புகழ்ந்து கொண்டாட வேண்டாம். நாம் ஒரு ஐந்து கிலோ சுமையை ஒரு கையில் கொஞ்சம் தூரம் தூக்கி வந்தால் அடுத்த கைக்கு மாற்றி கொள்கிறோம். ஒரு தாய் கருவுற்றிருக்கும்போது கடைசி மூன்று மா தங்கள் குறைந்த பட்சம் ஆறு கிலோ எடையை வயிற்றில் சுமந்து கொண்டு    குனிந்து நிமிர்ந்து ஓடியாடி வேலை செய்கிறாளே அந்த ஒன்றிர்க்ககவே அன்னையை பரிவுடன் நிநை யுங்கள். உங்கள் அன்னையை மட்டும் அல்ல தாய் குலத்தையே பரிவுடன் நடத்துங்கள் 

Sunday, April 21, 2013

சேவை கைம்மாறு  கருதாத  தாக  இருக்க வேண்டும். செய்த சேவையை வெளிப்படுத்துவதும் அதற்காக பாராட்டை எதிர்பார்ப்பதும் கூடாது  சாய் பாபா.
 ஆ னால் பெற்ற உதவிக்கு உடனே நன்றி சொல்வது மனிதனுடைய தலையாய கடமை அதையும் மறக்க கூடாது. பங்கஜம்
பற்றில்லாத வாழ்க்கையில் தான் திருப்தி இருக்கிறது. சாய் பாபா
எதிர்பார்ப்புகள் குறைய குறைய எஏ மாற்றங்களும் குறையும்.பங்கஜம்
மனித நேயம் நல்லொழுக்கம் கருணை ஆகிய குணங்கள் மனிதனுக்கு அவசியம். இவற்றை  க்கற்றுத்தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை. சாய் பாபா.
இதைதான் வள்ளுவர்  உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல கற்றும் கள்ளன் அறிவிலாதான் என்று கூறி உள்ளார்.
ஔவையார் முதல் வரியில் ஏற்பது இகழ்ச்சி என கூறி விட்டு அடுத்த வரியில் ஐயமிட்டு உன் அன்று கூறி உள்ளாரே இது என்ன முரண்பட்டு என எண்ணிக்கொள்வேன்.
நானே மறுபடி மிக அதிக தேவை என்றாலோழிய ஏற்பது இகழ்ச்சி என கொள்ளவேண்டும்.
வசதி படைத்தவன் ஐயமிட்டு உன் பசியோருவனுக்கு உணவிட்டுதான் அவன் சாப்பிடவேண்டும் என்ற பொருள் கொள்ளவேண்டும் என எண்ணிக்கொள்வேன் சரிதானே பங்கஜம்
தயவுசெய்து , நன்றி, மன்னிக்கவும் என்ற மூன்று வார்த்தைகளை அவ்வபோது பயன் படுத்தினால் நம்மை சுற்றி நிறைய நண்பர்கள் இருப்பார்கள். 
சூரிய உதயத்திற்கு  முன் எழுபவர் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். அவ்வையார்.
புத்துணர்வு பெற வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வோம். வாரியார்.
வாழும் காலத்திலேயே நல்லது செய்துவிடுங்கள். வள்ளுவர்.
பணியாள் மீது இறக்கம் கொள்ளுங்கள். நபிகள்நாயகம்.
கடந்த காலத்தை எண்ணி வருந்தாதீர்கள்.  ஸ்ரீ அன்னை.
நேர்மை இருந்தால் இறையருள் கிடைப்பதை உணரலாம். ஸ்ரீ அன்னை

மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் சமைக்கப்படும் உணவிற்கு சுவை அதிகம்  சாய்பாபா. அதுதான் தாயின் சமையல் ருசிக்க காரணம் இது பங்கஜம். .

Saturday, April 13, 2013

சரியானதோர் திட்டம் சாலையின் வரைபடம் மாதிரி
உங்கள் இலக்கை சென்றடைய அதுவே சிறந்த வழி
அறிவாற்றலின் பயன் அறிதாக்வே இனங்கா னப்படுகிறது
அது கடின காரியங்களையும் எளிதாக்கும் திறன்.

வாழ்க்கையை உருவாக்க பயன்படும் காலத்தை வீனாக்காதீர்கள்.
உங்களால்  முடிந்தவரை ஒவ்வொரு கனத்தையும் பயனுள்ளதாக்குங்கள் அது
அளவின்றி வழங்கப்படவில்லை நம் கைகளில்

யார் வாக்கு தவராதவனோ நேர்மையாய்  சிந்திக்கிரவனோ
வெளிப்படையாய் பேசுகிறவனோ மக்கள் அவனையே மதிக்கின்றனர்
அவனிடம் நம்பிக்கை வைக்கின்றனர்
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடா முயற்ச்சியை நண்பனாக்கி கொள்ளுங்கள்
அனுபவத்தை ஆலோசகராகி கொள்ளுங்கள் அச்ச்சரிக்கை சகோதரனாக இருக்கட்டும். நம்பிக்கை அறிவு மிக்க பாதுகாவலரை இருக்கட்டும்.
பயன் படுத்தாத துணிவு தன்னால் குறைந்துவிடும்.
பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு பாழாகி போய் விடும்.
மதிப்பு மிக்க எதுவும் எளிதாய் கைக்கு வந்து விடாது உழையுங்கள்'
தொடர்ந்து உழையுங்கள் கடினமாய் உழையுங்கள் அதுவே நிலையான
பலன்களை தரும்இவை யெல்லாம் சிகரம் எட்ட என தினமலரில் வந்த கருத்துக்கள்.




பாலம் நொறுங்கி விழும் காட்சி என்றால் நாம் போகும் பஸ்ஸே பாலாதில் திடீரென விழுகிறது வெள்ளம் என்றால் பஸ்சின் உள்ளே தண்ணீர் புகுந்து நம் நம் துணிகளை நனைத்து விடுகிறது நெருப்பு என்றால் கண்ணெதிரே பெரிய பெரிய என்னை பீப்பாக்கள் வெடித்து சிதறும் தீயை அள்ளி கொட்டும் எல்லாம் ஒரு நிமிடம்தான் அடுத்த நிமிடம் மாயஅஜாலம் போல் அனைத்தும் மறைந்து விடும். இதையெல்லாம் பார்க்க நாங்கள் என்ன புண்ணியம்  செய்தோமோ.நல்ல மக்களை பெற்று அவர்கள் நல்ல நிலையில் இருந்து நாங்களும் ஆரோகயா  முடன் இருப்பது கடவுள் அருளே. 

Tuesday, April 9, 2013

universal  studio தொடர்ச்சி.
பல வருடங்களுக்கு முன் மிக பிரபலமாக ஓடிய ET  என்ற science fiction film எடுத்ததை அப்படியே வைத்திருக்கிறார்கள்.
ஓடு கயிற்றில் தொங்கும் தொட்ட்ளில் சைக்கில் போன்ற அமைப்பு.
பத்திரமாக உட்காரவைத்து கம்பி சீட் பெல்ட் எல்லாம் போட்டு விடுகிறார்கள். மேடு பள்ளம் திடீர் இருட்டு திடீர் வெளிச்சம் சர்ரென்று கீழே சரியும் பிறகு மேலே ஏறும் கடைசியில் வானவெளியில் நாம் பறந்து போவது போல் உணர்ச்சி கீல்ழே பார்த்தால் பூமி சுற்றிலும் நட்சத்திரங்கள் நிலா நாம் வான் வெளியில் மிதந்து கொண்டே போகிறோம்  மூச்சை பிடித்துகொண்டு தைரிய மாக எலாவற்றியும் பார்த்தேன்.  ஏற்கனவே என்மகன் சொல்லி இருந்தான் இங்கு எல்லாம் மிக ஜாக்க்ரதையாக அமைதிருப்பர்ர கல்  நம் உடம்பில் ஒரு சின்ன கீறல் சிராய்ப்பு விழுந்தாள் கூட லட்சகணக்கில் நஷ்ட ஈடு தரவேண்டி வரும் எல்லாவற்றையும் மிக safe அக வைத்திருக்கிறார்கள்
4 D தியேட்டர் போனோம் மழை வரும்போது நம் மீது தண்ணீர் சிதறல் துப்பாக்கி அல்லது குண்டு வெடிக்கும்போது ஓசையுடன் வெடி மருந்தின் நெடி
எலிக்கூட்டம் ஓடிவந்தாள் நம் கால்களை பல எலிகள் பிராண்டுவது போன்ற உணர்வு.
கடைசியாக studio டூர் என்று ட்ரெயினில் studio முழுக்க சுற்றிக்காட்டுகிறார்க.ள்
பல சினிமாக்களில் வந்த நியூயார்க் நகர வீதிகள் வாஷிங்டன் கோர்ட் நகர வீதிக ரப்பரால் கட்டப்பட்ட செட்டிங் வீடுகள் கடைத்தெரு போலீஸ் ஸ்டேஷன்  பாழடைந்த கோட்டைகள்  லாண்டரி சலூன் ஹோட்டல் ஸ்கூல் காசினோக்கள் என எல்லாமே ரப்பரால் செய்த செட்டிங்குகள். வெயிலாலோ மழையாலோ பாதிக்கப்படாமல் புத்தம் புதிது போல் உள்ளன.என்தேன்த்த சீன எந்த படத்தில் எடுத்தது என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
வெள்ளம் என்றால் நாம் உட்கார்ந்துள்ள  .

Monday, April 8, 2013

ஹாலிவுட் பயணம்  ஹாலிவுட் என்பது ஊரின் பெயர் அதில் முழுக்க முழுக்க
universlstudio  தான் ஆக்ரமித்துள்ளது,
ஸ்டுடியோவுக்கு முன் உள்ள கடைத்தெருவே ஏதோ சினிமா செட்டிங் போல அழகு.
ஒரு இடத்தில் சினிமா ஷூட்டிங் எப்படி எடுக்கிறார்கள் என்பதை நடித்துகாடுகிரார்கள்.
ஒரு ஹீரோயினை வில்லன் கடத்திக்கொண்டு போவது  ஹீரோ எப்படி நெருப்பில் குதித்து தண்ணீரில் நீந்தி பெரிய காயிற்று ஊஞ்சலில் ஊசலாடி மீட்கிறான் என்பதை நடித்து கட்டுகிறார்கள்.
திடீரென தெருக்களில் வெள்ளம் சீறிப்பாய்ந்து வருவது ஒருநிமிடத்தில் வீடுகளின் கூரை மீது மழை பொழிகிறது தெருக்கோடியிலிருந்து வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது அடுத்த நிமிடம் எல்லாமே மாயமாக மறைகிறது அதிசயம்.
உண்மையாகவே ஒரு ரயில்வே ஸ்டேஷன் ஒரு ரயில் எஞ்சினும் ஒரு லாரியும் பயங்கரமாக பெரும் ஓசையுடன் மோதிக்கொள்கின்றன.
எல்லாமே அடுத்த நிமிடம் காணாமல் போகின்றன. 

Tuesday, April 2, 2013

காந்திஜியின் பொன்மொழிகள்.
1.தன்னம்பிக்கையும் அடக்கமும் ஒருவனிடம் இருக்குமானால் அவனது வாழ்வு தித்திக்கும்
2.படைபலத்தால் கிடைய்க்கும் வெற்றியைவிட மனதில் இருக்கும் ஆசை கோபம் ஆகிய இரண்டு உணர்சிகளையும் வெல்வது மேலானது.
3.அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்கு சமம். தலனை ஏற்கும் தகுதி பெற முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்.
4. நாணயமாக சம்பாதித்தால் எந்த வேலையும் இழிவானது அல்ல
5.அறிவைவிட ஒழுக்கம் உயர்வானது.  ஒழுக்கமின்மை பல தீமைக்கு வழி வகுக்கும்
6ஒழுக்கத்தை வெறும் படிப்பறிவால் பெற்றுவிட முடியாது 7கைம்மாறு கருதாமல் பிறருக்கு நன்மை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
8எதை மனிதன் விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுப்பான் என்பது விதி.அதிலிருந்து தப்ப முடியாது.
9.அநியாயத்தை எதிர்த்து நிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
10 மனதிற்கு சாந்தி அளிப்பதர்க்ககவே இசை நடனம் முதலிய கலைகள் உருவாக்கப்பட்டன.
பிள்ளைகள எழுத்துப்பிழை மன்னியுங்கள் இங்கு உள்ள கறன்ட் கட்டில் டைப் அடித்து முடிப்பதற்குள்ளாகவே நேரம் போதவில்லை திருத்த எது நேரம்?

Tuesday, March 26, 2013

தினமலரிலிருந்து
சமையலில் செய்யக்கூடாதவையும் செய்ய வேண்டியவையும்
1. ரசம் அதிகம் கொதிக்க கூடாது
2. மோர்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது
3. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகம் கொதிக்க கூடாது.
4,தக்காளியையும் வ்வ்ன்காயத்தையும் ஒன்றாக வதக்க கூடாது
காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்க கூடாது.
5.கீரைகளை மூடிபோட்டு சமைக்க கூடாது
6 பெருங்கயத்தை தாளிக்கும்போது என்னை நன்றாக கா யக்கூடாது
குழம்போ போறியளோ ஆடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது
7 சூடாகைஇ ருக்கும்போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது
8காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது
9குலோப்ஜாமுன் பொரிக்கும்போது எண்ணெய்யோ நெய்யோ நன்றாக கா யக்கூடாது
10. பிரிட்ஜில் வாழைப்பழம் உருகைக்கிழங்கு வக்க கூடாது
செய்ய வேண்டியவை.
வற்றல் குழம்பை தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்
2.மாவு பிசைந்த உடனேயே பூரி போடவேண்டும்
3,இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊறவேண்டும்
4வாழைப்பூவை இரவே நறுக்கி தண்ணீரில் போடவேண்டும்.
4கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முற்றினதாக இருக்க வேண்டும்
5போலி க்கு மாவு ஆறு மணிநேரம் ஊறவேண்டும்
6ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு கைச்ச வேண்டும்
7புளிக்கைச்சளுக்கு  கெட்டியாக புளியை கரைக்க வேண்டும்
8குருமாவை இறக்கும்போது கரம் மசாலாவை சேர்க்கவேண்டும்



Tuesday, March 12, 2013

நம்மால் இயன்ற சின்ன சின்ன உதவிகளை அக்கம் பக்கத்தினருக்கு செய்வோம் இதோ வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. எங்கள் வீட்டு  குழாயில் மட்டும்தான் தண்ணீர் வரும் எங்கள் தெருவில் அக்கம் பக்கம் ஆறு ஏழு வீட்டார் வந்து தண்ணீர் அடித்து கொள்வார்கள். எல்லோருக்கும் தண்ணீர் விடுகிறீர்களே அவ்வப்போது வாஷர் வீணாகி விடுமே என எங்களை எச்சரிப்பவரிடும் என் கணவர் சொல்லுவார் போனால் போகட்டுமேநூறு ரூபாய்  ஆகுமா செலவு எனக்கு இதனால்  எவ்வளவு புண்ணியம் கிடைக்கிறது அதை விலை கொடுத்து வாங்க முடியுமா. என்பார்
நாங்கள் இருவருமே வயதானவர்கள்தான் ஆனால்  சென்னை பேருந்தில் செல்லும்போது எங்களைவிட வயது முதிர்ந்த வர்கள் வந்தா உடனே எழுந்து இடம் கொடுப்
போம் அதை பாத்துவிட்டு அதுவரை சும்மா இருந்தா ஓரிரு இளையவர்கள் எழுந்து எங்களுக்கு இடம் தருவார்கள்.
அதேபோல தெருவில் தலை சுமையாக கொண்டு  வரும்  பழம் காய்கரிகாரர்களிடம் விலை குறைத்து கேட்க மாட்டோம். பெரிய கடைகளிலோ துநிக்கடயிலோ நகைகடயிலோ பேரம் பேசிய வாங்குகிறோம் இரண்டு ரூபாய் கூட கொடுப்பதால் நாமும் ஏழை ஆகிவிடமாட்டோம்
இன்னும் சொல்ல போனால் கடைகளில் வாங்கும் பழமோ ககறியோ வ்பீடுக்கு வந்து பார்த்தல் ஒன்றிரண்டுகெ  ட்டு பொய் இருக்கும் ஆனால் வாசலில் ல் வாங்கும் பொருட்களை அவர்களே பொறு க்கிஎடுத்து ள்ளதாக கொண்டு வருவார்கள்.
 நாம் ஒரு கடைக்கோ எலெக்ட்ரிக் பில் கட்டவோ வெளியில் போனால் அருகில் உள்ள முதிய குடும்பத்தாரிடம் கேட்டு அவர்களுக்கும் சேர்த்து நாமே உதவலாம்.
நம்மை பார்த்து நம் குழந்தை களும் சிறுவயது முதலே பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்து கொண்டு நல்ல குடிமகன் என்று பேர் எடுப்பார்கள் 
நம் பிள்ளைகளுக்கு சின்ன வ்யதிலிருந்தே பிறருக்கு உதவும் குணத்தை வளர்க்க வேண்டும் எங்கள் பேரன் ரகு எங்கு குடி போனாலும் வீடு உரிமையாளருக்கு கு செல்ல பிள்ளை அல்லது பேரனாகிவிடுவான். கடைக்கு போனால் அவர்களுக்கு எ தாவது தேவையா என கேட்டு வாங்கி வந்து தருவான். எலெக்ட்ரிக் பில் கட்டுவது காஸ் கடையில் விசாரிப்பது போன்ற சின்ன சின்ன உதவிகள் செய்வான்.வயதில் மூத்தவர்களை அவ்வப்போது நலம் விசாரிப்பான்.
எங்கள்மூத்த  மகன் இளங்கோ  இந்தியா அவருகிறான். பார்க்கமுடியாது என்று இருந்தபோது மூன்று வருடங்கள் பொறுத்துக்கொண்டோம்  இன்னும் முப்பது மணிநேரம் தான் என்னும்போது தூக்கம் வரவில்லை நாளைய பொது எபொது விடியும் மகன் பத்திரமாக வந்து சேரவேண்டுமே என மனம் எண்ணுகிறது.

Saturday, March 9, 2013

வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் பார்க்கவேண்டிய  அருமையான குறும்படம்.தமிழர்களைப்போல தாய் மொழியை மறந்தவர்கள் உலகத்தில் எங்கும் இருக்க மாட்டார்கள் தெலுங்கர்பஞ்சாபி மலையாளி என யாரும் அவரவர் தாய்மொழியை தான் வீட்டில் பெசுகிரார்களாம் தமிழன் தவிர 
நாம் எப்போதும் நேர்மறை சிந்தனை உடையவர்கலாக இருக்கவேண்டும்
ஞானிகளும் சித்தர்களும் பிறக்கும்போதே அப்படி பிரக்கிரார்களா   இல்லை. அவர்களிடம் உள்ளமனதை  ஒருமுகப்படுத்தி சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொண்டு அதிசயங்களை நிகழ்த்திகாட்டுகிரார்கள் நம்முடைய சிந்தனைகலுக்கு  சக்தி உண்டாம் அது VIBRATE ஆகி யாரை போ ய் சேர வேண்டுமோ அவர்களிடம் சேருமாம்.
ஒருவருக்கு நல்லது நடக்கவேண்டும்என்றால் சதா அதையே சிந்தித்து கொண்டு இருந்தால் அந்த எண்ணங்கள் அலைகலாக மாறி  அந்த நபரை சென்று அடைந்து சுறுசுறுப்பையும் ஊக்கத்தையும் அளித்து வெற்றபெற செய்கிறதாம்
எதிர் எண்ணத்துடன்  ஒருவர் கெட வேண்டும் என்று சதா எண்ணினால் அந்த எண்ணங்களும் அலைக்கதிர்கள மாறி அந்த நபரை வலுவிழக்க செய்து தோல்வியை தழுவ செய்யுமம். அந்த சக்தியை ஒரு நாள் ரெண்டு நாளில் அடைய முடியாது
மனதை ஒருநிலைப்படுத்தி சிந்திக்க பழக நல்ல முயற்சி வேண்டும். எந்த விஷா ய த்தையும் POSSITIVE திங்கிங்  உடன் செயல்படுங்கள் வாழ்வில் வெற்றிபெறுங்கள் 

பி ரபல சோ ராமச்வாமிக்கு சோ என்ற பெயர் எப்படி வந்தது என்று அவர் குமுதத்தில் எழுதும் தொடரில் கூறுகிறார்.
ஒரு சமயம் ராஜராஜசொழனை ப்ரமஹத்திதோஷம் பிடிக்க வந்ததாம் பயந்து கோவிலுக்குள் ஓடினாராம். வாசலில் இருந்த விநாயகர் நீ பின்வாசல் வழியா க ஓடிவிடு பிரமஹத்தி வந்தால் நான் பிடித்துவைதுகொள்கிறேன் என்றாராம் அதேபோல் பிடித்து வைத்து கொண்டாராம். அதுமுதல் அதற்க்கு சோழ பிரம்மஹதி என்று பெயர் வழங்கிற்றாம். வீட்டிலேயே மிகவும் குறும்பு சேட்டை எல்லாம் செய்யும் ராமசாம்யை அவர் அம்மா செல்ல மாக சோழ பிர மஹத்தி என்று கூப்பிட ஆரம்பித்தாராம் பிறகு எல்லோரும் சோழா சோழா என்று சுறுக்கமாக கூப்பிட்டு பிறகு அதுவும் சுருங்கி சோ என்று ஆகிவிட்டதாம் எப்படியோ என் அம்மா வைத்த பெயரால்தான் பிரபலமாகி விட்டேன் என்று பெருமைப்படுகிறார்..

எங்கேயோ படித்தவை
27 வகையான தாதுக்கள் கிடைக்கும் ஒரே மாநிலம் மத்யபிரதேசம்
யானையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 24 முறைதான் துடிக்கும் மூளைக்கைச்சளுக்கு காரணமான விலங்கு பன்றி

எங்கேயோ படித்தவை
வாழ்க்கையில் முன்னே ற்றத்தை விருபுகிரவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு போதும் இடம் கொடுக்ககூடாது
நம்பிக்கை  இல்லாவிட்டால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது
நம்பிக்கை இருந்துவிட்டால் மலையை கூட புரட்டிவிடலாம்
எத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்  என்று யாரும் கேட்பதில்லை
ஜெயித்தீர்கலேன்பதுதான் முக்கியம் அற்ப  ஆசைகளையும் சுகங்களையும் தியாகம் செய்ய தயங்காதீர்கள் தொலை நோக்கும் லட்சிய வெறியும்தான் ஒரு சாதனையாளனுக்கு முக்கியம்
எப்போதும் தயாராக இருங்கல்வைப்புகள் எப்போது நம் கதவை தட்டும் என்பது தெரியாது 

Thursday, March 7, 2013

என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
இன்று காலை suntv  ல்  ஒருவர் மகளிர தின பேச்சாளர் பேசினார். பெயர் கவனிக்க தவறிவிட்டேன்.
 ஆன் களும் பெண்களும் சமம் என்று இன்றைய சமுதாயத்தில் பேசினாலும் ஆண்களுக்கு சமமாக பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறி சாதனைகள் படைத்தாலும் உடலளவிலும் உள்ளத்தாலும் மிகவும் மாறுபட்டு இருக்கிறார்கள் என்பதை மிக அழகாக விளக்கினார்.
ஆதி கால மனிதன்  குழுவுடன் சேர்ந்தது வேட்டைக்கு போய் ய் உணவு சே கரித்து வருவான் பெண் இல்லத்தில் இருந்து குழந்தைகளையும் முதியோரையும் கவனித்து கொண்டு அருகில் கிடைக்கும் பழங்கள் கிழங்குங்களை சேகரித்து வர்களுக்கு உன்ன உண்ண  கொடுப்பாள். அதற்கேற்றவாறு ஆணின்  கண் பார்வை தொலைவில் உள்ள பொருட்களை கூர்ந்து கவனிக்கு மேயன்றி அருகில்  உள்ள பொருட்களை உன்னிப்பாக கவன்க்கும் திறன் கிடையாது  அதனால்  தான் இன்றும் ஆண்  மேசை மீது உள்ள உள்ள ஒரு பொருளை சட்டென்று எடுக்காமலும் ப்ரிஜ்ல் ஒரு பொருளை தேடிக்கொண்டும் மனைவியிடம் திட்டு  வாங்குகிறான்.பெண் ஆதியிலிருந்தே பென்  வேளையில்  ஈடுபட்டிருந்தாலும் குழந்தை மீது ஒரு கண் வைத்திருப்பாள்  அதே போல் கேட்கும் திறனும் ஆணுக்கு இரண்டு காதுகளும் ஒரே நேரம் துல்லியமாக கேட்காது. பெண் ஒரு வேளையில் ஈடு பட டுக்கொண்டே மறு வேலையை எளிதாக செய்கிறாள். பாட்டு  கேட்டுகொண்டே சமையல் செய்கிறாள் டிவி பார்த்துக்கொண்டே பூ தொடுக்கிறாள். அனால் ஆண்  டிவி ஓசையை  குறைத்தாலன்றி எதையும் செய்ய தடுமாறுவான்
இதையெல்லாம் நான் சொல்லவில்லை பேச்சாளர் சொன்னார்.
 அதனால் பெண்களை குறைத்து மதிபிடாதீர்கள்
ஒரு பெண்கணவனை இழந்து விட்டால் வருவாய் தனக்கு தெரிந்த கூலிவேலை புல் அறுப்பது நாற்று நடுவது போன்ற வேலையோ படித்த பெண் உத்தியோகம் பார்த்தோ பிள்ளைகளை சமாளித்து வளர்துவிடுவாள். ஆ னால் ஒரு மனைவி தவறிவிட்டால் அந்த ஆன் பிள்ளைகளை வளர்க்க பெரும் பாடு படுகிறான்.
உலகளவில் இதயபாதிப்புக்குள்ளவதும் ஆண்களே. என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆணுக்கு தோல்வியை இழப்பை தாங்கும் மன வலிவு இல்லை. ராமனைப்பிரிந்த தசரதன் தான் உயிர் விட்டார்  கணவனை இழந்த பெண்டிர் ஜீஜபை இந்த்ரகந்தி போன்றவர்கள் மனவளிவுடன் இருந்து தங்கள் மக்களை நன்கு வளர்த்தார்கள்.
ஆகையால் பெண்களே நாம் உடலளவில் வலிமைகுரைந்தவராக இருந்தாலும் உள்ளத்தில் வலிவோடு இருந்து வாழ்வில் ஏற்படும் மேடு பள்ளங்களை எளிதாக கடந்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன்  பெண்


Wednesday, March 6, 2013

ஒருவன் ஒரு காரியத்தை செய்யும் முன் மனதில் ஓன்று தோன்றும் . பிறகு மூளை அதை மாற்றி செய்ய சொல்லும். மனம் சொல்லியதை புறக்கணித்து விட்டு மூளை சொன்னதை செய்வான். அனால் அதன் பின் விளைவு வெற்றிகரமாகவோ திருப்தியாகவோ அமையாது. அவனே தனக்குத்தானே முன்பே இப்படி நினைத்தேன் என்னவோ மாற்றி செய்து விட்டேன் என வருந்துவான், பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவன் மனசாட்சிக்கு பயந்து நேர்மையுடன் நடப்பான்.குயுக்திகள் தொன்றுவேதேல்லாம் படித்தவனுக்குதான்.
கடவுளை வணங்க வேண்டாம். தானதர்மங்கள் செய்ய வேண்டாம் மனசாட்சிப்படி நடங்கள். படுத்ததும் கவலையின்றி தூக்கம் வரும். அதை தான் வள்ளுவர் கூறினார் தன நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன நஞ்சே தன்னை சுடும் என்று.

பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கும் நேரம். சில குழந்தைகள் நன்றாக படித்திருந்தாலும் தேர்வைப்பற்றி பயத்துடனே பேசுவார்கள்.
அவர்கள் பயத்தை போக்க அவர்கள் விழித்திருக்கும் போது  எவ்வளவு சொன்னாலும் மன தில் பதியாது. ஆகையால் அவர்கள் தூங்கியவுடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு கையை பிடித்துகொண்டோ தலையை லேசாக வருடிய வரோ உங்கள் எண்ணங்களை கூறுங்கள். காட்டாயம் அது மனதில் பதியும். கிருஷணர் சுபத்திரை வயிற்றில் அபிமன்யு இருந்தபோது தன சக்ரவியுகம் அமைக்கும் முறையை சொல்லிக்கொண்டே வந்தாராம். பாதி தூக்கத்தில் சுபத்திரை   எழுந்துவிட்டதால் வியுகத்திளிருந்து வெளிவர சொல் லிகொடுக்க சூழ்நிலை உருவாகாததால்தான் அபிமன்யு தோல்வியை தழுவினாராம்பிரகலாதன் தாய் சிறந்த விஷ்ணு  பக்தி அதனால் தான் பிறக்கும்போதே விஷ்ணு பக்தனாக பிறந்தான் தூங்கும்போதும் உள்மனம் விழித்திருக்குமாம்
பிள்ளைகள் என்று இல்லை எந்த வயதினருக்கும்நோயால் வாடுபவர்களுக்கும் பணியில் சொர்வுற்றிருப்பவர்களும் நாம் சொல்லும் தைரிய வார்த்தைகள் நன்கு மனதில் பதிந்துநல்ல பலனை கொடுக்கும்  தூங்கும் போது அவர்கள் கையை பற்றிக்கொண்டோ தலையை வருகொண்டோ தைரியம் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும் 

Tuesday, March 5, 2013

தினமலரிலிருந்து  கொல்லம் மாவட்டம் சாசதாம் கோட்டை என்ற சிற்றூரில் நியாவில கடை விற்பனையாளர் மநு  என்னும் வாலிபர் வாயில் குண்டூசியை வைத்தபடி நண்பருடன் சிரித்து பேசிய பொது குண்டூசியை விழுங்கிவிட்டார்  வழியால் துடித்தார்.  உள்ளூர் மருத்துவமனை சிகிச்சை பெற முடியாமல் கொல்லம் மர்டுத்துவ மனைக்கு சென்றார். அங்கு xray  எடுத்து பார்த்ததில் இரைப்பையில் குண்டூசி குத்தி நிற்பதால் அறுவை சிகிச்சை திருவனந்தபுரம் சென்றால் தான் முடியும் என்றார்கள். அன்று இரவே பெற்றோர் அழைத்து சென்றார்கள்.
மறுநாள் காலை 6 மணிக்கு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்தபோது தந்தையிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.  மருத்துவரை கேட்டு கொண்டு தேநீர் வங்கி கொடுத்தார். சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் இருமினார். வயிற்றிலிருந்த குண்டூசி வெளியே வந்து விழுந்தது. பெற்றோர் மற்றும் டாக்டர்கள் நண்பர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மனு கண்ணீர்மல்க இறைவனுக்கு நன்றி கூறினார். இதுவல்லவோ தெய்வச்செயல் 

Thursday, February 28, 2013

இந்தவாரம் குமுதம் இதழில் பட்டுகோ ட்டை பிரபாகரன் தன குறுநாவலில் கூறுகிறார் எது நடந்தாலும் ஏற்கும் பக்குவம் எ தையும் எதிர்பார்க்காத மனநிலையும் மரணம் பற்றிய பயமும் இல்லாதவர்களுக்கு கடவுள் ஒரு அவசியமற்ற ஆசாமி இது அவருடைய கதாநாயகன் ஒரு போலீஸ்ஆபிசர் பேசும் பேச்சு. அதே ஆபிசரின் மனைவியும் மகளும் இருக்கும் ஒரு மாலில் குண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிந்ததும் கடவுளே எதுவும் நிகழ கூடாது சத்தியமாக உன்னை பிரார்த்திக்கிறேன் என்று கதறி அழுகிறாராம் . மனிதனால் ஒன்றுமே செய்ய முடியாத சூழல் வரும்போது கடுவுள் துனையை நாடியே தீருவான்.

Monday, February 25, 2013

நான் எழுதுவதை படிப்பவர்கள் எல்லாம் என்னைவிட வயதில் சின்னவர்கள் ல்தான் இருந்தாலும் எழுதுகிறேன்.
அறுபது வயதானால் மூலையிலுள்ள செல்கள் அழிய ஆரம்பிக்கின்றனவாம்.
அதனால்தான் கவனக்குறை மறதி.எதையும் புதிதாக கற்றுக்கொள்ள இயலாமை எல்லாம் என்கிறார்கள்.
புத்தியை தீட்டுவோம்.குறுக்கெழுத்து போட்டிகள் ஆறு வித்தியாசம் போன்றவற்றை அனுப்பாவிட்டாலும் எழுதி வைத்துக்கொண்டு நம் விடைகளை சரிபார்த்து மகிழ்வோம். sudaku  போட்டு ப்ழகுவோம்.முதுமையை விரட்டுவோம்.


.

Sunday, February 17, 2013

இளம் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு தேர்வுகள் ஆரம்பித்துவிடும். இன்னும் இரண்டு மாத ங்களுக்கு அவர்களுக்கும் ஓயவில்லை உங்களுக்கும் தூக்கம் இல்லை,
தேர்வுகள் முடிந்ததும் அவர்களை எந்த கோடை விடுமுறை வகுப்பில் சேர்க்கலாம் என்று திட்ட மிதாதீர்கள்.
வழக்கமாக எல்லோரும் கூறுவதுதான் நான் ஒன்றும் புதிதாக கூறப்போவதில்லை.
இரண்டுமாதங்கள் குழந்தைகள் மகிழ்வுடனும் ஓய்வாகவும் இருக்கத்தான் விடுமுறை. இந்த ரெண்டு மாதம்  சொல்லி தரும் ஒரு மொழியோ ஒரு கலையோ ஒன்றும் உபயோகப்படுவதில்லை. அவர்களை உங்கள் சொந்த ஊருக்கு பெற்றோர் அல்லது உறவினர் இருக்கும் ஊருக்கு அழைத்துசெல்லுங்கள்
படங்களில் பார்த்த மிருகங்களைடிவிஎஸ்  50 வந்தது கழு தை காணாமல் போயிற்று  ஆட்டோ வந்தது மாட்டுவண்டி குதிரைவண்டி மறைந்து போயிற்று பேக்கட் பால் வந்தது பசுமாடு காணோம்tractor வந்தது எருதைக்கா னோம். இப்படி எத்தனை எத்தனை காணோ மகள்.
கொ டியில் பாம்பு போல் தொங்கும் புடலை  தாரா க தொங்கும் வாழை
குலை குலையாக  காய்த்திருக்கும் தென்னை  இவற்றை எல்லாம் உங்கள் குழநதிகள் அதிசயமாக பார்ப்பார்கள்.
அதோடு பேரப்பிள்ளைகளை கண்டதும் உங்கள் அம்மா செய்து தரும் ஆப்பம் குழை புட்டு பணியாரம் நாட்டுக்கோழி குழம்பு புது சா பிடித்த மீன் குழம்பு
ம் நீங்களும் ரசித்து சாப்பிடுங்கள்.
பக்கத்தில் உள்ள வயல் வெளிக்கு போய்  பம்ப் செட்டில் ஆசை தீர குளியுங்கள் கட்டு சாதத்தை ருசித்து விட்டு மாலை வரை ஓடியாடி விளையாடுங்கள். வஞ்சனையின்றி ரெண்டு தாத்த வீட்டிலும் பதினைந்து நாட்கள் இருக்கட்டும் கடைசி 15 நாட்கள் நகர்புறத்து கேளிக்கைகளையும் காட்டுங்கள். இந்த இரண்டு மாத கொண்டாட்டம் அடுத்த பத்து மாதங்களுக்கு தாங்கும். அதுத்த விடுமுறை எப்போது வரும் என்று மனது எங்கும் உங்களுக்கு  ம்தான். வேலைக்கு போகுக் பெற்றொர இப்போதே உங்களுக்கு 15 விடுமுறை சொல்லி விடும்கள். உங்கள் குழந்தைகளின் பேச்சுக்கள் சாகசங்கள் எல்லாவறதிரையும் உங்கள் பெற்றோரும் ஊர் மக்களும் வாய் பிளந்து பார்க்க வேண்டாமா.



Friday, February 15, 2013

ஆங்கில அகராதியில் புகழ் பெற்றது ஆக்ச்போர்ட் கலாசாலை தொகுத்துள்ள அகராதி தான் என்பது எல்லோரும் அறிந்த செய்தியே
அதன் பின்னணியில் மகத்தான அதிசயிக்க தக்க ஒர் உண்மை அடங்கி உள்ளதாம்
ஜேம்ஸ் முர்ரே என்பவர் அகராதியை  உருவாக்கி கொண்டு இருந்தபோது
ஒரு நபரிடமிருந்து ஆக்கபூர்வமான அருமையான கருத்துக்கள் தினமும் வந்தவண்ணமிருந்தன.
முர்ரே அந்த அறிவாளியை நேர்ல் சம்தித்துநன்றி கூற விரும்பினார். அவரோ தான் உட ல் நலமின்றி இருப்பதால் பயணம் செய்து வர இயலாது என்று தன விலாசத்தை கூறி நேரில் வந்தால் சந்தி க்க ஆர்வமுடன் இருப்பதா கம் கூறி இருந்தார்
முர்றேவும் குறிப்பிட்ட விலாசத்திற்கு நேரில் சென்றார். அது ஒரு மனநோயாக்ளிகள் காப்பகம் என்றும் அந்த குறிப்பிட்ட நபர் மினார்ஸ் என்பவர் குநமடைந்து  வரும் ஒரு மன நோயாளி என்றும் கூறி அவரிடம் அழைத்து சென்றார்கள்.படிப்பதில் அவருக்கிருந்த ஆர்வமரிந்து நிறைய புத்தகங்களை வழங்கினார்கள் .அகராதி தயாராகும் செய்தி அறிந்து அவர் மனம் ஒரு பரபரப்பையும் மகிழிச்சியும் உண்டாகி உங்களுக்கு  பல யோசனைகள் கூறி கடிதம் போட  ஆரம்பித்தார் . நாங்களும் அலட்சியப்படுத்தாமல் உங்களுக்கு அனுப்பி வைத்தோம் என்றார்கள். இரு மாமேதை களுக்கிடையேயான   சந்திப்பு நீண்ட நேரம் நடந்த்தது பிறகு அவர்கள் சந்திக்கவே இல்லை.மினார்ஸ் மனநலம் தெளிந்து வாழ்நாள் முமுழுதும் த்யானத்தில் ஈடு பட்டார்.

Wednesday, February 13, 2013

நேற்று நானும்தான் கமலஹசனின் விஸ்வரூபம் பார்த்தேன் கமலின் தீவிர ரசிகை நான். இருந்தும் ஒரு உண்மையை சொல்லியே ஆகவேண்டு.ம்
கமலின் ரசிகர்களில் 25 விழுக்காடு ரசிகர்களையே திருப்திப்படுத்தும் அதுவும் ஹாலிவுட் படங்களை பார்க்கும் படித்தவர்கள் தான் அவற்றுடன் இதை ஒப்பிட்டு அஹா ஓஹோ  என்று பாராட்டமுடியும். நாயகனிலும் தேவர்மகனிலும் பார்க்காத நடிப்பா சலங்கை ஒழி யில் ஆடாத ஆட்டமா.
பக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை வைத்துக்கொண்டுதான்  படம் பார்க்க வேண்டும்போல் உள்ளதுகதை யிலும் என்ன புதுமையா கிடையாது
பாவம் கமலை பாராட்டி மறுபடி ஏகத்துக்கு நஷ்டப்படவைக்காதீர்கள். கமலிடமிறந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பததெல்லாம் மிகைப்படுத்தாத நடிப்பு ஒன்றே. 

Tuesday, February 12, 2013

ஒரு முதியவர் தினமும் மதியவேளையில் இரண்டு குழந்தைகளுக்கு உணவு அளித்துவந்தார்.
 ஒரு நாள் சரியான குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை. முதியவருக்கோ வேறு வேலைகள் காத்திருந்தன. இருந்தும் குழந்தைகள் ஏமாற்றமடய்ந்து விடுமே என்று காத்திருந்தார். அந்த எட்டு வயது சிறுமி மூன்று மூன்று வயது பையனை  இடுப்பில் சுமந்து வந்தாள் வரும் வழியில் சிறுவன் காலில் முள் குத்தி நடக்க முடியாமல் போனதாகவும் அவனை தூக்கி கொண்டு  நடந்து வர தாமதமாகி விட்டதென்றும் மன்னிப்பு கேட்டாள் முதியவர் நீயோ சின்ன பெண் அவனை தூக்குவது பளுவாக  இல்லையா என்று கேட்டார். சட்டென்று அவன் என் தம்பியாயச்சே  என்று கூறி அச்சத்திநாள்
 இதைதான் கவியரசு பாடினார் மண்ணுக்கு மரம் பாரமா எகொடிக்கு காய் பாரமா என்று 

Monday, February 11, 2013

என் பேரன் அஸ்வத்துக்கு ஏழு வயதாக இருந்த பொது தெருவில் ஒரு கழைகூத்தை இருவரும் ரசித்து பார்த்தோம். ஒரு கம்பியின் மேல் ஆறு வயது பெண்  தலைமீது ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று கப் சாசர்களை ஏந்தி ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு நடந்து சென்று எல்லோர் பாராட்டையும் பெற்றாள்  கீழே இறங்கி வந்து காசு வசூலிக்க  ஆரம்பித்தால், நானும் கையில் பத்து ருபாய் வைத்து காத்திருந்தேன். என் பேரன் அதை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு அருகில் உள்ள கடைக்கு போ ய் இரண்டு கேக்குகளை வாங்கி வந்து அந்த குழந்தையிடம் சாப்பிடு பாப்பா என்று தந்தான், அந்த குழந்தை முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி. சாரி பாட்டி அந்த ரூபாயை தட்டில் போட்டிருந்தால் அந்த குழந்தைக்கு பத்து பைசா மணிலா பயறு கூட வாங்கி தருவானோ சந்தேகம் தான் அதனால் தான் உன்னிடம் கூட சொல்லாமல் செய்துவிட்டேன் என்றான். தகப்பன் சாமிகள் என்றும் உண்டு. அன்றுமுதல் குழந்தையுடன் பிச்சை கேட்பவர்களுக்கு ஒரு பன்னோ பாலோ வாங்கித்தருவேன் காசு கொடுப்பதில்லை 
எங்கயோ படித்தவை
உங்கள் குழந்தைகளுக்கு உணவை உண்பதற்குமுன் அதை அளித்தகடவுளுக்கு நப்ற்றி சொல்வதுடன் அதை உண்ணுவதற்கு பசியையும் அளித்தமைக்கு நன்றி கூற பழகுங்கள். ஏனென்றால் பசி இருப்பவனுக்கு வேலைக்கு உணவு கிடைப்பதில்லை. பல்சுவை உணவுகள் உன்ன வசதி படைத்தவனுக்கு பசி எடுப்பத்தில்லை. இரண்டும் பெற்றவன் பெரிய பாக்ய சாலி அல்லவா.

ஓய்வு என்பது கைகாலை நீட்டி படுப்பது தான் இல்லை. ஒரு வேலை தொடர்சியாகசெய் வதிலிருந்தி அதை விட கொஞ்சம் எளிமையான வேலைக்கு மாறினாலே ஓய்வுதான்.
பெரிய பொறுப்பான பதவி வகிப்பவர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு நஅங்கு மணி நேரம் தூங்காமல் உழைக்கிறார்கள்.


Sunday, February 10, 2013



  • inspiration என்ற வார்த்தைக்கு தூண்டுகோல் அல்லது முன்னுதாரணம் என்று எண்ணு கிறேன் லிப்கோ கையகராதியில் பார்த்தால் உள்ளுணர்வு ஆதமவலர்ச்சி என்று ஏதேதோ போட்டுள்ளது.
    நமக்கு பெரிய ஆட்கள் தான் inspiration ஆகா இருக்க வேண்டு என்ற அவசியமில்லை
    என்னுடைய 73வது வயதில் கொஞ்சம் சோர்வாக எண்ணினால் உடனே என் மாமியாரை நினைத்துக்கொள்வேன் 86வயதிலும் அடுப்படியில் புகுந்து அருமையாக் சமைப்பார்கள். தன்னக்கு வேநீர்வைது எடுத்து ஊற்றிக்கொண்டு குளிப்பார்கள். துணிக்கு சோப்பு போட்டு ஊறவைப்பார்கள் அதையல்லாம் எண்ணிக்கொண்டு நமக்கு என்ன 73 வயதில் சோர்வு என உடனே எழுந்து சுருசுருப்பாகிவிடுவேன்.
    எங்கள் வீட்டிலிருந்து பெருமாள் கோயில் சிறிது தொலைவுதான். போகும்போது விரைவாக போய்விடுவேன். திரும்பும்போது சற்று தளர்வாக உணர்வேன். அங்குகோயிலுக்கு பக்க த்தில் என் வயது மூதாட்டி ஒருவர இட்லி வியாபாரம் செய்கிறார். ஒரு மூதாட்டி இடுப்பில் கூடையில் காய்கறி சுமந்துகொண்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் விற்கிறார்.
    அவர்கள் இருவரையும் பார்த்ததும் கடவுள் நம்மை எவ்வளவு வசதியுடனும் ஆரோஞமாகவும் வைத்திருக்கிறார். இன்னும் குறைந்த பட்சம் பத்தாண்டுகளாவது வேலை செய்யவேண்டும் என்று எண்ணிக்கொள்வேன்.
    Like ·  ·  · Promote · 4 minutes ago · 
என் எஸ் கிருஷ்ணன் வாழ்க்கையில் நடந்த வேறொரு சம்பவம்
 கலைவாணர் ரஷ்யா சென்றிருந்தபோது மொழிப்ப்ரச்னை. உணவகத்தில் உள்ளோருக்கு ஆங்கிலம் தெரியாது. கலைவானரும் நண்பரும் தெரியாத பொருள் எதை கேட்டு சாபிடுவது பேசாமல் கோழிமுட்டைகள் வாங்கி சாப்பிட்டு சற்றே வயிறு நிரப்பலாம் என்று சைகையில் சொல்லி புரிய வைக்க பார்த்தார்கள். முட்டை தவிர ஏதேதோ கொண்டு காட்டு  கிரான் உடனே கலைவாணருக்கு ஒரு ஐடியா தோன்றியது நண்பரிடமிருந்த பேனாவையும்
தாளையும் வாங்கி ஒரு கோழி படம் போட்டு பக்கத்தில் நன்கு முட்டைகள் படம் போட்டு காண்பித்தார் அடுத்த ரெண்டாவது நிமிடம் முட்டைகள் வந்து சேர்ந்தன. படிப்பறிவு என்பது வேறு பொது அறிவு என்பது பிறப்போடு வருவது.
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.
ஒரு நாள் அவர் நண்பருடன் அவர் வீட்டு முகப்பில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ஒரு வயதான மூதாட்டியும் ஒரு இளம் கர்ப்பிணி பெண்ணும் வந்தார்கள். அந்த பெண்ணுக்கு நிறை மாதம் என்றும் ஏ தாவது பொருள் உதவி செய்யுமாறும் கெஞ்சி கேட்டார்கள். ஐந்து நிமிடங்கள் சென்றதும் இருபது ரூபாய் தந்தார் அந்தகாலத்தில் இருபதுரூபை என்பது பெரிய தொகை. ரொம்ப மகிழ்வோடு இருவரும் வணக்கம் சொல்லி கிளம்ப இருக்கும்போது ஏனம்மா பணம் கொடுத்து விட்டேனே இடுப்பில் சுற்றியுள்ள தலையணையை அவிழ்த்துவிட்டு நிம்மதியாக போ என்றார். இரண்டு பெரும் நாடு நடுங்கி அவர் காலில் விழுந்து மன்னிப்புகேட்டு விட்டு இடுப்பில் இருந்த துநிமூரையை அவிழ்த்தார்கள். நண்பர் அ வர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்தும் இவ்வளவு  நேரம் பேசிவிட்டு பணமும் கொடுக்கிறீர்களே என்று கேட்டார். அவர்கள் நடிப்பை கொஞ்ச நேரம் ரசித்தேன். அவர்களை பாராட்டி பரிசளிக்கவில்லை என்றால் நான் கலைஞனே அல்ல .என்றார்.

Wednesday, February 6, 2013

மனிதன் தன்னுடைய அறுபது வயதுவரை நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட நேரமில்லை. ரசித்து ஓரி பாட்டையோ கேட்க நேரமில்லை
ஒரு படத்தையோ இயற்க்கை காட்சியையோ பார்க்க நேரம்ல்லை.
ஓடியட்டி உழைத்த கால்களுக்கோ நாலு இடம் செல்ல வலுவில்லை.
காது மந்தமாகி விடுகிறது கண் பார்வை குறைந்து விடுகிறது நடையில் தள்ளாட்டம் வந்துவிடுகிறது
ஆனால்  இந்த நாக்கு மட்டும் கூர்மையாகி விடுகிறது.
உடம்புக்கு ஒத்துகொள்ளது எனதெரிந்தும் ஆசைப்படுகிறது  நம் பேச்சு
எடுபடாது என தெரிந்தும் பேச துடிக்கிறது.
அந்த நாக்கை மட்டும் அடக்கி வாழ்ந்தால் கவாழ்க்கை இன்பமே.

Saturday, February 2, 2013

அதோ அந்த மரம் வெட்டுப்பட்ட அடையாலங் களோடு நிற்கிறது எங்கலை ய்ப்போல
அருகில் நட்ட கன்றுகள் செழித்து வளருகின்றன உங்களைப்போல
மரம் ஒரு பெருங்காற்றை எதிர்பார்த்திருக்கிறது கன்றுகள் மேல் பூமாரிப்பொழிய

அடுப்பு என்னவோ அதே அளவில் தான் உள்ளது
அடுப்பின்மேல் வைக்கும் பாத்திரங்கள்தான் நல்லுக்கு நாள் இலட்துவருகின்றன














எங்கேயோ படித்தவை
சீனாக்காரனின் கண்டுபிடுப்புகளியே மிகச்சிறந்தது கொசு பேட் மட்டுமே. அதுவோன்றால்தான் கொசுவைகொல் ல் முடிகிறது.

Thursday, January 31, 2013

குமுதம் ச்நேஹிதியில் விவாத மேடையில் இன்றைய காலகட்டத்தில் வரதச்ட்சினை முறை சரியா தவறா.
சென்ற தலைமுறையை சேர்ந்த்த 73 வயது வாசகி நான். அன்றும் சரி இன்றும் சரி பெண்ணுக்கு நகைகள் சீரர் செனத்தி என்று செய்வதை வெறுப்பவள். இருந்தாலும் ஒரு விஷயம் சிந்திக்க வேண்டி உள்ளது 
வரதட்சினை வாங்காமல் திருமணம் செய்து கொள்பவர்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு சொந்த வீடு வாங்க பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்க்க என்ற பண உதவி தேவை படும்போது நம் மகளை குத்தல் பேச்சு பேச ஆரம்பித்துவிடுவார்கள் அங்கு படும் அவதி போருக்க முடியாமல் தாய் வீடு வந்தால் அவளை பார்த்துக்கொள்ள வயதான தாய் தகப்பனால் முடியுமா. அண்ணன் தம்பிதான் எவ்வளவு நாளைக்கு தாங்குவார்கள். நீ வழாவெட்டியாக  இருப்பதால் தங்கை தம்பி தங்கிதிருமனகள் தட்டி போகின்றன என்று சமாதானம் சொல்லி மம்யார் வீட்டுக்கே திருப்பி அனுப்புவார்கள். அந்த பெண் அங்கேயும் வாழமுடியாமல் இங்கேயும் ஆதரவு இன்றி தவறான முடிவுக்கு வருவாள். அவளுக்கென்று போட்ட நகைகளோ பனமூஇருந்தால் அவள் திறமைக்கு ஏற்ற்ற வாறு வாழ்கையை அமித்து கொள்ளலாம். அதனால் இந்த காலகட்டத்திலும் வரதட்சினை கொடுப்பது அவசியமே.

Wednesday, January 30, 2013

குமுதம் ச்நேஹிதி   திருமணத்துக்கு முந்தைய காதலை சொல்லலாமா காதல் என்பது உங்கள் இதயத்துக்கும் உங்கள் காதலர் இதயத்துக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் அல்ல நீங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டு இருக்கலாம் சினிமா பார்க் பீச் என்று சேர்ந்தது சென்றிருக்கலாம். இவையெல்லாம் உங்கள் நண்பர் அல்லது உறவினர் வட்டாரத்துக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை ஏதோ சூழ்நிலையில் உங்கள் காதல் நிறைவேறாமல் போகலாம் இப்போதுதான் பெண் பார்க்க வரும்போதே பெண்ணையும் பிள்ளையும் பேச அனுமதிக்கிறார்களே. அப்போது உங்கள் காதலைப்பற்றி சொல்லி விட்டு அவருக்கு சம்மதம் என்றால் மேற்கொண்டு திருமணம் பற்றி பேசலாம் இல்லையெனில் வேறு ஏதாவது கரணம் சொல்லி உங்களை நிராகரிக்கும்படி தயவுடன் கேட்டுகொல்லுங்கள் இந்த நேர்மைக்ககவே உங்களை ஒருவர் ஏற்றுக்கொள்ள முன் வருவார். அதுவரை பொறுமை காப்பதே புத்திசாலித்தனம். 
நான் எழுதி குமுதம் ச்நேஹிதியில் விவாதமேடையல்  இடம்  பெற்ற வை.
பெற்றோரை கவனிக்காமல் விட்டு விடும் பிள்ளைகளை சட்டத்தின் மூலம் தண்ட நை வாங்கி கொடுத்து பெற்றோரை பராமரிக்க சொல்லலாமா தானாக கனியாத பழத்தை தடிகொண்டு கனிய வைத்தால் என்ன ஆகும் அந்த கதிதான் தண்டனை தந்து பெற்றோரை கவனிக்க சொன்னால் பெற்றோருக்கு ஏற்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் பெற்றோர் தான் ரோல் மாடல் நம் பெற்றோரை நம் குழந்தைகள் முன்னால் அன்புடன் நடத்த வேண்டும் நம்மைப்பார்த்து நம் பிள்ளைகள் நம் வயதான காலத்தில் நமக்கு திருப்பி அன்பை செலுத்துவார்கள்
தண்டனைக்கு பதில் பிள்ளைகளிடமிருந்து ஒரு தொகச்யை மதாமாதம் பெற்றுக்கொண்டு அரசே ஒரு முதிர் இல்லம் நடத்தலாமே 
உண்மையான தெய்வபக்தி.
ஓரூ அரசன் தன்னுடையா   காவலன் ஒருவனுடன் வேட்டைக்கு சென்றார்.
காட்டில் பெகு தூரம் சென்று விட்டார்கள். பசிமயக்கம் இருவருக்கும் கண்ணை இருட்டியது  ஓரிடத்தில் உட்கார்ந்தா ர்கள்.
வெகு தொலைவில் ஒரு குடிசை இருந்தது தெரிந்தது.
காவலாளி நான் அங்கு போய் ஏதாவது உணவுபெற்று வருகிறேன் என்றான் அதற்க்கு அரசர் நீ போனால் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். என்னைபார்ததால் ஏதாவது தருவார்கள். நீ பேசாமல் மரத்தடியில் படுத்து இளைப்பாறு என்று சொன்னார். காவலன் நாராயண என்று கூறி துண்டை உதறி போட்டு படுக்க முனைந்தான்.அடே மூடா உனக்கு நாராயணனா உவவு தரப்போகிறான் என்ற கேலியாகச கேட்டு விட்டு சென்றார். குடிசையில் இருந்தவர்கள் மன்னருக்கு வயிறார உணவு கொடுத்து மீதம் இருந்ததை கட்டி கொடுத்தார்கள். அரசன் காவலாளியை எழுப்பி இந்தாடா உன் நாராயணன் உனக்கு உணவு தந்தார் நான் தானே தந்தேன் இனியாவது நாராயணனை நம்புவதைவிடு என்றார். அதைகேட்டு காவலன் கலகல என சிரித்தான். என்ட சிரிக்கிராஇஎன்ட்ரு அரசர் கேட்டார். அரசரண் நீப்கள் உணவு இருக்குமிடம் பொய் கேட்டுவாங்கி சாப்பிட்டீர்கள் .அனால் எனக்கோ அரசரையே தன கயல் உணவு கொண்டு வந்து கொடுக்க வைத்து விட்டார் நாராயணன். அவர் கருணையை எண்ணி சிரித்தேன் என்றான்  அரசரும் தன தவறை உணர்ந்தார்.
குமுதம் அரசு கூறுகிறார்.
அந்த நூலைப்பற்றி ரஜினி ஸ்டைலில் சொன்னால் அந்த ஒரு புத்தகத்தை படித்தாலே நூறு புத்தகங்கள் படித்த திருப்தி உங்களுக்கு கிட்டும் சரித்திர விழயங்கள் புராணக்கதைகள் சம கால அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் குட்டி கதைகள் வெளிநாட்டு விஷயங்கள் அறிவியல் போர்த்தந்திரங்கள் தன்னம்பிக்கை என்று உங்களுக்கு எந்த சப்ஜெகட் பிடிக்குமோ அதைப்பற்றி இந்த புத்தகத்தில் இருக்கிறது. ஆண்டு த்தேர்வுக்கு படக்கும் மாணவன் போல் மிக உன்னிப்பாக மூன்று மணி நேரத்துக்குள் படித்து முடித்தேன். அந்தப்புத்தகத்தின் பெயர் போர்த்தொழில் பழகு. எழுதியவர் வே. இறையன்பு ஐ ஏ எஸ் .

Monday, January 28, 2013

இது என்ன நியாயம்?   மனிதன் வேண்டாமென விட்டுவிட்ட வைக்கோலை தின்றும் அரிசியை நன்றாக கழுவி எடுத்துகூண்டு கீழே கொட்டும் கழுநீரை குடித்தும் எண்ணையை எதுத்து விட்டு சக்கை என வீசும் புண்ணாக்கை தின்றும் தன கன்று என்று தரும் சத்தான பாலை சுய நலம் மிக்க மனிதன் முக்கல் வாசி கறந்துகொண்டு கால்வாசி கன்ற்டுக்க்ர்நற்று விடுகிறானே இது என்ன கொடுமை. பசுவுக்கு கடவுள் தந்த சாபமா மனிதனுக்கு தந்த வரமா?


பந்திக்கு முந்திக்கொள் என ஓடிபந்தியில் உட்காருமுன் மனிதா சற்றே சிந்தி.
இந்த அடம்பர விருந்திற்கு விருந்தளிப்பவன் கொடுத்த விலை என்ன?
நிலம் நீச்சை விற்று பல வருட சேமிப்பை கரைத்து ஒரு பெண்ணுக்கோ அல்லது மகனுக்கோ திருமணம் செய்கிறான்.

நாமோ முதல் பந்தியில் உட்கார்ந்து கொண்டு இந்தச் பண்டம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாம் இது தேவலாம் என்று விமர்சித்து விட்டு பாதி பண்டத்தை பழாகிவிட்டு எழுகிறோம்.
ஒரு வேலை சோற்றுக்காக தன்மானத்துடன் பிச்சை எடுக்காமல் கீரை விற்கும் கிழவியும் வெயிலில் கை வண்டீழுக்கும் கிழவரும் நாற்று நாடும் நிறைமாத கர்ப்பிணியும் நினைவில் வந்தால் விருந்தில் வாழை இல்லை தவிர எதையும் விட்டுவைக்க மாட்டோம்.
உலகத்தையே மாற்ற முடியாது உன்னால் உன் வரை மாரிக்கொள்
என்னைபொருத்தவரை பந்தியில் முதலில் பரிமாறப்படும் எல்லாவற்றையும் சாபிடுவதர்க்காக அடுத்து வேறு எதையும் சா தம் கூட வாங்கி கொள்ள மாட்டேன். 95% இலையை  காலிசெய்து விட்டு தான் எழுவேன். வீனா குப்பைக்கு போவது சத்திரத்தில் வேலை ஒவ்வொருவரும் அப்படி செய்ததால் குப்பைக்கு போகும் பொருள் சத்திரத்தில் வேலை செயபவர்கலாவது பகிர்ந்து உன்னட்டுமே 

Friday, January 18, 2013

வெகு நாட்களுக்கு பிறகு நான் மறுபடி உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்கிறேன்.