Tuesday, December 28, 2010

engayo paditthavai.

வாரமலர் கவிதை சோலையில் நான் ரசித்துப்படித்தது
வருத்தப்படவில்லை மகனே உன் சொல்லும் செயலும் நியாயமானது
உலகம் ஆயிரம் சொல்லட்டும உற்றார் உறவினர் எப்படியும் ஏசட்டும் கவலைப்படாதே
மனக்கசப்புடன் மருமகள் ஒட்டாத பேரன் பேத்திகள் இனியும் உழைக்க
ஒத்துழைக்காத உடம்பு
திண்ணையும் புல்தரையும் காணாமல் அகதியாய் அடுக்குமாடி குடியிருப்பில்
நகரத்து நரக வாழ்க்கை
இவை எதுவுமின்றி இப்போது நலமாய் இருக்கிறேன் மகனே உனக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்
 மழை வெயில் தெரியாத இருப்பிடம் வேளாவேளைக்கு உணவு வேலையின்றி அமைதியான ஒய்வு நல்லதொரு வயதான நட்பு வட்டம்
பொழுது போக பூஜை பஜனை தாராள மருத்துவம் இன்னும் என்ன குறை எனக்கு
நீ மட்டும் மாதம் ஒரு முறை குடும்பத்துடன் வந்து முகம் காடு உள்ளபடியே நான் மகிழ்வுடன் இருக்கிறேன் இந்த முதியோர் இல்லத்தில்.
எழுதியவர். சொல்கேளான் எ வி  கிரி சென்னை,
ஆசிரியருக்கு ரொம்பவும் ஆசைதான். வாரம் ஒருமுறை என்று எழுதி இருந்தார்.
பெண்டாட்டி பிள்ளைகூட கழிப்பதற்கே வார இறுதி போதாது. அதனால் நானாகவே மாதம் ஒருமுறை என மாற்றி விட்டேன்.

Monday, December 6, 2010

kutram paarkin sutram illai.

மனிதர்களாய் பிறந்த எவரும் நூறு சதவீதம் நல்லவர்களை இருக்க முடியாது. நெருங்கிய  உறவுகளை அவரர் இயல்புகளுடன்  அப்படியே ஏற்று  வாழ பழக வேண்டும். அதற்கு மிகுந்த பொறுமையும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையும் அவசியம் தேவை. உறவுகளுடனே விட்டுகொடுக்காமலோ வீம்பு பேசியோ குற்றம் கண்டுபிடிப்பதே வேலையாக ஒருவன் வாழ்ந்தால் அவன் எதிகாலத்தில் உயர் அதிகரிகளுடனோ உடன் வேலை செய்பவர்களுடனோ கீழ பணி புரிபவர்களுடனோ ஒத்து போக மாட்டான். இதனால் மிஞ்சுவது கேட்ட பெயரும் மன உளைச்சலும் தான். முதலில் தாய் தந்தை உடன் பிறப்புகள் உற்றார் உறவினஅருண் ஒத்துவாழ குழந்தைகளை பழக்குங்கள். பிறகு நன்பர்க அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அதே மனப்பான்மையுடன் வாழ பழுகுவான். வாழ்வில் பல வெற்றிகளை வாரி குவிப்பான்.

artthame verudhaan.

ஊரான் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன பிள்ளை தானே வளரும். வாரியார் கூறினார், மனைவி கர்ப்பமாக உள்ள போடு ஊரான் பிள்ளையாகிய அவளை நன்கு கவனித்து ஊட்டி வளர்த்தால் தன பிள்ளை அவள் கருவிலிருக்கும் அவனுடைய பிள்ளை தானாகவே நன்கு வளரும்.

artthame veru dhaan

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யனப்பெய்யும் மழை  இந்த குறளுக்கு பலரும் தெய்வத்தை தொழாமல் கணவனை மட்டுமே தொழும் மனைவி பெய் என சொன்னால் உடனே மழை பெய்யும் என்பதுதான். ஆனால் கலைஞர் தன குறளோவியத்தில் கூறுவது. விவசாயி ஆடி மாதம் நாற்று நட்டுவிட்டு ஆவணியில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி நிற்பான். அந்த நேரம் மழை பெய்தால் தான் அவன் விவசாயத்துக்கு உதவியாக இருக்கும். பெய்ய தவரிவிட்டலோ காலங்கடந்து பெய்தாலோ பெரும் நஷ்டமடய்வன். அதுபோல் கணவனுக்கு உரிய நேரத்தில் தகுந்த உதவிகளை மனைவி செய்தால் தான் வாழ்வு சிறக்கும் இதுவும் ஏற்புடைய பொருள்தானே.

Sunday, December 5, 2010

en abipiraayam

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு நகை சீர்வரிசை என தாய் வீட்டார் செய்யவேண்டும் என்ற நம் நாட்டு கொள்கையில் கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது. இரண்டு பேர் திருமணமான பிறகு இணைந்துவாழ போகிறோம். அதற்கு பெண்ணை பெற்றவர்கள் எதற்குநகை  பணம் திருமண செலவு என்று செய்யவேண்டும். உன் வீட்டில் . வசதி இல்லை அதனால் அப்படி நினைக்கிறாய் என்கிறார்கள். வசதி உள்ள தாய் தகப்பன் மகளுக்கு திருமண அன்பளிப்பாக எதுவேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் மணமகன் வீட்டார் அதை வற்புறுத்தி வாங்குவதை தான் மனதார வெறுக்கிறேன், ஆண் வேலையில் உழைக்கிறான். பெண் வீட்டில் அதைவிட அதிகமாக உழைத்து குடும்பத்தை உருவாக்குகிறாள்  உன்னுடைய வாரிசை சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்குவதற்கு ஆண் மகன் அல்லவோ பெண்ணுக்கு நன்றி சொல்லவேண்டும். அதனால் தான் அந்த நாச்ட்க்களில் பரிசம் போடுவதென்று பெண்ணை பெற்று வளர்த்து தரும் வீட்டுக்கு பணம் கொடுத்து மணமுடித்தார்கள் இடையில் வந்த வழக்கம் தான் பெண் வீட்டாரிடம் நகை சீர் வரிசை என பிடுங்குவது.எனனை பொறுத்தவரை திருமணமாகி 45 வருடங்களில் ஒரு சிறு துரும்பு கூட தாய் வீட்டிலிருந்து கேட்டு பெற்றத்தில்லை. திருமணத்தின் போது செய்த சீர்வரிசைகளை பெற்றுகொண்டேன். பிறகு ஆறு குழந்தைகளை வளர்த்து நன்கு படிக்க வைத்தோம். இரண்டு பெண்களை மணமுடித்து கொடுத்தோம். தாய் வீட்டில் வசதியாக இருந்தும் கடனாக கூட ஒரு பைசா யாரிடமும் பெற்றதில்லை. அந்த விழயத்தில் நான் தீர்மான மான முடிவோடு இருந்தேன், சிக்கனமாக குடும்பம் நடத்தினோம். பெற்றோர் கஷ்டம் தெரிந்த பிள்ளைகள் ஒரு தொல்லையும் தராமல் மணியாக  படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்தது உள்ளார்கள். நாங்கள் செய்த தவப்பயன் இரண்டு மருமகன்களும் எதுவும் நாங்கள மனமுவது செய்த சீர்வரசைகளை ஏற்று இன்றுவரை எங்களை தங்கள் பெற்றோர் போல் அன்பு பாராட்டுகிறார்கள். நங்கள் நாலு பில்லைகல்லுக்கும் மனம் முடித்த போது பெண் வீட்டாரிடம் உங்கள் விருப்பம் போல் உங்கள் பெண்ணுக்கு செய்யுங்கள்   சொல்லிவிட்டோம். அதனால் நான்கு மருமகள்களும் எங்கள் மேல் நல்ல பாசம் கட்டிவருகிறார்கள். பிள்ளைகளை படிக்கவைத்த போது செலவு சமாளிக்க முடியாமல் என் கணவர் திணறுவார். என் தாய் வீட்டில் போட்ட நகைகள் எதற்கு உள்ளன. விற்று படிப்பு செலவை சமாளிப்போம் என்று தைரியம் சொல்லி எல்லா நகைகள் வெள்ளி சாமான்கள் அனைத்தையும் விற்று படிக்க வைத்தோம். பெரிய பிள்ளை வேலைக்கு போனது என் அண்ணனிடம் தைரியமாக கடன் வாங்கி திருமணம் முடித்து இரண்டு வருடங்களில் கடனை திருப்பி தந்தோம். எதற்கு இதை எல்லாம் எழுதுகிறேன் என்றால் படித்த எந்த ஆண் மகனும் தன பெண்டாட்டிக்கு சோறு போட்டு துணி எடுத்து கொடுத்து சம்பளம் வாங்காத வேலைக்காரி போல் நடத்த பெண் வீட்டாரிடம் கேட்க வெட்கப்பட வேண்டும்,

engayo paditthavai

சமயோசிதம் என்றால் என்ன?  ஒரு ஏழை விவசாயி ஒரு மைனரிடம் கடன் வாங்கி இருந்தான். திருப்பி கொடுக்க முடியவில்லை. கடனுக்கு பதிலாக பெண்ணை மணமுடித்து கொடுக்க சொன்னான். பெண்ணுக்கோ அவனை மணக்க விருப்பமில்லை. ஒரு கண்டிஷன் போட்டாள் ஒரு பையில் இரண்டு கற்களை போடுங்கள் கணங்களை மூடிக்கொண்டு  நான் வெள்ளைக்கல்லை எடுத்தால் உன்னை மணமுடிக்கிறேன் கருப்புல்கல்லை எடுத்தால் நீ எனனை விட்டுவிடவேண்டும் என்றாள் அதற்க்கு எல்லோரும் சம்மதித்தார்கள் அந்த பணக்காரன் இரண்டு  கர்க்கலுமே  வெள்ளையாக பையில் போட ஏற்பாடு செய்திருந்தான். இதை எப்படியோ அறிந்த அந்த பெண் கண்களை கட்டி கல்லை எடுக்க சொன்னதும் ஒரு கல்லை எடுத்து அருகில் இருந்த கிணற்றுக்குள் போட்டு விட்டாள். எல்லோரும் பதறி என்ன இப்படி செய்துவிட்டாய் என்றார்கள். பையில் உள்ள மற்றொரு கல் என்னவோ அதன்படி தீர்பளியுங்கள் என்றாள் பையில் வெள்ளைக்கல் இருந்ததால் அவள் எடுத்தது கருப்பு என தீர்மானித்து அவளை திருமணம்  செய்யாமல் விடுவித்தார்கள். அவள் எடுத்தாலே அதுதான் சமயோசித புத்தி

engeyo paditthavai

ஆரோக்யமான போட்டி வேண்டும்.வாலிக்கும் சுக்ரீவனுக்கும் கடும் போர் நடந்து கொண்டிருந்தது. இதை ராம லக்ஷ்மணர் பார்த்து கொண்டு இருந்தனர். லக்ஷ்மணன் ராமரிடம் "அண்ணா இவர்கள் சண்டைக்கு முடிவே இல்லையா என்று கேட்டான். உடனே ராமபிரான் "எல்லோரும் பரதனைபபோல் ஆகிவிட முடியுமா"என்றார். இதைக்கேட்டு லக்ஷ்மணன் கோபம் கொள்ளவில்லை. காட்டுக்கு உடன் வந்து கண்ணை இமை காப்பதுபோல் காக்கிறோம் நம்மைவிட்டு எங்கோ உள்ள பரதனை அண்ணன் புகழ்கிறாரே என்று எண்ணாமல் உடனே "அண்ணா நீங்கள் சொல்வது சர்டிதன். நீங்கள் இல்லாதபோது அயோத்தியை கட்டிக்காக்கும் பரதன் தான் உயர்ந்தவன் என்று சொன்னான். சகோதரர்கள், நண்பர்கள் அலுவலக பணியாளர்கள் தொழிலாளிகள் பொறாமை இன்றி இருந்துவிட்டால் சண்டை சச்ச்சரவுக்கே இதம் இல்லை. நம்மை சார்ந்தவர் யார் முன்னேறினாலும் அவரை பாராட்டுவதுடன் அவரை முன் மாதிரியாக கொண்டு முன்னேறவும் முயற்சிக்க வேண்டும்.

Saturday, October 30, 2010

new york trip

சொல்லிவிட்டு போய் விட்டான். எங்கு கேட்டாலும் படிகள் கிடையாது. என்று சொல்லி விட்டார்கள். பயம் என்று உச்சியிலே உட்கார்ந்திருக்கவா முடியும். லதாவின் கையை ஒரு கையிலும் உயிரை ஒரு கையிலுமாக பிடித்து கொண்டு இறங்கினேன்.
 நிதினை பார்பர் ஷாப்புக்கு அழைத்து போனோம்.இங்கு AIDs பயத்தினால் கத்தி போட்டு ப்ளேடு போட்டு மொட்டை அடிக்க மாட்டார்களாம். O என்று வைத்து மெஷினால் மொட்டை அடித்தார்கள். நம் ஊரில் மொட்டை போட்ட அன்று மாலையில் சொரசொரப்பாக தெரியுமே அப்படி இருந்தது. அன்று அந்த பெண்மணி இவனுக்காக என்று வந்தார்கள். அதனால் நாங்கள் வழக்கத்தை விட அதிக பணம் தர யோசித்திருந்தோம் நம்முடைய கலாச்சாரம் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டார்கள்   ஊரில் காண்பிக்க என்று வீடியோ எடுத்தோம். அதையெல்லாம் பார்த்து மிக மகிழ்ச்சி அடைந்து ஒரு டாலர் கூட வாங்கவில்லை.
சரியென்று அடுத்த இரண்டு நாளில் தேதிப்படி பிறந்த நாள். அன்றுகேக் வாங்கி கொடுத்தோம்.

Friday, October 29, 2010

new york trip

ராக் பெல்லேர் டவர் போய் பார்த்தோம். அது இரண்டு தெருக்களை முழுக்க ஆக்ரமித்து உள்ள ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். தெருவில் ஜனங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருப்பதை அமெரிக்காவில் இந்த ஒரு ஊரில்தான் பார்க்க முடியும். சிறிது நேரம் போக்குவரத்து போலீசார் கட்டுப்படுத்தினார்கள். என்ன ஆச்சர்யம் அலங்கரித்த மூன்று ரதங்கள். விநாயகர் அம்மன் கிருஷ்ணர் ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்ற கோஷம். இந்தியர்களும் அமெரிக்கர்களும் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி சென்றார்கள்.
               எங்கு போனாலும் escalateril  தான் செல்ல வேண்டும். இளங்கோ எனனை தைரியம் சொல்லி இறங்க சொல்லுவான். நான் எல்லாவற்றையும் கேட்டு தலையாட்டி விட்டு மேல் படியிலேயே நின்றுவிடுவேன். இளங்கோ இறங்கி விட்டு எனனை படிகள் வழியாகவே வரசொல்லுவான். அப்பா எனனை கோபித்து கொள்ளுவார். அதற்க்கு மனிதன் என்றால் ஏதாவது ஒன்றிற்கு பயம் இருக்க தான் செய்யும் வயதானவர் திட்டாதீர்கள் என்பான்,
                ஒரு வேடிக்கை சொல்ல விட்டு விட்டேன். trade center மேலே போக எனனை பக்கத்தில் இருந்த படிவழியாக வரச்சொல்லிவிட்டு எல்லோரும் மேலே போய் விட்டார்கள். நான் படிகளில் கால் வைத்ததும் எங்கிருந்தோ ஒரு பெண்மணி ஓடி வந்து இது அவசரகால தேவை மற்றும் அங்கு வேலை பார்பவர்களுக்கு தான். போடு மக்களுக்கு அனுமதி  கிடையாது என்று தடுக்கிறார். சிறிது நேரம் பயத்தில் தடுமாறி விட்டு ஏதோ எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எனக்கு escalator என்றால் பயம் என்னோடு வந்தவர்கள் எல்லாம் எனனை விட்டு போய் விட்டார்கள். நீங்கள்தான் தயவுசெய்து எனனை விடவேண்டும் என கேட்டேன். சிரித்து கொண்டே ஓல்ட் லேடி go on quickly என்று விட்டு விடடாள் திரும்பி வரும்போது லதாவை அம்மாவை படிவழியாக அழய்த்துவா என்று சொல்லி விட்டு

Monday, October 25, 2010

new york trip

அங்கு ஒரு ஸ்கை ரைட் இருந்தது.அதாவது நாற்காலியில் நாம் உட்கார்ந்து இருப்போம் ஆனால்ப்ளேனில் பறந்து நியூயார்க் நகர வீதிகளில் சுற்றி பார்ப்பது போன்று இருக்கும். பயம் ஒன்றும் இல்லை என்றார்கள். நான் புது இடத்தில் மயக்கம் லேசாக வந்தாலும் அனைவருக்கும் தொல்லை. என்று கூறி குழந்தையுடன் கீழேய உட்கார்ந்து விட்டேன்.  பஸ் பிடித்து அருகில் உள்ள ஒரு பார்க்கில் கொண்டுபோன மதிய உணவை சாப்பிட்டோம்.
   மறுபடி ரயிலேறி வேர்ல்ட் trade சென்டர்  போய் சேர்ந்தோம். அங்கு உச்சிக்கு போக  கட்டணம் செலுத்த வேண்டும்.இப்போதுதானே empire ஸ்டேட் பில்டிங் மீது இருந்து நியூயார்க் பார்த்தோம். மறுபடி செலவு எதற்கு என்றேன். ஆனால் இளங்கோ விடவில்லை. இதன் உச்சி 107 வது மாடி. பறந்து விரிந்த தளம். நூற்றுக்கணக்கான பேர் சுற்றிவந்து வீடியோ போட்டோ எடுப்பதும் திருவிழா கூட்டம்தான். அங்கிருந்து பார்த்தால் empire ஸ்டேட் பில்டிங்கும் லிபர்டி சிலையும் மற்ற கட்டிடங்களும் சிறியதாக தெரியும் ஆச்சர்யம். உலகத்தின் உச்சி என்றே ஆங்காங்கு குறிப்பிட்டு எழுதியுள்ளது. இளங்கோ யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.நான் அமெரிக்காவின் ஒரு கரையிலும் தம்பிகள் மறுகரையிலும் இருப்பதால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை பார்க்க முடிகிறது.
செப்டம்பர் முதல் தேதி முதலே நிறைய பேரை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். சிலருக்கு ஒருவாரம் லீவு கொடுத்து சம்பளம் பிடித்து கொண்டார்கள். அதுபற்றி நாங்கள் வருத்த மடைந்தோம். அமெரிக்காவை எல்லோரும் சுற்றி பார்த்தோம் சில காலம் படகு காரில் சவாரி சகல வசதிகலுடன்  வாழ்க்கை கடவுள் சில காலம் அளித்தார். மறுபடி திரம்ப பெற்றுக்கொண்டார் என எண்ணி இநதியா வந்து வேலை தேடிக்கொள்வோம். நீங்கள் கொஞ்சமும் கவலைபட்பாமல் அமெரிக்க பயணத்தை அனுபவியுங்கள் என்று மகன்கள் சொன்னார்கள். உச்சியில் நின்று போட்டோ எடுத்துகொண்டோம். கீழே வந்ததும் தயாராக இருந்தது, பணம் செலுத்தி வாங்கி கொண்டோம். 

Wednesday, October 20, 2010

Los Vegas Trip

ஜூன் மாதம் 15 தேதி காலை லாஸ் வேகாசுக்கு இரண்டு கார்களில் புறப்பட்டோம். பாண்டியன் குடும்பம் ஒரு காரிலும் மணிமாறன் குடும்பம் ஐரோ கர்ரிளுமாக கிளம்பினோம். அப்பா ஒரு பிள்ளை காரிலும் அம்மா ஒரு பிள்ளை காரிலும் சென்றோம். பேத்தி நந்திதா தாத்தாவை அவர்கள் காரில் அழைத்து கொண்டாள்.
லாஸ் ஏன்ஜெலேச்சிலிருந்து அதிக திருப்பங்கள் இல்லாத நேர் சாலைதான். ஆனால் மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த சாலை முன்னால் போகும் கார் தெரியாத அளவு சரிவான சாலை. பக்கத்திலேயே பெரிய லாரிகள் பக்கத்து லேனில் வரும்பொழுது பயமாக இருந்தது. ஆனால் பாண்டியனும் மணியும் அருமையாக கார் ஒட்டி வந்தார்கள்.
அமெரிக்காவில் அங்காங்கு தங்குமிடங்கள் அமைய்த்துவுள்ளர்கள். அதைப்பற்றிய அறிவிப்பு பலகை இரண்டு மைல் முன்னாடியே வந்துவிடும். கார் ஓட்டுபவர்கள் அதற்க்கு தகுந்தபடி ஓரசாலைக்கு ஒதுங்கி தங்குமிடத்தில் நிருத்தி கொள்வார்கள். ஒன்பது மணிக்கு ஒரு தங்குமிடத்தில் நிறுத்தி கையில் கொண்டு போன காலை ஆகாரத்தை சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.
லாஸ்வேகாஸ் நெருங்குவதற்கு சில மைல்கள் முன்பாகவே காசினோக்கள் கேளிக்கைகூடங்கள். வர ஆரம்பித்துவிட்டன. எப்போதும் குழந்தய்களை  பின் சீட்டில்  பெல்ட் போட்டு உட்கார வைக்கவேண்டும்  முதலில் நந்திதா அழுவலாம். இப்போது தானாகவே உட்கார்ந்து கொண்டு பெல்ட் அணிந்து கொள்கிறாள்.
சரியாக 12 மணிக்கு சென்று விட்டோம். ஏற்கனவே புக்  செய்த ஹோடேல்லுக்கு சென்று கொண்டு சென்ற மதிய உணவை உண்டுவிட்டு ஒரு மணிக்கு வெளியே சுற்ற கிளம்பி விட்டோம்.
நியூ ஜெர்சியிலிருந்து இளங்கோ பேசினான். அப்பா அம்மா வேண்டாம் என்பார்கள். வற்புறுத்தி ஸ்லாட் மெஷினில் விளையாட சொல்லுங்கள் என்றான். ஆளுக்கு 20 டாலருக்கு சில்லறை மாற்றி தனது விட்டார்கள். வார நாளாக இருக்கவே சுலபமாக இடம் கிடைத்தது வரிசை வரிசையாக ஸ்லாட் மெஷின்கள். ஒரு குவாட்டர் நாணயத்தை போட்டு விட்டு கைபிடியை சுற்ற வேண்டும். நிற்கும் இடத்துக்கு எற்றர்போல் பணம் சில்லரையாக கொட்டும். பெரும்பாலும் ஒன்றும் விழாது. சிலநேரம் ஒன்றுக்கு பத்து இருபது மடங்காக கலகலவென்று கொட்டும். எந்நேரமும்
காசு கலகலவென்று கொட்டும் சப்தமே ஒரு கவர்ச்சி தான். இன்னும் பலப்பல சூதாட்டங்கள். சீட்டுக்கட்டு.ரோல்லர் சுற்றுதல்.என பல உள்ளன.
எகிப்திய பிரமிடு போன்ற தோற்றத்தில் ஒரு பெரிய காசினோ. மண்டலே பே  என்ற பெரிய காசினோ அல்லடின் என்று காசினோ ஈபில் டவர் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு காசினோ. உள்ளே சென்றால். பிரமிப்பிலும் பயத்திலும் வாயடைத்து நின்றுவிட்டேன்.வானம் கீழே இறங்கி இரண்டு மாடி உயரத்தில் வந்துவிட்டது போன்று இருந்தது.
.

Sunday, October 17, 2010

New York Trip

காலையிலேயே எடிசன் ஸ்டேஷனில் காரை விட்டு விட்டு நியூ York க்கு ரயிலில் பத்துமணிக்கு போய்  சேர்ந்தோம்.  வெகு அருகிலேயே Empire State Building நடந்தே போய்விட்டோம். 86  மாடிகள் வரை லிப்ட் நான்குபுறமும் சுற்றிவந்து நியூ யார்க்கின் அழகை ரசித்து பார்க்கலாம். விண்ணை முட்டும் Sky Scrappers  என்னும் வானுயர்ந்த கட்டிடங்களை பார்த்தோம். கீழே தெருக்களும் கார்களும் கொலு பொம்மைகள்போல் தெரிந்தன.

Pollution control certtificate-New Jersey

இன்று புது காருக்கு ஆயில் மாற்றிவிட்டு போல்யுஷன்   கண்ட்ரோல் சர்டிபிகேட் வாங்க இளங்கோ சென்றான் உடன் நாங்களும் சென்றோம். உள்ளே நுழையுமுன்பே நம்வேலை முடிய எவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்று அறிவிப்பு தெரிவிக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் நாம் காத்திருப்பதோ அல்லது வேறுவேலை பார்க்க செல்வதோ செய்யலாம்.
காரில் உட்கார்ந்த இடத்திலேயே ஒட்டி சகல உறுப்புகளையும் சரியாக உள்ளனவா என்று பார்த்து விடுகிறார்கள். எல்லமே அரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது. இதே வேலைக்கு நம் நாட்டில் RTO ஆபீசுக்கு எத்தனை முறை போகவேண்டும் எவ்வளவு தண்டம் அழவேண்டும் என்று எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

Tuesday, October 12, 2010

New York Trip

அடுத்து Ferry  இல் பக்கத்தில்  உள்ள கட்டடத்திற்கு போனோம். ஆரம்ப காலத்தில் அதுதான் அமெரிக்காவின் நுழைவு வாயில் கப்பல்   மூலம் குடியேற வரும் பயணிகளுக்கு இமிக்ரேஷுன் ஆபீசாக இருந்தது. நாநூ று வருடங்களுக்கு முன் கையோடு காலோடு  பிழைக்க வந்த ஆண்களும் பெண்களும்  தான் இன்றைய அமெரிக்க கோடீஸ்வரர்கள். எந்த ஆண்டு எந்த நாட்டிலிருந்து எவ்வளவு பேர் வந்தார்கள் என்ற பட்டியலும் போட்டோக்களும் அவர்கள் கொண்டுவந்த பெட்டிகள் ஓலை பெட்டிகள் தோல் பெட்டிகள் எல்லாம் காட்சி பொருளாக உள்ளன. லிபர்ட்டி சிலை இருக்கும் இடம் முன்பு ஜெர்சி சிட்டி என்னும்  ஊர்தான் அதை நியூ யார்குடன் சேர்த்த பிறகு நியூ ஜெர்சி என்ற இடத்தை உருவாக்கி விட்டார்கள்.

New Jersy Trip

எடிசன் இல்லத்தில் எல்லா வசதிகளும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை பார்க்க
அதிசயமாக இருந்தது. டைனிங் ஹாலில் அவர்கள் விருந்துகளுக்கு உபயோகித்த விலையுயர்ந்த பீங்கான் தட்டுகளும்  குவளைகளும் புதிதுபோல் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
தற்போது அரசாங்கம் பராமரித்து வருகிறது. முதலில் எடிசன் கல்லறை  வேறு எங்கோ இருந்ததாம். நாற்பத்து நான்கு வருடங்கள் ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்தும் எடிசன் மறைவுக்கு பிறகு எடிசன் மனைவி  ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்று சில காலம் வாழ்ந்தாராம். அதுதான் அமெரிக்க கலாசாரம். நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அவருடைய கடைசி விருப்பத்தின்படி இருவர் கல்லறையும் அருகருகே அமையக்கவேண்டி எங்கயோ இருந்த எடிசன் உடலை மறுபடி இந்த தோட்டத்துக்கு கொண்டு வந்து அருகருகே கல்லறை அமைத்து உள்ளார்கள்.
   மறுநாள் உள்ளூர் பெருமாள் கோவிலுக்கு சென்றோம். உள்ளூர் என்றுதான் பெயர். 25 மைலுக்கு அப்பால் உள்ளது. அழகான கோவில், திருப்பதி பெருமாள் தாயார் போன்ற தோற்றம்  அங்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் தோசையும் காபியும் சாப்பிட்டோம். அருமையாக இருந்தது. சென்னையை நினைவூட்டியது.
மறுநாள் காலை மழை இல்லாவிட்டால் லிபர்ட்டி சிலை பார்க்க போகலாம் என திட்டம். லேசாக தூறிக்கொண்டு  இருந்தது. இளங்கோவிற்கு  தள்ளிப்போட இஷ்டம் இல்லை. ஏழரை மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டோம் ஒன்பது மணிக்கு போய் சேர்ந்தோம் அருகில் போனால் தான் சிலையின் பிரும்மாண்டம் புரிகிறது. 354 படிகள். படிவழியாக  ஏறி தலை உச்சிவரை போக விரும்புபவர்கள் ஒரு க்யு, சிலையின் பீடம் வரை போய் திரும்ப லிப்டுக்கு ஒரு க்யு, நான் நிதின்   வைத்துகொண்டு கீழேயே உட்கார்ந்து விட்டேன். பீடம் வரை அகல படிகள் மொத்தம் 192. சிலை உச்சிவரை லைட் ஹவுஸ் போல் சுழல் படிகள். எல்லோரும் பார்த்துவிட்டு பதினொன்றரை மணிக்கு திரும்பினார்கள். பிறகு நானும் அவரும் இளங்கோவும் லிப்ட் மூலம் பீடம் வரை போனோம். சிலையின் பீடத்தில் நின்று உச்சியை பார்த்தால் மேகத்தில் தலை இடித்திருப்பது போல் பிரம்மை. மேகம் ஓடும்போது சிலை ஆடுவதுபோல் பயங்கர உணர்வு. என்ன ஒரு அற்புதம். இதையெல்லாம் பார்க்க எங்களுக்கு பூர்வ ஜென்ம கொடுப்பினை என்று கட வுளுக்கு நன்றி சொல்கிறேன்.

New Jersy Trip

                   மருமகள் லதாவுக்கு ஆகஸ்ட் இருபது தேதிக்குதான் பிரசவம் எனவே எங்கள் மூத்த மகன் இளங்கோ நியூ ஜெர்ச்யில் உள்ள வீட்டுக்கு மே 23 தேதிபயணப்பட்டோம்.

                                                    மணியும் பாண்டியனும் விமான நிலையம் அழைத்து
சென்றார்கள். சரியாக இரவு  ஒன்றே முக்காலுக்கு விமானம் கிளம்பியது. ஜன்னலோர சீட் எனக்கு. விமானம் மேலே போகப்போக ஒரே ஒளிமயமாக காட்சியளித்தது. இன்னும்கொஞ்சம் மேலே போனதும் ஒரே நீல வானம் தான். ஜன்னல்களை மூடிவிட்டார்கள். அந்த இரண்டு மணிக்கு கூட இரவு உணவு சாப்பிட தந்தார்கள். விடியற்காலை என் கடிகாரத்தில் மூன்றரை மணிக்கு  தொலைவில் நீல வான ஓரத்தில் சிவப்பு தெரிகிறது. அதாவது போழுவிடிவதர்கான அறிகுறி. நாலரைக்கெல்லாம் பொலபொலவென விடிந்துவிட்டது.

          

                                                  செயின்ட் லூயிஸ் விமான நிலையம் வந்துவிட்டது. உள்ளூர் மணி  ஆறேகால். கடிகாரத்தை  திருப்பி வைத்துக்கொண்டோம் நாங்கள் இறங்கியது C 18 கேட் செல்ல வேண்டியதோ D 20  எதிர்திசையில் இருக்கிறது. ஆக மொத்தம் 38 கேட்கள்   போக வேண்டும். ஒரு விமானி நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தவர் பத்து அடி தொலைவு எங்களுடன்  வந்து கண்ணாடி வழியாக நாங்கள் போக வேண்டிய விமானத்தை சுட்டிக்காட்டி அந்த வராந்தாவின் கடைசிக்கு நிதானமாக செல்லுங்கள் என்று அன்புடன் கூறினார். அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு அதுவும் முதியவர்களுக்கு  காட்டும் அக்கறை வியப்பூட்டுகிறது. அதை நாமும் கடைபிடிக்க வேண்டும்.
                     ஏழே முக்காலுக்கு கிளம்பி பத்தரை மணிக்கு நியூ ஜெர்சி சேர்ந்தோம். என்னவொரு அற்புதமான காட்சி. முதலில் பஞ்சு மூட்டை பிரித்து கொட்டியது போல் மேகங்கள். பிறகு கீழே இறங்க ஆரம்பித்ததும் பெட்டிகள்  அடுக்கியதுபோல் கட்டிடங்கள். Map இல்  எப்படி ஆறுகள் மலைகள் பச்சை புல்வெளிகள் போட்டிருக்குமோ அதுபோல் அழகுற தோன்றியது. மகன் Florida   சென்றிருப்பதால் எங்களையே டாக்சி பிடித்து வந்துவிட சொல்லியிருந்தான். ஒரு பயமுமில்லை.  Address தந்துவிட்டால் அவரே கொண்டுவிடுவார். லதா பணம் கொடுத்து விடுவாள் என்று சொல்லியிருந்தான். டிரைவர் தன கையில் உள்ள போன் லதாவை வழிகேட்டு சரியாக ஐம்பது

New Jersy Trip

நிமிடங்களில் கொண்டு விட்டு விட்டார்.  மறுநாள் இளங்கோவுடன் எடிசன் மெமோரியல் பார்க்க சென்றோம். முதலில் எடிசன் பாக்டரி சோதனைக்கூடம் மிக பிரமிப்பாக உள்ளது அண்ணார்ந்து பார்க்கும் அளவு மெஷின்கள் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அலமாரிகளில் அழகுற அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. டேலேக்ரபி டெலிப்ரின்ட் என எல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பே அவர் கண்டுபிடிப்புகள், ஆயிரம் கண்டுபிடிப்புகள் உள்ளனவாம்.
இறந்து தெருக்கள் தள்ளி அவரது தோட்ட வீடு. பத்து ஏக்கர் பரப்பில் மரங்கள் செடி கொடிகள் இடையே பண்ணைவீடு. தன இரண்டாம் இளம் மனைவிக்கு திருமண பரிசாக அளித்தாராம். மூன்று குழந்தைகல்பெற்று வளர்த்து நாற்பத்து நான்கு ஆண்டுகள் அங்கு வழ்ந்த்தார்கலாம் உள்ளே கருப்பு சிவப்பு மர வேலைப்பாடுகள். மூன்று அடுக்கு மாடி. இருபத்து மூன்று அறைகள் கொண்ட அழகிய மாளிகை. .
அந்த காலத்திலேயே காஸ் அடுப்புகள். ப்ரிட்ஜுக்கு பதிலாக பெரிய பீபாய்களில் ஐஸ் துண்டுகளை போட்டு பொருட்களை  குளிரூட்டிஇருக்கிரார்கல் பேரழகியான மனைவியின் முழு உருவ படம். படுக்கைஅறை டிரெஸ்ஸிங் டேபிள் dining.

Monday, October 11, 2010

Los Angeles Trip

செரிடோஸ் என்னும் ஊருக்கு லாஸ் ஏன்ஜெளசிலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள ஊர். அங்கு போனால் ஏதோ வட இந்திய நகரத்துக்குள் வந்து விட்டது போன்ற உணர்வு.நகை கடைகள் மளிகை கடைகள் ஜவுளி கடைகள் ஸ்வீட் ஸ்டால்கள் என எல்லாம் உள்ளன. கொஞ்சம் அழுக்கு கடைகள். ராசா என்ற மளிகை கடையில் எல்லா இந்திய பொருட்களும் கிடைக்கின்றன காய்கறிகள் முருங்கைக்காய் பீர்க்கங்காய் உட்பட எல்லாம் உண்டு. அனால் விலையை இந்திய நாணயத்துக்கு மாற்றி பார்க்க கூடாது. பார்த்தல் ஒன்றும் வாங்காமல் வீடு திரும்பதன் தோன்றும்.நாம் வதங்கி வாடி கீழே போடும் இரண்டு இனுக்கு கறிவேப்பிலை 48 சென்ட் நமக்கு வாங்க மனம் வராது. லட்டு பூந்தி ஜிலேபி முறுக்கு ஓமப்பொடி என நமக்கு பிடத்த எல்லா பலகரங்களையும் வாங்க முடிகிறது. நல்ல வியாபாரம்.
அடுத்த நாள் ப்லானடோரியம் சென்றோம். அரை மணிநேர ஷோ இருட்டில் நட்சத்திர மண்டலம் கோள்கள் செவ்வாய் கிரகம் பற்றிய முழு விவரம். வேலையில் வந்தால் பல இடங்களில் பூமி உருண்டைகள் வயத்து பகல் இரவு மாற்றங்கள் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் பருவநிலை மாறுபாடுகள் எல்லாவற்றையும் அழகாக தெளிவுபடுத்தி இருந்த்தர்கள். படிக்கும் பிள்ளைகளுக்கு மிக பயன்தரக்கூடிய விழயங்கள். நானும் நிஷாவும் ஆர்வமாக பார்த்து ரசித்தோம்.

Los Vegas Trip

கீழ் தளம் பூராவும் கடைகள் லிப்டில் மேல் தளத்துக்கு சென்றோம். அங்கிருந்து வேகாசின் அழகிய தோற்றத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு புறம் வரிசை வரிசையாக சர்கஸ் கேலரி போன்று சிகப்பு விளக்குகள் அருகில் வெளிர் மஞ்சள் விளக்குகள். முதலில் என்ன என்றே புரியவில்லை. பிறகு நானாகவே கண்டுபிடித்தேன். தொலைவில் வேகஸ் நோக்கி வரும் ப்ரீ வே காட்சிதான். ஒருபுறம் செல்லும் கார்களின் பின்புற சிகப்பு விளக்குகளும் வரும் கார்களின் மஞ்சள் விளக்குகளும். மாடியை விட்டு இறங்கி வரவே மனசில்லை. கீழே வந்ததும் எதிரில் உள்ள பார்க்கில் இசைக்கு ஏற்ற வாறு நடனம் ஆபும் நீரூற்று. மிக ரம்மிய மாக உள்ளது. இரவு நேரமாகி விட்டதால் ஹோட்டலுக்கு திரும்பி விட்டோம்.
காலையில் காலைகடன் முடித்து அருகில் உள்ள ஹோட்டல் ஆம்லெட்டுக்கு பெயர் பெற்ற இடமாம். அங்கு போய் சாப்பிட்டோம்.மறுபடி சுற்ற கிளம்பிவிட்டோம். சிசர்ஸ் பேலஸ் என்ற காசினோவுக்கு சென்றோம். அங்கு ஒரு மணிக்கு ஒரு முறை ஒரு காட்சி. வான் வெளியில் இடி மின்னல் மழை தோன்றுவதை சித்தரிக்கும் காட்சி. அது முடிந்ததும் அங்கு ஹால் நடுவில் உள்ள சீசர் மன்னனின் சிலை வை திறந்து பேசுவதும் பணிப்பெண்கள் பணிவிடை செய்வதுமான காட்சி.  பிறகு அளடின் என்ற காசினோ சென்றோம் ஒரு காசினோவுக்கும் மற்றொரு காசினோவுக்கும் செல்ல மெட்ரோ ரயில் வசதி.அளடின் காசினோவில் மாலை பெல்லி டான்ஸ் மற்றும் அத்லேடிக்ஸ்.  பளுதூக்குதல் ஜிம்னாஸ்டிக் போன்று பல காட்சிகள். அடுத்து திரீசூர் அய்லாந்து என்ற காசினோ. அங்கு ஒரு காட்சி இரவு ஏழுமணிக்கு ஒருமணி நேரம் முன்பிருந்தே மக்கள் இடம்பிடித்து உட்கார்ந்து விடுகிறார்கள். ஒரு பெரிய கப்பலை  ஒரு சிறய படகில் வரும் கொள்ளையர்கள் கொள்ளயடுக்க முயற்சிக்கிறார்கள். இருண்டு தரப்பும் சுட்டுக்கொண்டும் ஈட்டி அம்பு வீசிக்கொண்டும் சண்டை நடக்கிறது. இறுதியில் கொள்ளையர் கப்பல் எரிந்து சாம்பலயுகிறது. அத்துடன் காட்சி முடிவடைகிறது. எவ்வளவோ நாகரிகம் வளர்ந்து விஞ்ஞானம் வளர்ந்த நாடு மக்களாக இருந்தாலும் இந்த கட்சியை காண சிறுவர் முதல் பெரியார்வரை ஆவலுடன் வீதியோரம் இடம் பிடித்து உட்கார்ந்து காசினோ உள்ளே வராமலே பார்த்துவிட்டு திரும்புகிறார்கள்.

Friday, October 1, 2010

காசிக்கு செல்லவேண்டும்..............

       காசிக்கு செல்லவேண்டும் என்ற ஆசையே என் மனதில் எழுந்ததில்லை. யார் அழைத்துப்போவார்கள்?நிறைவேற முடியாத விஷயங்களில்  ஆசை வைப்பது முட்டாள்தனம்.

     எங்களின் குடும்ப நண்பரான டாக்டர் மகாதேவன் தான்
சில நண்பர்களுடன் காசி மற்றும்  அலஹாபாத்  மூன்று நாட்கள் பயணமாக விமானம் மூலம் செல்வதாகவும் எங்களை உடன் அழைத்துப்போவதாக  சொன்னார்.
    முதலில் என்னவர் அதெல்லாம் உடல்நிலை சரியில்லாதவள் எங்கே போவது என்று மறுத்துவிட்டார். ஆனால் என் பெரிய பெண் இதைவிட்டால் உங்களுக்கு  நல்ல துணை கிடைக்காது.அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்  என்று வற்புறுத்தினாள்.
           செப்டம்பர் இரண்டாம் நாள் புறப்பட்டு சென்று ஐந்தாம் நாள் திரும்புவதாக திட்டம். சென்னையில் உள்ள தீபா டிரவேல்ஸ் மூலம் ஏற்பாடுகள் செய்தார். ஒரு நபருக்கு இருபதாயிரம் செலவாகும், தங்குமிடம் ஐந்து நட்சத்திர ஹோட்டல் விமானநிலையத்தில் இருந்து    எங்கு செல்வதானாலும்  இன்னோவா குளிரூட்டப்பட்ட கார் மற்றும் படகு பயணம் எல்லாம் அதிலேயே அடங்கும் என்றார்.
        பதினோரு பேர் கொண்ட குழு சென்னையில் சந்தித்து ஒன்றாக  கிளம்ப திட்டம். நான்கு மாற்று ஆடைகள் மருந்துகள் அவசர தேவைக்கான மருந்துகள் வழக்கமாக கொண்டு செல்லும் இதர பயண பொருட்கள் எடுத்துக்கொண்டோம். காசியில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது கடமை. அப்போது உடுத்தும் ஆடைகளை அங்கேயே போட்டுவிடவேண்டும் என்று ஒரு சாரரும், வேண்டாம் திரும்ப  ஈர ஆடைகளை சுமந்து வந்து உலர்த்த இடமில்லாமல் சிரமப்படணும் அதோடு கண்டவரும் குளித்த இடத்தில குளித்த ஆடைகளை சுமந்து வருவது வியாதிகளை சுமந்து வருவதுபோல் ஆகும் என்றேன். அந்த நாட்களிலும் இதை மனதில் கொண்டுதான்  இதைப்போன்ற இடங்களில் ஸ்நானம் செய்தால் துணிகளை அங்கேயே போட்டுவிட வேண்டும் என்று சொன்னார்கள். சாதாரணமாக  சொன்னால் மனிதன் ஏற்றுக்கொள்ளமாட்டான்  அதனால் சாஸ்திரம் என்று சொல்லி ஏற்கவைத்தார்கள்    
காலை ஆறேமுக்கால் மணிக்கு மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இருந்து  டெல்லி செல்லும் Jet  Airways விமானத்தில் பயணப்பட்டோம். வழியில் தண்ணீர் தவிர எது வாங்கினாலும் பணம் கொடுக்க வேண்டும், அதுவும் சாண்ட்விட்ச் சமோசா போன்ற வயதானவர்கள் சாப்பிட முடியாத உணவு வகைகள்.
முன் யோசனையாக  அவரவரும் எதாகிலும் சாப்பிட கொண்டு போயிருக்கலாம். ஒன்பதே முக்காலுக்கு டெல்லி சென்றோம். அடுத்த நாற்பதாவது  நிமிடத்தில்  வாரணாசி செல்லும் விமானம் ஆகையால் காபி குடித்ததே போதும் என்று கழிப்பறைக்கு சென்று  விட்டு விமானத்தில் ஏறிக்கொண்டோம்.
         10:50  க்கு  புறப்பட்டு 11:50 க்கு  காசி சென்றோம் வழியில் விமானத்தில் பாவ்பாஜி கேக் மற்றும் ஜூஸ் கொடுத்தார்கள். விமானநிலைய வாசலுக்கே கார் வந்து ஹோட்டலுக்கு அழைத்து சென்றது. சீக்கிரமே பக்கத்திலே உள்ள தமிழ்நாடு ஹோட்டல் பொய் மதிய உணவை முடித்து கொண்டு வெளியே செல்ல கிளம்பி விட்டோம். நாங்கள் தங்கிய மேரதன் ஹோட்டல் காலை சிற்றுண்டி மட்டும்தான் தருவார்களாம்.
இருவத்தைந்து வயது மதிக்க தக்க கைடு வந்தார். முதலில் தச அஷ்வேமேத காட் என்னும் இடத்திற்கு சென்றோம்.
அரை கிலோமீட்டர் தொலைவிலேயே எல்லா வாகனங்களும் நின்றுவிட வேண்டும். நடந்து சென்றால் படிக்கட்டுகள் வழியாக கங்கை நீரில் பரவசத்துடன் இறங்கி  தலையில் தெளித்துகொண்டோம். அகல் விளக்குகள் தொன்னையில் பூக்களின் இடையில் வைத்து விற்கிறார்கள். அதை வாங்கி கங்கா நதிக்கு பூஜை செய்தோம். அங்கிருந்து மறுபடி காரில் காசி பிரதான வீதிக்கு வந்து காரை நிறுத்திவிட்டு நடைபயணமாக சந்து பொந்துகளில் நுழைந்து புறப்பட்டு ஒருவழியா காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தோம்.
விசாலமான மதில்சுற்று உள்சுற்று வானளாவிய கோபுரங்கள்  என்று பார்த்து பழகிய நமக்கு பெரிய ஏமாற்றமே.ஒரு சின்ன கூடம் அளவுக்கு இருக்கும் இடத்தில் புகழ் பெற்ற  காசி விஸ்வநாதர் லிங்கம் உள்ளது. அதுவும் கொஞ்சம் உயரமானவர்கள் பக்கத்தில் உள்ள கைபிடியில்  சாய்ந்து எட்டி தொட்டு வணங்கலாம். உயரம் குறைந்தவர்கள்  கையில் கொண்டுபோகும் பூக்களை அர்சிப்பதோடு  திருப்தி
அடையலாம்.
அடுத்து மறுபடி சில சந்துகள் தாண்டி அன்னபூரணி சன்னதி. குறுக்கே எதிர் வரும் பசுக்கள் இருசக்கர வாகனங்கள் எல்லாவற்றையும் சமாளித்து எங்களை ஒரு சர்கஸ் ரிங் மாஸ்டர் போல கூட்டிச்சென்ற கைடின் திறமையை மெச்ச வேண்டும். நாம் பாத்தி தொட்டு கும்பிடவேண்டும். பூக்கள் வாங்கி சமர்பிக்கலாம். வட நாட்டு கொவில்களில் அது ஒரு சந்தோசம்.
அடுத்து காசி விசாலாக்ஷி கோவில். எல்லாமே நடை பயணம்தான். விசாலாக்ஷி நம்மூர் அம்மன் போன்று கருங்கல் சிலை அழகிய உருவம்.
                           அங்கிருந்து காரில் விந்த்யச்சல் என்ற இடத்துக்கு சென்றோம் 108 சக்தி பீடங்களில் ஒன்றாம்.  அங்கும் கூட்டம் அதிகம்.  அதோடு ஹோட்டல் திரும்பி விட்டோம்.
சென்னையில் கொஞ்சதூரம் நடப்பதற்கே கெஞ்சுபவர்கள் ஆர்வக்கோளாறினால்  5 கிலோமீட்டர் அளவுக்கு நடந்தோம்.

 

Wednesday, September 29, 2010

முதல் அமெரிக்க பயணம்

என் கணவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நான் குடும்ப தலைவி. எங்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடவுளருளால் அனைவரும்  நன்கு படித்து நல்ல நிலையில் உள்ளனர்.
                             எங்கள் மகன்கள் மூவரும் 1998-99 இல் ஒருவர் பின் ஒருவராக அமெரிக்காவில் கணினி துறையில் வேலை பெற்று சென்றுவிட்டார்கள்.
2000 வருடம் ஏப்ரல் மாதம் எங்களை அழைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தார்கள். மே இரண்டாம்  தேதி நாங்கள் சென்னையில் புறப்படுவதாக ஏற்பாடு.
                            இரண்டாம் தேதி புதன் இரவு எட்டு மணிக்கு உறவினர் புடைசூழ விமான நிலையம் வந்தடைந்தோம். பாஸ் வாங்கிகொண்டு எல்லோரும் உள்ளே வந்தார்கள். எல்லா செக்கிங்கும் முடிந்து நாங்கள் வெளியே வந்து எல்லோரிடமும் விடை பெற்று கொண்டு உள்ளே போனோம். சரியாக 11 : 50 க்கு உள்ளே போகலாம் என்றார்கள். நாங்கள் முதல் முறை விமான பயணம் என்பதால் எதோ ஏணி வழியே  ஏறி விமானத்தின் உள்ளே செல்வோம் என்று எண்ணி இருந்தோம். ஒரு வராந்தா வழியாக சென்றால் நேராக விமானத்தின்   உள் செல்லும் இடம் வந்துவிட்டது. இடம் கண்டுபிடித்து உட்காரவும் பெல்ட்டை அணிந்து கொள்ளவும் ஏற்கனவே அறிமுகமான ஒருவர் உதவினார். விமானம் கிளம்பியதே தெரியவில்லை. ரன்வேயில்  ஓடி முடிந்ததும் லிப்டில்  ஏறும்போது உண்டாகும் லேசான குலுக்கல்தான் இருந்தது.
             விமானத்தில் முதலில் ஆரஞ்சு பழரசமும் பின்பு இரண்டு மணிக்கு சாப்பாடும்  கொடுத்தார்கள். சாப்பிட்டு முடிந்த்ததும் சற்று கண் அயர்ந்தோம்.
ஆறரை மணிக்கெல்லாம் கோலாலம்பூர் சென்று அடைந்தோம்.
எங்கள் கைகடிகாரத்தை திருத்தி வைத்துகொண்டோம். கோலாலம்பூர் விமான நிலையம் ரொம்ப ரொம்ப அழகு. பிரம்மாண்டம், சில  மணி நேரம் ஆசைதீர சுற்றி வந்தோம். ஐந்து  டாலர்கள் கொடுத்து இரண்டு காபி குடித்தோம். ஒன்பது மணிக்கு விமானத்துக்கு திரும்பினோம். இது பெரிய போயிங் விமானம் இங்கு மதிய சாப்பாடு தந்தார்கள். மாலை நாலரைக்கு Tokyo  சென்றடைந்தோம். வெளியில் போக அனுமதி கிடையாது. லவுஞ்சிலேயே அமர்ந்திருந்தோம். கோலாலம்பூர் விமானநிலையத்துடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஆனால் நம் ஊர் பஸ் நிலையம் போல் நிமிடத்து ஒரு விமானம் இறங்குவதும் மேலே புறப்படுவதும் கண்கொள்ளா காட்சி. மறுபடி விமானத்திற்கு செல்ல வேண்டிய இடத்துக்கு போக அந்த தம்பதிகள் உதவினார்கள். ஆனால் யார் உதவியும் இன்றி எந்த இடத்துக்கும் போகலாம். வழியை படங்கள் மூலம் போட்டிருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள்  கூட சற்று கவனமாக இருந்தால் தனியாக எந்த இடத்துக்கும்  செல்லலாம்.
                                                   ஆறு மணிக்கு விமானம் புறப்பட்டது. இரவு உணவுக்கு முன்  அடிக்கடி குடிக்க எதாவது கொடுத்து கொண்டே இருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு ஜன்னல்களை சாத்திவிட்டார்கள். பெரிய விளக்குகளை அணைத்துவிட்டார்கள். அவரவர் இருக்கைக்கு மேல் விளக்கு மற்றும் குளிரூட்டும் வசதி உள்ளது. இரவா பகலா பொழுது விடிந்துவிட்டதா ஒன்றும் தெரிய வில்லை. பசிபிக் கடல் மீது நீண்ட பயணம். பொழு விடிந்தது என்று அவர்களாக வந்து ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டு காலை காபி தந்தார்கள் பிறகு காலை உணவு தந்தார்கள்.
                                                 3  ஆம்  தேதி  வியாழன் பகல் ஒரு மணிக்கு  Los  Angeles வந்தடைந்தோம் விமானத்தில் பயணிக்கும் போது எந்த பயமும் தெரியவில்லை வீட்டில் சோபாவில் உட்கார்ந்து இருப்பதுபோல் தான் இருந்த்தது, தரையை தொடும் போதுதான் சற்று தட தட  என்ற ஓசையுடன்   நம்மை அறியாமல் தூக்கி போடுகிறது.
செக்கிங் போது  எதற்கு வந்து உள்ளீர்கள் என்று கேட்டார்கள். பிள்ளையை பார்க்க மற்றும் சுற்றிபார்க்க என்றோம். சரி என்று 6 மாதங்களுக்கு விசா கொடுத்து விட்டார்கள். இதுவரை உதவிய தம்பதியருக்கு நன்றி கூறி விடை பெற்றோம். பெட்டிகளை எடுக்க பலரும் உதவினார்கள். முதியவர்கள்  என்றல் நாம் கேட்காமலே வலிய வந்து உதவுகிறார்கள்.
எனக்கு தானியங்கி படிகளில் (escalator) இறங்க பயம் சாதாரண படிகளிலேய இறங்கி விட்டேன். பிள்ளைகள் , மருமகள்கள் பேரக்குழந்தைகள் அனைவரையும்  பார்த்ததும் மனம் கொள்ளாத மகிழ்ச்சி.
                    இனி சொந்த கதை சொல்லி படிப்பவர்களை போரடிக்க மாட்டேன்.
இனி நாங்கள் சென்ற ஒவ்வொரு இடமாக சொல்கிறேன்.

Sunday, September 26, 2010

எங்கேயோ படித்தவை

புத்திசாலித்தனம் என்பது தேர்வு மதிப்பெண்களை வைத்து தீர்மானிப்பது அல்ல.
  • கணிதமேதை ராமானுஜம்  ஆங்கிலத்தில்  தேர்வில் தேறாதவர்.
  • உலகம் புகழும் ஐன்ஸ்டீனை பள்ளி ஆசிரியர், " நீ ஒன்றும்  உருப்படமாட்டே" என் வகுப்பில் இருப்பதால்  என் மரியாதை குறைகிறது" என்பாராம்.
  •  பேரறிஞர் அண்ணா  நான்கு முறை பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் தோல்வியை கண்டவர்.
பேச்சுத்திறன், வார்த்தை சரளம், எண்களில் திறமை, முப்பரிமாண சிந்தனை  உணர்வு, ஊகம், ஞாபகம், தெர்ச்டோனே கில்பிர்ட் என்பவர் ஏழு இல்லை நூற்றி இருபது  அம்சங்கள் உள்ளன என்கிறார். 
 
IQ டெஸ்ட் படி உலக ஜனத்தொகையில்
  • 68 -85  சதவிகிதம் பேர்  115 புள்ளி IQ  
  • 13 சதவிகிதம் பேர் 116  முதல் 130 புள்ளி IQ
  • 2   சதவிகிதம் பேர் மட்டுமே 130 புள்ளிகளுக்கு மேல்  உள்ளார்கள்                                         சுஜாதா தன்னுடைய ஏன்,எப்படி,எதற்கு என்ற புத்தகத்தில் தன்னைப்போன்ற சராசரி  மனிதருக்கு  100 புள்ளிகள் IQ உள்ளதாக குறிப்பிடுகிறார்.
இறைவனால் கொடுக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது
இறைவனால் தடுக்கப்படுவதை யாராலும் கொடுக்க முடியாது.

Saturday, September 25, 2010

எங்கேயோ படித்தவை

மாங்கல்யம் 9  இழைகளை  கொண்டது.
  1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளல் .
  2. மேன்மை                  
  3. ஆற்றல்.                     
  4. தூய்மை
  5. தெய்வீக குணம்
  6. உத்தமகுணங்கள்
  7. விவேகம்
  8. தன்னடக்கம்
  9. தொண்டு மனம்
இவற்றை ஒரு பெண் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம்
அமைக்கப்பட்டுள்ளது.

 
  • செருப்பு தேயும்போது கால் ஜாக்கிரதை ஆகி விடவேண்டும்.
  • வயது ஏறும்போது பண சேமிப்பு பத்திரமாக இருக்கவேண்டும்.
  • மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல விடாமுயற்சியினால்தான்.
  • பசி வந்திடப்பத்தும் பறந்து போகும். மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை மற்றும்  காமம் இவையே அந்த பத்தும்
  • பயமும் தயக்கமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  • பிடிவாதக்காரன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். 
  • வளமையில் வலது கை உழைப்பு இடது கை சிக்கனம்
  • பசித்தவனுக்கு சமாதானம் கூற முடியாது. பசித்தவனுக்கு காதுகள் கிடையாது                                                 
சாணக்யன்


முப்பது வருடங்களுக்கு முன் தினத்தந்தியில்  தினமும் சாணக்யன் சொல் என்று படத்துடன் ஒரு  சொல் வெளிவரும். என பிள்ளைகளை பிடிவாதக்கார குழந்தைகள் என்று யாரவது சொன்னால் நான் உடனே பிடிவாதக்காரன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் நான் சொல்லவில்லை சாணக்யன் சொல்லிப்போயிருக்கிறார் என்று சொல்வேன்.
அதனால் தான் எந்த வயதிலும் படிப்பை ஒரு சவாலாக ஏற்று படித்து  ஜெயித்து  காட்டுகிறார்கள். இதை நினைத்து  நான் பெருமைப்படுகிறேன்.

காசி யாத்திரை- 4

கரையேறி வந்து உடை மாற்றிக்கொண்டு கரை ஓரமாகவே படகில் சென்று மற்ற படித்துறைகைளை (ghat) பார்த்தோம்
அரிச்சந்திர ghat  மணிகர்ணிக ghat  என்பவைதான் தகனம் செய்யும் இடங்கள்.  அரிச்சந்திர ghat  என்பதை பார்த்தோம். ஒரு  பிணம் எரிந்து முடிந்த நிலையிலும் மற்றொன்று எரிந்து கொண்டும் இருந்தது. இந்த ghat  அகால மரணம் மற்றும்  தற்கொலை போன்ற பிணங்களை எரிக்கும் இடமாம். மணிகர்ணிகா ghat அங்கு உயிர் விடுவதற்கு என்றே  வந்து காத்திருந்து இறந்து  மற்றும் வயதாகி இறந்தவர்களை தகனம் செய்யும் இடமாம். அதனால் அங்கு kutta     நெரிசலால் இடம் இல்லாததால் பாதி  ஏரியும் போதே கங்கையில்  இழுத்துவிட்டுவுட்ம் கட்சியாம். அது கொம்\ஞ்சம் தொலைவில் இருந்தது அங்கு போய் திரும்ப நேரமாகு. படகும் எதிர்காற்றில் வலிப்பது சிரமம் என்று சொல்லவே கரைக்கு திரும்பி விட்டோம்.
மூன்று மைல் தொலைவில் உள்ள காலபைரவர் கோவிலுக்கு போனோம். ஞாயிற்று கிழமை விசேஷம் என்பதால் சொல்ல மிடியாத கூடம். கைடு ஒரு ஆரஞ்சு கலர் பலூன் வாங்கினான். எதற்கு என்று கேட்டால் இந்த கூட்டத்தில் நாம் திசைக்கொருவராக பிரிந்துவிடுவோம் நான் இந்த பலூனை தூகிபிடித்து கொண்டு ஓரிடத்தில் நிற்பேன் நீங்கள் எல்லோரும் அங்கு வந்து விட வேண்டும் எர்ந்ற்றன், என்னே சமயோசித புத்தி  அவ்வையின் கர்வத்தை முருகன் அடக்கிநோற்போல் அந்த நிமிடம் படித்தவர்கள் என்ற ஆணவம் யாருக்காகிலும் இருந்திருந்தால் அந்த நொடியில் ஒழிந்துவிட்டது.
                         பிறகு விமானநிலையம் நோக்கி பயணப்பட்டோம். வழியில் சாரநாத் பார்த்தோம். புத்தர்கயாவில்   முக்தி பெட்ட்றதும்  முதன்முதலில் சீடர்களுக்கு உரை நடத்திய இடம். தங்க புத்தர் சிலை. அங்கு தானே நாம் அரசாங்க சின்னம் அசோகா சின்னம் என்று கேட்டேன். அது முன்பு வெளியில் தான் இருந்தது அதை உடைதுவிடுகிரார்கள் என்று மேயுசியத்தில் கொண்டுவித்து விட்டார்கள் என்று காண்பித்தான். எங்கள் விமானம் இரண்டு மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் டெல்லியில் சென்னை விமானத்தை பிடிக்க முடியவில்லை ஏழு மணி விமானத்தில் இடம் கொடுத்து ஒருவர் போர்டிங் பாஸ் தருவதும் மற்றவர் அதெல்லாம் எனக்குஇன்னும்  தகவல்  வரவில்லை உங்களை பஸ்ஸில் ஏற்ற முடியாது என்று வம்பு செய்தார்கள். டாக்டர் சத்தம் போட்ட பிறகு ஜெட் லைட் என்ற விமானத்தில் காசியிளிருன்த்து வந்தவர்கள் மற்றும் சிலரை ஏற்றிக்கொண்டு பெரும்பாலும் காலியாகவே சென்னை வந்து சேர்ந்த்தது.  ஒரு வழியாக நல்ல விதமாக காசி பயணம் முடித்து கொண்டு வீடு வந்து செர்ந்த்தோம். கடவுளுக்கு நன்றி அழய்த்துபோன மகாதேவன் தம்பதிக்கும் நன்றி.

Friday, September 24, 2010

காசி யாத்திரை- 3

 காலையில் எழுந்து குளித்துவிட்டு ஆறு மணிக்கெல்லாம் படித்துறைக்கு சென்றுவிட்டோம். அங்கிருந்து படகு சவாரி. ஓரமாகவே சென்று ஒவொவொரு கட்டமாக காண்பித்தான் அந்தகால அரசர்கள் தாங்கள் பெயரால் படித்துறைகளும் அதட்ற்குமேல் சத்திரங்களும் கட்டி வைத்திருக்கிறார்கள். நாங்கள் குளித்ததும் உடைமாற்ற வேண்டும் என்று சொல்லியிருந்தோம். அதுதான் நாங்கள் செய்த தவறு. நிறையபேர் குளிக்கும் இடமாக இருந்தால் படிகள் சேறு இன்றி சுத்தமாக இருக்கும்
எங்களை தனியாக கூட்டமே இல்லாத ஒரு படித்துறையில் இறக்கி விட்டான். வயதில் பெரியவர்கள் நீங்கள் முதலில் இறங்கி குளியுங்கள் என்று சொல்லவே நானும் அவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துகொண்டு இறங்கினோம் முதல் படியிலேயே நன்கு அங்குல உயரத்துக்கு சேறு ஒரே வழுக்கள். காலே கீழே படியவில்லை. நான் பயத்தில் நச்டுங்கி அப்படியே உட்கார்ந்து விட்டேன். இவர் துணிச்சலாக நன்கு படிகள் இறங்க்ஹி நின்று எனனை வா என்று மிரட்டுகிறார். படிதேரியாமல் வழுக்கினால் முதுகில் சரியான அடி படும். நான் மெதுவே உட்கார்ந்து வருகிறேன் என்று எப்படியோ இறங்கி இறங்கி இருவருமாக கங்கையில் மூன்று முறை முழுகி எழுந்தோம். எங்களுக்கு பிறகு மற்றவர்கள் கொஞ்சம் தைரியமாகவும் வசதியாகவும் இறங்கி குளித்தார்கள்.

Wednesday, September 22, 2010

காசி யாத்திரை- 2

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும் என்பதால் காலை உணவை கட்டி தந்து விடும்படி கேட்டோம். ஒரு சண்ட்விச் ஒரு கேக் ஒரு ஆப்பிள் மற்றும் ஜூஸ் என கட்டி ரெடியா ஹாலில் வைய்துவிட்டர்கள் நாங்களும் எழரைகேல்லாம் புறப்பட்டுவிட்டோம் வழியில் ஒரு மரத்தடியில் சில மேசைகளும் நாற்காலிகளும் போட்டிருந்தன. அங்கு கொண்டுவந்த உணவை உண்டு அருகில் இருந்த தேநீர் விடுதியில் தேநீர் அருந்திவிட்டு புறப்பட்டோம். 123 கிலோமீட்டர் தொலைவு அலஹபாத்  பதினோரு மணிக்கு போனோம் அன்குய் ஸ்நானம் செய்தால் துணிகளை தானம் செய்துவிட வேண்டும் என்று சிலரும் வேண்டாம் என்று சிலரும் சொன்னார்கள்,
நான் பலரும் குளித்த இடத்தில் நாம் குளித்துவிட்டு ஈரவுடைகளை காரில் சுமந்துவந்து எங்கு தோப்போம் எங்கு உலர்த்துவோம் அதனால் சுமாரான துணிகளை உடுதிப்போய் அங்கு போட்டு விட்டு வந்துவிடுவோம் என்றேன் அது போலவே எல்லோரும் உடுத்தி சென்றோம்.
யமுனைகரையோரம் படகோட்டிகள் நிற்கிறார்கள் நம்மை ஒரு படகில் அரை கிலோமீட்டர் தொலைவு அழைத்து சென்று அங்கு நிலையாக நிற்கும் ஒரு படகில் கையை பிடித்து இறக்கிவிடுகிரார்கள், அங்கு இருபது அடி அஆழம்.  நிலையாக நிற்கும் படகில் நான்கு அடிக்கு நான்கடி துவாரம் போட்டு உள்ளே ஒரு பலகையை
கட்டி உள்ளே தொங்கவிட்டிருக்கிராரகள் நம்மை இருவர் இருவராரக கையை பிடித்துகொண்டு இறங்க சொல்லி பத்திரமாக இறக்கி விடுகிறான். இடுப்பளவு தண்ணீரில் நிற்கிறோம் அப்படியே மூழ்கி எழ வேண்டியதுதான். மிகுந்த பயத்துடன்
மூன்று முறை முழுகி எழுந்தோம் தீர்ந்த்தது திருவேணி சங்கம ஸ்நானம் என்று கரை ஏறி உடை மாற்றிக்கொண்டு ஈர உடைகளை அங்கு கொடுத்துவிட்டோம். தல 350 படகோட்டி வாங்கி கொண்டான்.
       காசிக்கு திரும்ப பயணமானோம் வழியில் விந்த்யச்சல் என்ற சக்தி பீடம் பார்த்தோம் 108 சக்திபீடங்களில் ஒன்றாம் ஹோடேல்லுக்கு வரும் வழயில் ஒரு இடத்தில் காசிவந்த நினைவாக ஒன்றிரண்டு புடவைகள் வாங்கினோம்.
கைடைவிட்டே அன்னபூரணி சின்ன சிலய்களும் காசி தீர்த்தமும் வாங்கி கொண்டோம். பக்கத்தில் உள்ள உணவு விடுதியில் இரவு உணவை முடித்து கொண்டோம். மறுநாள் காலை ஆறு மணிக்கே கிளம்பினால்தான் கங்கா ஸ்நானம் முடித்து எல்லா ghaat  என்கிற படித்துறைகளை பார்த்துவிட்டு வழியில் சாரநாத் பார்த்துவிட்டு விமானநிலையம் செல்ல நேரம் சரியாக இருக்கும்  என்று கிடு சொன்னார்
.

காசி யாத்திரை- 1

ஆறரை மணிக்கு கங்கைக்கு ஆரத்தி பூஜா விசேஷம் என்றார்கள், மறுபடி கால்வலியை பொருட்படுத்தாமல் கங்கை கரைக்கு சென்றோம் அங்கு படித்துறையில் நம்மூர் தெப்பத்துக்கு படிகளில் இடம் பிடித்து உட்காருவதுபோல்  ஜனங்கள் உட்கார்ந்திருந்தார்கள் படகில் சிறிது தூரம் சென்று எதிரே தெரியும் பூஜையை பார்ப்பது நன்றாகஸ் இருக்கும் என்று போனோம்  அய்ந்து இடங்களில் திருநங்கையர் போல் உள்ளவர்கள் கங்கையை நோக்கி தூபம் தீபம் சாமரம் வீசுதல் பஜன் பாடுதல் என்று  ஒரு மணிநேரம் செய்தார்கள். பிறகு காண்கையில் அகல் விளக்குகளை ஏற்றி மிதக்க விட்டார்கள்,
அத்துடன் அன்றைய ட்ரிப் முடிந்து ரூமுக்கு வந்து படுத்து விட்டோம்

Friday, September 10, 2010

ஒருவர் மிக உயர்ந்த இடத்தில இருக்கிறார் என்றால் அவர் மிக அதிகமாக வேதனைகளை துரோகங்களை அனுபவித்திருப்பார் என்று தான் அர்த்தம் ஆனால் மிக
மிக வலிமையான மனவுறுதியின் காரணமாக அனைய்தையும் தாண்டி அந்த
இடத்திற்கு வந்திருக்கிறார் என்பதே அர்த்தம்

தன்னால் அடையமுடியாத ஒன்றை மற்றவர்கள் அடைந்தால் அதைக்கண்டு சகியாத
மன நிலைக்கு பொறாமை என்று பெயர்
ஒரு மனிதனுடைய மேன்மைகளைஎல்லாம் பொறாமை தேய்த்துவிடுகிறது
மற்றவர்களது முன்னேற்றத்தை கண்டு மகிழ்கிற அளவே ஒரு மனிதன் முன்னேற்ற
மடைகிறான்  பகவத் கீதை
செல்வம் சேருதல் தொடர்ந்து ஆரோக்யமாக இருத்தல் பிறியமுடையவளும் இனிமையாக பேசுபவளுமாகிய அனுகூலமான மனைவி பணிவுள்ள புதல்வன் நல்லறிவு அவ்வறிவும் பொருளீட்டவோ ஞானம் பெறவோ உதவியாக இருத்தல் இவ்வாறு அம்சங்களும் மனிதனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன
விதுர நீதி.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மதுரதேமொழி மாதர்கள் எல்லாம்
வாணி பூசைக்குரியன பேசீர்
எதுவும் நல்கி இங்கேவகையாலும்
இப்பெரும்பணி நாட்டுவம் வாரீர்
கல்விப்பணிக்காக பாரதி
கதிர்களை சுமந்து நிற்கும்போது பயிர் அழகு பெறுகிறது
தாமரையை சுமந்து நிற்கும்போது குளம் அழகு பெறுகிறது
நாணத்தை சுமந்து நிற்கும்போது பெண் அழகு பெறுகிறாள்
அறத்தை சுமந்து நிற்கும்போதுதான் மனிதன் அழகுடையவனாகிறான்
நான்மணிக்கடிகை     

Monday, August 9, 2010

சகோதரியாக

சகோதரியாக  பத்து வயதில் தாயை இழந்துவிட்டோம். பெரியப்பா வெளியூரில் வேலையில் இருந்தவர் தம்பி குழந்தைகள் வாழ்விற்காக தன குடும்பத்தை சொந்த ஊரான காஞ்சியிலே விட்டுவைத்தார்.ஒருவருடம் இரண்டு வருடங்கள் அல்ல.பதினய்ந்து வருடங்கள்.எங்கள் பெரியப்பா பெரியம்மா தியாகத்தால் தான் நாங்கள் நன்றாக வளர்ந்தோம் ஒன்றரை வயது தம்பிக்கு நான் சின்ன தாய்போல மாறிவிட்டேன். அவனுக்கும் அடுத்தவனுக்கும் சாப்பாடு ஊட்டுவது தாயை நினய்த்து அழும் பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டுவது என எந்த நேரமும் தம்பிகளை சுய்ற்றிதான் வாழ்க்கை  எனக்கு அடுத்த aதங்கை பெரியதம்பிகள் சொன்ன பேச்சை கேட்பார்கள்  இரண்டுபேரையும் கவனிக்க வேண்டியது அவள் பொறுப்பு. அம்மா காலையில் இத்தனைபெருக்கும் காலை உணவு ஆபீஸ் செல்லும் appavukkusaappadu  அப்பாவுக்கு சாப்பாடு செய்யதநியாக பெரும்பாடு படுவார்கள்.  எங்கள் சின்ன அண்ணன் பெண் குழந்தைபோல அம்மாவுக்கு அடுப்படியில் சகல உ த தவிகளையும் செய்வார். பள்ளியில் என்னையும் என தங்கையையும் வீட்டுப்பாடம் செய்யவில்லை என கேட்க மாட்டார்கள்.நாங்கள் இருவரும் அவரவர் வகுப்பில் முதல் மானவியராயிற்றே ஆசிரியைகளுக்கு செல்ல பிள்ளைகள் 
மாலை அயிந்து மணிக்கு அலுவலகம் விட்டால் அயிந்து நாற்பத்தய்ந்துக்கு அப்பாவை வீடுவசலில் பார்க்கலாம். அவரை பார்த்து கடிகார முள்ளை  திருத்தி வைத்துக்கொள்ளலாம் வந்ததும் குட்டிதம்பிகள் இருவரும் கைகால் முகம் அலம்பகூட விடாமல் அழுவார்கள். அதனால் தினமும் நான் மாலை நாலரை மணிக்கு பள்ளியிலிருந்து வரும் தம்பிகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விடுவேன். அங்கும் நானும் தங்கையும் நான்கு தம்பிகளையும் கண்ணும் கருத்துமாக விளையாட வைத்து பார்த்து கொள்வோம் அங்கு உள்ள பெரிய கடிகாரத்தில் ஆறு அடித்ததும் பத்திரமாக தம்பிகளை வீட்டுக்கு அழய்த்துவருவோம். பஸ்சும் காரும் போகின்ற வீதியிலும் வாத்து மேய்ப்பவன் போல நாங்கள் ரெண்டுபேரும் தம்பிகளை அழய்த்துவருவதை எல்லோரும் வியப்பாக  பார்ப்பார்கள்.\\சோறு ஓடுவது துநிமாற்றுவது எல்லாம் நாங்கள் இருவருமே ச்தினமும் செய்வதால் லீவு நாட்களில் அப்பா எண்ணெய் தேய்த்துவிட கூப்பிட்டால் பெரியதம்பிகள் இருவரும் சின்னக்க தான் தேய்க்கவேண்டும் என்றும் சின்னதம்பிகள் இரண்டும் பெரியக்காதான் தேய்க்க செண்டும் என்றும் அடம் பிடிப்பார்கள். அப்பவோ என்னடா இது அவர்களே குழந்தைகள் அவர்களுக்கு ஒருத்தர் தலைக்கு தேய்த்துவிடுகிறோம் அவர்களை தொல்லை கொடுக்கிறீர்களே என வருந்துவார். கடைக்கு போகும்தோறும் சின்னவன் என இடுப்பில் ஏறிக்கொண்டு வந்துவிடுவான், அங்கு வந்துவிட்டு திடீரென்று புது பென்சில் வேண்டும் பலப்பம்வேண்டும் சிலேட்டு வேண்டும் என்று அடம்பிடிப்பான் நான் செய்வதறியாது நிற்ப்பேன்.  கடைக்கரரோ அவன் பிடிவாதம்தான் உலகப்ரசிதியாயிற்றே எப்பெடியும் அதை வாங்காமல் விடமாட்டன் ஆகையால் நீ எடுத்துகொண்டு போம்மா நான் அப்பாவிடம் பணம் வாங்கி கொள்கிறேன் என்று கொடுத்தனுப்புவார்கள். அடுத்தநாள் நான் ஒன்றும் கேவ்ட்கமட்டேன் கேட்டா ல் பக்கத்தில் உள்ள சாக்கடையல் என்னைபோட்டுவிட்டு வந்துவிடு என்று வக்கனைய்க பேசி கெஞ்சுவான், நானும் பழயபடி பரிதாபப்பட்டு கூடிபோவேன்.
இவ்வளவு தொல்லைகளுக்கும் இடையில் நாங்கள் எல்லோருமே நன்றாக படித்தோம் 
அண்ணன்கள் இருவருக்கும் திருமணம் ஆயிற்று அண்ணிகள் இருவருக்கும் நாங்கள் இருவரும் சகோதரிகள் போலவும் தோழிகள் போலவும் ஆகிவிட்டோம்.  அவர்கள் இருவரும் தாயில்லாத எங்கலுக்கு தாய் போல் அமைந்து விட்டார்கள். 
எனாகு திருமணமாகி தாய்வீடு வந்தால் அண்ணிகள் பக்கதில்  படுத்துக்கொண்டு ஆறுமாத நடப்புகளையும் ஒரு ராத்திரியில் பேசி தீர்ப்போம் என்னுடைய பிரசவ நேரங்களில் தாய்க்கும் மேலாக எண்ணெய் பார்த்துகொண்ட என அன்னிகளுக்கு  இன்றும் தலை வணங்குகிறேன்.தம்பிகளுக்கு திருமணம் ஆயிற்று. வீட்டுக்கு மூத்த பெண் என்று எனனை முன்னிருத்திதான்  எதையும் தொடங்குவார்கள். எல்லாருக்கும் ஆசை நாத்தனார் எல்லா குழைந்தைகளுக்கும் ஆசை அத்தை. நான் போய் வீட்டினுள் நுழையும்போதே அதை வந்துவிட்டார்கள் என்று குழந்தைகள் சூழ்ந்து கொண்டு செய்த ஆரவாரம் இன்னும் என காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் எல்லோரும் குறை நிறை இல்லாதவர்கள்  கிடையாது. அவர்களிடத்திலும் குறைகள் இருக்கலாம் என்னிடமும் குறைகள் இருக்கலாம் ஆனாலும் குற்றம்பார்கின் சுற்றம் இல்லை என்பதற்கிணங்க நானும் அன்னிகளுக்கு மகள்போலவும் தம்பி களுக்கு தாய்போலவும் உறவுகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறோம் மீதிவழ்நாளிலும் நான் ஒரு நல்ல சகோதரியாக வாழ கடவுள் அருள்புரியட்டும். என அப்பா இருந்த காலத்தில் யாரைப்பற்றி குறை சொன்னாலும் அப்பா நீங்கள் மறுமணம் செய்யாமல் எங்களை வளர்க்க எப்படி தியாகம் செய்தீர்கள் அதைவிட இப்போது பொருத்து போவது பெரிது, சிறியோர் செய்யும் சிறுபிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே.என்று நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவீர்களே  பிள்ளை காலால் உதைத்தாலும் பிள்ளைக்கு கால் வலிக்குமே என்று நினய்ப்பதுதன் பெற்றோர் மனம். பொருத்துகொள்ளுங்கள் அப்பா என்பேன், நீயும் ம\நாலு பிள்ளைகளை வைத்திருக்கிறாய் உனக்கும் இந்த நிலைமை வரும் அப்போது நான் இருக்க மாட்டேன் எனக்கு கூறும் இந்த உபதேசங்களை அப்போது நினைவுபடுத்திக்கொள் என்றார், அவருடைய வார்த்தைகள் மேய்யா கின்ற்றன், நானும் அவருக்கு சொன்ன உபதேசத்தை நினவுபடுதிக்கொண்டு வாழ்கிறேன். 

Monday, August 2, 2010

எங்கேயோ படித்தவை

நண்பர்கள் இருப்பது நல்லது. ஆனால் அவர்கள் உதவியை நாடுவது நல்லதல்ல
ஒருவன் மற்றவர்களைவிட உயர்ந்தவனாக இருப்பதற்கு மற்றவர்கள் நலனுக்காக அவன் செய்யும் தியாகமே காரணம்
வேறு எதிரிகள் தேவையில்லை.உன் சுயநலமே உன் எதிரி.
வேறு நண்பர்கள் தேவையில்லை உன் மனசாட்சியே உனது நண்பன்.
வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்
௧. நாம் விருபுகிறபடி சீட்டுகள் விழுவதில்லை. எந்த சீட்டு விழவேண்டும் என்று நாம் தீர்மானிக்க முடியாது. அதே போல நாம் எப்படி இருக்கவேண்டும் எந்த குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடியாது.
௨. கிடைக்கிற சீட்டுகளை வைத்துதான் ஆட வேண்டும்.அதேபோல நாம் பிறந்த சூழ்நிலை  எப்படி இருந்தாலும் அதைவைத்து வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும்.
3 சீட்டு விளையாட்டை அதற்குரிய சில நியதிகளுடன் தான் விளையாட வேண்டும்.அதைப்போல் வாழ்க்கையிலும் சிலக நியதிகளை கடைப்பிடித்துதன் வாழவேண்டும்.
சீட்டில் அமைகிற ஜோடிகளை வைத்து வெற்றியடைய முயல்வது போல் நமக்கு அமைகிற துணையையும் நண்பர்களையும் வைத்தே நாம் வாழ்க்கையை வெற்றிகர மாக்க வேண்டும்.
௪கிடைத்த சீட்டு எதுவானாலும் வென்றாலும் தோற்றாலும் நாம் உற்சாகமாக வாழ கற்று கொள்ள வேண்டும்.
                                                                           டாக்டர் ராதாக்ருஷ்ணன்.
நம்மை ஒருவர் முந்தும்போதுதான் நாம் மெதுவாக செல்கிறோம் என்பதே நமக்கு புரிகிறது.
வெற்றியில் கர்வம் மீண்டும் தோல்வியின் ஆரம்பம்.
செல்வம் பெற்றதில் கர்வம் வளமை வற்றுதலின் ஆரம்பம்.
சமயம் வரட்டும் பல நற்செயல்களை ஒன்றாக செய்துவிடலாம் என்று காத்திருப்பவன் என்றுமே எச்சமயத்திலும் எதுவும் செய்யமாட்டான்.
மழை அழகுதான் வீடு ஒழுகாதவரை.
தென்றல் அழகுதான் புயலாக மாறாதவரை
மின்னல் அழகுதான் கண்ணை பறிக்காதவரை
மலர் அழகுதான் முள் குத்தாதவரை
மழலை அழகுதான் அதிகம் பெறாதவரை
எதுவுமே அழகுதான் எல்லை தாண்டாதவரை.
                                                                             சண்டீப்ராஜ் ஆலர்த்தம்பாடி.

Wednesday, June 30, 2010

எங்கேயோ படித்தவை

நான் எங்கு அழகிய வரிகளை படித்தாலும் குறித்து வைதுகொல்வேன். சமயம் வரும்போது உப யோகிப்பேன் இருபதுவருடங்களுக்குமுன் ஒரு மணிவிழா அழைப்பிதழில்  வேருக்கு விருதுகள் காணும் விழா என்று இருந்தது. அதை குறித்து வைத்துகொண்டு எங்கள் மணிவிழா அழைப்பிதழில் அச்சிட்டோம். எல்லோரும் அந்த உவமை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது என பாராட்டினார்கள்.

Saturday, June 26, 2010

எங்கேயோ படித்தவை

ஏற்கனவே  பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தரும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்காதீர்
எங்குமே தேங்கி நிற்காதீர் இலக்கு எதுவும் தெரியாவிட்டாலும் எந்தவிதமான சோதனைகள் வந்திருக்கிறது என்று புரியாவிட்டாலும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருங்கள் இலக்கு புரிபடும்.சாதனை உருவாகும்
ஒவ்வொரு மனிதனும் அறியமைகொண்டவந்தான். எந்த விஷயத்தில் என்பது மட்டும் தான் ஆளுக்குஆள் மாறுகிறது
பழகபழக பால் புளிக்கலாம். பண்புள்ள மனைவி புளிப்பதில்லை.
வறுமை என்பது தற்காலிக கோளாறு. செல்வம் என்பது நிரந்தர நோய்
நல்ல மருமகன் கிடைத்தவன் ஒரு மகனை அடைகிறான்.
ketta   மருமகள் கிடைத்தவன் ஒரு மகனை இழக்கிறான்.
படுக்கப் போகும்போது செருப்போடு கவலைகளை கழற்றி வைக்கவேண்டும்.
தந்தை மகற்காற்றும் உதவி நிறைய சேர்த்து வைத்துப் போவதன்று
குறைவனதைக்கொண்டு சரியாக வாழ கற்பிப்பதே

Tuesday, June 8, 2010

மகளாக

இந்ததொடரில் இருவரை பற்றி நான் குறிப்பிட்டு ஆகவேண்டும். ஒருவர் ஏன் கணவர். என மாமி யார் தொண்ணூற்று மூன்று வயது வாழ்ந்தார். அவ ர சாகும்வரை என கணவர் அம்மா பக்கத்தல் உட்கார்ந்து நாடு நடப்புகள் அரசியல் கிரிக்கட்டு   குடும்ப கதைகள் என்று பெச்க்கொண்டு இருப்பார்.  அவர் நண்பர்கள் கூட கேட்பார்கள். என்னப்பா விஷயம் ரெண்டுவேளையும் அம்மாவிடம் பேசுவே என்று . சிரித்து மழுப்பி விடுவார். வயதான தாய் காகவே எட்டு வருடங்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் அழைப்பை ஏற்று போகாமல் இருந்தார். மற்ற்ரோருவன் என அண்ணன் மகன். என அண்ணி சக்கரை நோயாளி. இரவெல்லாம் கால் வலி என்று தூக்கம் இன்றி தவிபபார். மனைவியை அம்மாவை எழுப்ப கூடாது என்று சொல்லிவிடுவான். ஏழு மணிக்கு வேலைக்கு கிளம்பு முன் அம்மாவை எழுப்பி உடல் நலம் விசாரித்துவிட்டு சில நமிடங்கள் கால் பிடித்து விடுவான். அப்போது அந்த தாய் முகத்தில் காணும் சந்தோஷத்தை பார்த்து உண்மையிலேயே நான் பொறாமை பட்டதுண்டு. என்ன தவம் செய்தார்கள் இதுபோல் ஒரு பிள்ளை பெற என்று.

மகளாக

நான் மகளாக செய்ய தவறிவிட்ட ஒன்றையும் இங்கு கூற வ்ரும்புகிறேன் . என் அம்மா இறக்கும்போது என் அப்பாவுக்கு 34 வயதுதான    இருபது வருடகாலம் எங்களை தாயுமாகி நின்று வளர்ப்பதிலேயே வாழ்நாளை க  ழித்துவிட்டார்.  தன்னுடைய பத்து வருடகால மணவாழ்க்கை பற்றி ஒருவரிடமும் ஒரு வார்த்தை பேசியதல்லை, நான் தாய்வீடு செல்லும்போதெல்லாம் அப்பாவிடம் அம்மா பற்றி அவருடன் அபபா கழத்த நாட்கள் பற்றி பேச எண்ணுவேன். நான் அடிப்படையில் ஒரு கோழை. அதுபற்றி கேட்டால் அப்பா மனம் வருந்துமோ என்று தயங்கி கேட்கமாட்டேன். அதோடு அங்கு இருக்கும் சில நாட்களும் அப்பா மற்றவர்களைப்பற்றி குறைசொன்னால் சமாதானம் சொல்வதிலும் மற்றவர்கள் அப்பாவைப்பற்றி சொன்னால் அவர்களை சமாதப்படுதுவதிலும் என் வாழ்க்கையின் குறைநிரைகலய்ப்பற்றி பே சி யும் கால ம்கடதிவிட்டு       வந்துவிடுவேன். இப்போது நினைக்கிறேன் நம்மக்கு வயதக்விட்டது . நம் வாழ்க்கையில் அனுபவித்த சுக துக்கங்களை சொன்னால் காது கொடுத்து கேட்க யாருக்கும் நேரமி லையே. அப்பாவும்தனிமய்ல் அமர்ந்துதெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டுகாலத்தைஒட்டிய  பொது ஒரூ நாளாவது  தன பத்துவருடஇல்ல்வாழ்க்கைபற்றி தன துணைவி பற்றி பேச நிநை த்து  இருக்கலாம். காலம் கடந்து இப்போது வருந்துகிறேன்  இதை படிக்கும் நீங்கள் எல்லோரும் உங்கள் பெற்றோரின் கடந்தகாலம் பற்றி பே சி னால் பிடிக்காவிட்டாலும் சிறிதுநேரம் காது கொடுத்து என்றாவது ஒருநாள் மடாத்ல் ஒரு நாள் கேளுங்கள் போதும். சம்பளம் வாங்கிவந்தாதும் பெற்றோருக்கு பிடித்த பொருள் ஒன்றை வாங்கி அவர்கள் கையை பிடித்துகொண்டு அன்புடன் கொடுங்கள். குழந்தைகளுக்குமட்டும டச் தெரபி பலன் கொடுக்கிறது என்று பிரபல சோப்பு பவுடர் கம்பனிகள் வியாம்பரம் செய்கின்றன. அதெல்லாம் தெரியாத நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே தனிக்குடித்தனத்தில் ஆறு பிள்ளைகை வளர்க்கும்போது வீடு பூராவும் சின்ன குழந்தைகல் இருக்கும் வீட்டை படு ஜாக்கிரதையஆகா வைக்க முடியாது. அதனால் ஒவ்வொரு குழந்தையும் இரண்டு வயதுவரை இடுப்பில் சுமந்தே திரிவேன். குறத்தி போல் பிள்ளையை சுமந்து திரிக்றலே என்று உற்றமும் சுற்றமும் பேசினாலு ம காதில் வாங்கிகொள்ள  மாட்டேன். இன்று என் பிள்ளய்கள் அனையவரும் புத்தி சாலிகலாகவும் ஆ ரோகியதுடன் வாழ்வதன் ரகசியம் டச் தெரபி தானோ . அதேபோலே பெற்றோரின் கைகளை பிடித்து கொண்டு பேசுங்கள். என்றாவது ஒருநாள் கா பிடித்துவிடுங்கள். அப்போது அந்த வயதான தாய் தகப்பன் முகத்தி ல் காணக்கூடிய மகிழ்கசிய  அனுபவித்தால் தான் தெரியும்.

Tuesday, June 1, 2010

எங்கேயோ படித்தவை

முட்டாள் மன்னிக்கவும் மாட்டான் மறக்கவும் மாட்டான்

சராசரி புத்தி கொண்டவன் மறப்பான் மன்னிப்பான்

அதிபுத்திசாலி மன்னிப்பான் மறக்கமாட்டான்

ஒவ்வொரு மனிதனும் எதாவது  மிருகத்தனமான காரியத்தை செய்வதற்குமுன் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற சாமாதானம் --நானும் ஒரு மனிதன்தானே

குரலை உயர்த்தி பேசுவது மட்டுமே நல்ல விவாதம் ஆகிவிடாது கூச்சலிட்டு எதிராளியை அமைதியாக்கி விட்டதன் மூலம் அவனை ஜெயித்துவிட்டதாக நினைப்பது முட்டாள் தனம்.
தாமாக ஒன்றை உருவாக்கிவிட்டு பிறகு அதை சகிக்காமல் ஆறுமாதத்துக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் fashion

Tuesday, May 25, 2010

எங்கேயோ படித்தவை

மதவெறி இல்லாமல் சிறந்த கல்வியை அளிப்பவனே நல்ல குரு.இல்லைஎன்றால் புத்திசாலியான சாத்தானை உருவாக்கும் பாவம் அவனைசாரும்.
எதை எந்த அளவுக்கு விமர்சிப்பது என்பது ஒரு கலை உங்கள் நண்பர்கள் தோள்மேல்  அமர்ந்திருக்கும் ஈயை விரட்ட கோடலியை வீசி விடாதீர்கள்.
ஒருவர் செய்து காட்டியதற்கு எதிராக செய்வதற்கு பெயர் சாமர்த்தியம் அல்ல .
அதன் பெயரும் காபியடிப்பதுதன்.உல்டாவாக காப்பியடிப்பது.
எதிர்த்து பேசாதவரை எந்த மனிதனும் உங்களுக்கு புதியதொரு கருத்தை சொல்வதில்லை.
ஒவ்வொரு புடுக்கருத்தும் உங்களிடம் சேருகிற சொத்து. அதனால் எந்த விஷயத்தையும் ஒப்புக்கொள்வதற்கு முன் நிறைய வாதாடுங்கள்.

Monday, May 24, 2010

எங்கேயோ படித்தவை

எது சந்தோசம் என்ற கேள்விக்கு பதில் புதிரானது
சந்தோஷத்தை அளவுகோல் வைத்தெல்லாம் அளந்து பார்க்காதீர்கள். இருக்கிற மகிழ்ச்சியும் போய்விடும்

ஹீரோ என்பவன் யார்? மற்ற எல்லோரையும்விட ஐந்து நிமிடம் தைரியத்துடன் தாக்குப்பிடிப்பவன்

தப்பு செய்துவிட்டீர்களா மனப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள். உர்ரென்ற முகத்துடன் நீங்கள் கேட்கும் மன்னிப்பு எதிரா ளிக்கு செய்யும் இரண்டாவது அவமானம்.

ஒரு மனிதனின் இதயத்துக்குள் நீங்கள் இடம்பெற நினைத்தால் அவன் அர்த்தமின்றி உங்களை காயப்படுத்தும் போதும் அமைதியுடன் இருந்தாக வேண்டும்.

நூறு சதவீதம் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்கிற சமயத்தில் ஒரு மனிதன் என்ன செய்கிறானோ அதுதான் அவன் நிஜகுணம்

Sunday, May 23, 2010

எங்கேயோ படித்தவை

வெற்றி என்பது விழாமல் இருப்பது அல்ல  விழுகின்ற ஒவ்வொரு முறையும் கம்பீரமாக எழுந்து நிற்பதே
நீங்கள் சிங்கமாகவே இருக்கலாம். ஆனால் நரிகளின் துணையின்றி நரியுடன் மோதாதீர்கள்
முதலில் கோபத்தை விடுங்கள். முழ்டி முறுக்கேறி இருக்கும்போது எந்த மனிதனாலும் தெளிவாக சிந்திக்க முடியாது.

எங்கேயோ படித்தவை

ஒருவனுடைய இழப்பால் எத்தனை கண்கள் கலங்குகின்றனவோ எத்தனை நெஞ்சங்கள் நடிக்காமல் வாடுகின்றனவோ அவை வடிக்கும் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் அவனை இறைவனின் அடிகளுக்கு இட்டு செல்லும் படிகள் என்பதை மறந்து விடாமல் வாழ்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்.
ஓர் எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் கல்லாத கல்வியும்
மூவெட்டில் புரியாத மணமும்
நாலெட்டில் பெறாத பிள்ளையும்
ஐயெட்டில் தேடாத செல்வமும்
ஆரெட்டில் காணாத காட்சியும்
எழேட்டில் பெறாத ஓய்வும்
எட்டேட்டில் பெறாத இறப்பும் பாழே .

அபாரமாக  சிந்திப்பதன் மூலம் வெற்றி  விரைந்து வருவதில்லை.
சிறப்பாக  சிந்தித்ததை துணிவுடன் செயல்படுத்தினால் தான் வெற்றி விரைந்து வரும்.
துணிச்சலான புதுமையான ஆரம்பம் என்பதே vetriyai
  nokki paadhi dhooram nerungivitta madhirithan.

எங்கேயோ படித்தவை

அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப்பெற முடியாது. அறிவின்மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.
சோகத்தில் ஏன் சிரிக்கிறேன் என்கிறாயா  இருள் சூழும்போது தானே விளக்கேற்ற வேண்டும்.
Early to bed early to rise is the way to be healthy wealthy and wise.
பாண்டவர்கள் ஏதாவது ஒரு பிரச்னைக்கு முடிவெடுக்கும்போது இளையவர்களான
நகுலன் சஹாதேவன் இருவர்க்கும் தங்கள் கருத்தை கூற முதல் சந்தர்ப்பத்தை அளிப்பாராம் மூத்தவர் தர்மர்.
பெரியவர்கள் பேசி முடிவெடுத்த பிறகு இளையகார்கள் தங்கள் கருத்தை கூறாமலே இருந்து விடுவார்கள் என்பதால் இந்த விதி.
ஏழை யாய் இருக்கும்போது இன்பம் காணாத மனிதன் செல்வந்தனாய் இருக்கும்போதும் இன்பம் காணமாட்டான்

Sunday, May 9, 2010

எங்கேயோ படித்தவை

ஏழு நற்குணங்கள் 

1. ஏழ்மையிலும்   நேர்மை
2. கோபத்திலும் பொறுமை
3. தோல்வியிலும் விடாமுயற்சி 
4. வறுமையிலும் பரோபகாரம்
5. துன்பத்திலும் தைரியம் 
6. செல்வத்திலும் எளிமை
7 .பதவியிலும் பணிவு

வயதான மனிதனுக்கு உற்ற  துணை வயதான மனைவி, பழகிய நாய், கையிலுள்ள ரொக்கம்

இன்பமான வாழ்வுக்கு மூன்று விஷயங்கள்  தேவை 
1 .பழையவற்றை மறத்தல்
2 .நிகழ்வதை கவனமாக நடத்தல்
3 .வரப்போவதை நன்கு சிந்தித்தல்

இன்பங்கள் ஜோடியாக வருவதில்லை. துன்பமோ தனித்து  வருவதில்லை.

தேவை குறையும் அளவுக்கு தெய்வத்தன்மை கூடும்.

தொலைபேசி உயிர்களின் ஓசை உரசிக்கொள்ள உதவும் உயிரற்ற துணைவன்.

அதிர்ஷ்டமுள்ளவனுக்கு முதல் குழந்தை பெண்ணாயிருக்கும்.

இளமை ஒரு தவறு.

காளைப்பருவம் ஒரு போராட்டம்.

முதுமை ஒரு வருத்தம்.

மன அமைதியான மணவாழ்வு இவ்வுலகில் சொர்க்கம் . பூசல் நிறைந்த  மணவாழ்வு இவ்வுலகில் நரகம்.

Wednesday, April 7, 2010

மகளாக

 என் பெரியப்பாவின் மணிவிழா. எல்லோருக்கும் புத்தாடை வாங்கி தந்தார். முன் நாள் இரவு என் சித்தி இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு அக்கா மாமாவின் மனிவிழவிர்க்கு வந்தார். பெரியப்பவிற்கோ சித்திக்கு ஒரு புது புடவை வாங்கித்தர ஆசை. நேரமும் இல்லை.பணமும் இல்லை. பெரியவர்கள் பேசிக்கொண்டதை கேட்டு நான் அப்பா என்னுடைய புடவைய சித்திக்கு கொடுங்கள். நீங்கள் இதுவரை எனக்கு எத்தனையோ புத்தாடை எடுத்து தந்து இருக்கிறீர்கள். நாளை இருப்பதில் நல்ல புடவையாக உடித்திக்கொண்டு இதுதான் புதுசு என்று சொன்னால் போயிற்று என்றேன். என் பெரியாபவும் பெரியம்மாவும் என்னை ஆரத்தழுவிக்கொண்டு அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நீ எங்கள் வயிற்றில் மகளை பிறந்து இதுபோலவே அன்பு செலுத்தவேண்டும் என்றார்க  அடுத்த ஜென்மம் என்ன ஏழு ஜென்மங்களுக்கும் என் பெரிப்ப பெரியம்மாவின் பாசமிகு மகளாக பிறக்கவே இறவனி வேண்டுகிறேன். அவர்கள் இருவரல் தான் தாயற்ற எங்கள் ஐவரின் வழக்க சிறப்புற அமைந்தது.

Monday, April 5, 2010

மகளாக

 வந்தார். வாசற்படியிலேயே நிற்க வைத்துவிட்டு உள்ளேபோய் விசிறி கொண்டு வந்து காம்பால் நன்கு அடித்தார். யார் தடுத்தும் கேட்கவில்ல. அவளே குழந்தை. சொப்புவைத்து வி லையா த வேண்டிய வயதில் . உங்களை கட்டி  மேய்க்கிறாள் .  இப்படி இன்னொருமுறை அடம் செய்வாயா என்று சொல்லி சொல்லி உதைத்தார்.  இன்றும் அவனும் மறக்கவில்ல்லை. அவன் பெண் பெயர்த்தி வரை சொல்லி கலாட்ட பண்ணுகிறோம். 
                               

Sunday, April 4, 2010

மகளாக

மகளாக  என்ற என் கட்டுரையின் தொடர்ச்சி  பத்து வயதே நிரம்பிய நான் மாலை வேளையில் அப்பா ஆபீசிலிருந்து வந்ததும் குடி தம்பிகள் இருவரும் கைகள் அலம்பி வரக்கூட விடாமல் அப்பாவிடம் தோற்றி கொள்வாகள். ஐந்து பேரையும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு ஆழைத்துப்போவேன். குளத்து அருகிலோ யானை அருகிலோ செல்லாமல் பார்த்துகொள்வேன். ஆறரை மணி ஆனதும் ஓரமாக வீட்டிற்கு அழய்த்துவருவேன். ஒரு முறை திருவிழா சமயம் வழக்கம்போல் என் அப்பா ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பினார். அந்தக்காலத்தில் ஒரு ரூபாய் என்பது பெரிய தொகை.ஆறு பேரும தாரளமாக கடை மிட்டாய் பஞ்சு மிட்டாய் வாங்கி திங்கலாம் சோடா கலர் வாங்கி குடிக்காலம். எல்லாம் முடிந்த பிறகு என் குட்டி தம்பி ரூ அட்டகாசம் செய்தானே. எல்லாரும் வேடிக்கை பார்கிறார்கல் திருப்தி மர சோப்புகள் ஒரு ஓலை கூடையில் வைத்து நான்கு ரொபி விலை சொல்கிறார் அதை வாங்கி தந்தால் தான் வீட்டுக்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறான். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் ஏலம் நல்லவிதமாகவும் மிரட்டியும் பார்க்ரார்கள். பந்தல் காலை ருக்க்பிடித்துகொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கறான். கோபத்தில் மற்ற குழைந்தைகள் அவனை இங்கேயா விட்டு போகலாம் வா அக்கா என்கிறார்கள். எனக்கோ என்ன செய்வது என்று தெரியவல்ல. என் தங்கையை அவனுக்கு துணையாக நிறுத்திவிட்டு வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி அழுதோம் அப்பா உடனே கோவிலுக்கு போய் உந்த சோப்பு கூடையை வாங்கி கொடுத்து வீட்டுக்கு

Sunday, March 14, 2010

மகளாக

என்னுடைய இரண்டாவது பருவம் மகள். என் அம்மா என்னுடைய பத்தாவது வயதில் இறந்துவிட்டார். கூட்டுக்குடும்பத்தில் எனக்கு அம்மாவின் நெருக்கமான உறவே கிடைக்கவில்லை. அத்தையே பள்ளிக்கு தயார் பண்ணுவது சாப்பாடு போடுவது தூங்கவைப்பது என கவனித்துகொண்டதால் தாயின் முகமே நினைவில் இல்லை.இரண்டுசம்பவங்கள் தான் இன்னும் நினைவில் நிற்கின்றன . உட்பால் நலம் சரியில்லாமல் இருந்தபோது என் அம்மா என்னிடம் "தாத்தாவிடம் போய் என்னை பார்க்க வரச்சொல்லு வரும்போது ஒரு ஹார்லிக்ஸ் வாங்கி வரச்சொல்லு" என்றார்.ஏனென்றால் என் முதல் மனைவியின் மகா. பதிமூம்ற்று வயதில் திருமணமாகி வந்துவிட்டவர். பதினாறு வயதில் நானும் அடுத்தடுத்து நான்கு பிள்ளைகளை பெற்று விட்டார். இரண்டாம் தரத்துக்கு பயந்து என் தாத்தா மகளை பார்க்ககூட அதிகம் வரமாட்டார். அம்மா சொன்னதை கேட்டுவிட்ட என் அத்தை உன்னை என்ன குறைவாக வைய்த்திருக்கிறோம் அம்மா என் அப்பாவிடம் கேட்கிறாய் என சண்டை பிடித்தார். அதனால் அந்த சம்பவம் என் நினைவில் நின்றுவிட்டது. மற்றது அம்மா ஒரு காலை வேளையில் முனகும் சப்தம் கேட்டு நான் என்ன அம்மா என்று கேட்டேன். ரொம்பவும் தலைவலிக்கிறது அம்மா என்றார். நான் தலையை  பிடித்துவிடுகிறேன் என்று பிடித்துவிட்டுகொண்டு இருந்தேன். திடீரென விழ்த்து எழுந்த என் அப்பா விவரம் அறிந்து கிட்டே வந்து அம்மாவை உசுப்பினார். அம்மா நினவு தவரிவிட்டிருந்தர், பிறகு எழவே இல்லை. ஒரு மணி நேரத்தில் உயிர் விட்டார்.இந்த இரண்டு சம்பவங்கள் தவிர வேறுதுவும் அம்மா மகள் என்ற உறவின் அடையாளமாக நினைவில்  இல்லை.
                                                        தாயுமாகி நின்றார் என் அப்பா. பெரியப்பா பெரியம்மாவின் தியாகத்தால் அமைந்தது எங்கள் வாழ்க்கை, வெளியூரில் வேலை பார்த்த பெரியப்பா தன குடும்பத்தை கொண்டு போகவில்லை. அதுமுதல் நாங்கள் ஆறு சகோதரர்களிரண்டு சகோதரிகள் எரியாப்பவ்ன் பிள்ளைகலாணோம்.
                                                          குட்டி தம்பி பால் மறந்த ஒன்றரை வயது குழந்தை. சதா அழும் நான்கு வயது ஒரு தம்பி. தாய் ஸ்தானத்தை பத்து வயது அக்க நான் ஏற்று கொண்டேன். குளிப்பாட்டுவது சாதம் ஊட்டுவது இடுப்பில் சுமந்து திரிவது. பள்ளிக்கு மணிஅடிக்கும் ஒலி கேட்டு ஓடுவது வாடிக்கை.
                                                           வகுப்பில் முதல் மாணவி என்பதால் ஆசிரியைகளும்
என் நிலை அறிந்து வீட்டுபாடம் செய்ய சொல்வதில்லை.அம்மாவும் வேறு ஒருவேலையும் என்னை இடுவதில்லை. பதினான்கு வயதிலேய பத்தாம் வகுப்பு எழுதவேண்டும்  தன சலுகை பெற்று எழுதினேன். வகுப்பில் முதல் மதிபெண் பெற்று பத்தாம் வகுப்பு தேறினேன்.
                                                                என் அப்பா இத்தனை நாளும் உன் பெரியம்மா பெற்ற  மகளை விட போற்றி வளர்த்தார்க. நாளைமுதல் காலையில் எழுந்துவிடவேண்டும். அம்மாவுக்கு உதவியாக வீடு வேலைகள் செய்யவேண்டும் என அறிவுரை கூறினார். தாய் அற்ற பிள்ளை சீரற்றது என்ற பழமொழியை நீ மாற்றிக்காட்டி உன் பெறியம்மவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
                                                                   சின்னத்தம்பி பள்ளிக்குபோகும் வயதகிவிட்டான். போக்குவரத்து மிகுந்த சாலையில் நானும் என் தங்கையும் நன்கு தம்பிகளையும் ஆட்டு குட்டிகளை மேய்த்து செல்வதுபோல் அழத்துபோவதை தெருவே வேடிக்கை பார்க்கும். வறுமை காரணமாக தம்பிகளுக்கு பயிண்டு செய்த நோட்டு புத்தகங்களும் எனக்கும் தங்கய்க்கும் பேப்பர் வங்கி தத்த புத்தகமும் தான்
                                                                      நான் பத்தாவது படிக்கும்போது ரூ நோட்சு வாங்கவில்லை.சொந்த பந்தங்கள் எல்லாம் இவர்களைப்போல் பெண்கள் எத்தனைபேர் இருந்தாலும் என்ன கவலை என்று சொல்வார்கள். வளையல்கார செட்டியாரிடம் விளைகேட்காமல்தேர்ந்து எடுக்கமாட்டோம். தய்யல்கார பாய் சொல்லுவார் உன் பெண்கள் ரெண்டுபேரும் உலகத்திலேயே திருத்தி தைக்க சொல்லாத பெண்கள்லப்பா என்பார்.
                                                                         அடுத்து எனக்காக மணமகன் தேர்ந்து எடுத்தார்கள். சற்றே ஒல்லியான தோற்றம் கொண்டவர். உறவினர்கள் எல்லாம் தாயற்ற பெண் அவள் விருப்பம் அர்ந்துக்ன்டீர்கா என்று கேட்டார்கள். என் தாதகப்பன் எனக்கு எது நன்மை என்று தெரிந்து செய்வார்கள். என் எண்ணம் என்று தனியாக ஏதும் ல்லை என்று சொல்லி மனமுவது ஏற்றுக்கொண்டேன்.
                                                                   திருமணமாகி சென்றபிறகும் ஒரு துரும்பு கூட தாய் வீட்டிலிருந்து கேட்டவள் இல்லை. புகுந்த இடத்தில் எல்லோரிடமம் நல்ல பேர் எடுத்து வாழ்ந்தேன். என் தாய்வீட்டில் எதாவது பிரச்னை என்றால் இருங்கள் அப்பாவின் செலல மகள் வருவாள் வந்து அப்பாவை சரிக்கட்டிவிடுவாள் என்று என் வருகைக்காக காத்திருப்பார்கள்.

Saturday, March 6, 2010

ஒரு பெண்ணின் முதல் பருவம்

ஒரு பெண்ணின் வாழ்வில் பல கட்டங்களை கடக்க வேண்டி உள்ளது. தாய் வீட்டில்
பேத்தியாக மகளாக சகோதரியாக என்றும் புகுந்த வீட்டில் மருமகளாக மனைவியாக தாயாக பிறகு மாமியராக பாட்டியாக என பலஉருவம் எடுக்க வேண்டி உள்ளது. எனக்கு எழுபது வயதாகிறது. நான் கடந்துவந்த பாதையை சற்றே திரும்பி பார்க்கிறேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு தந்தை வழி தாத்தா மட்டும்தான் இருந்தார். வீட்டில் நான் முதல் பெண் குழந்தை எனவும் ஆவலோடு தன்  அம்மாவின் பெயரை பங்கஜம் என்று வைத்துவிட்டு சதா அம்மா அம்மா என்றே அழைப்பார். எனக்கு நான்கு வயது முடிவதற்குள் தமிழ் எழுத்துக்கள் ஆங்கில  எழுத்துக்கள் எழுத படிக்க கற்று தந்தார்.நிறங்கள், உடல் உறுப்புகள் பூக்கள் பழங்கள் உறவுகள் வீடு உபயோக சாமான்கள் என அனைத்தையும் சொல்லி கொடுத்தார். நானும் பொறுமையாக கற்றுக்கொண்டேன். ஐந்து வயது முடிந்ததும் பள்ளியில் சேர்க்க அழைத்துப்போனார். தன்  பேத்தியின் திறமையை பெருமையுடன் தலைமை ஆசிரியருடன் சொல்லி காட்டினார்.. அவர்கள் எனக்கு இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள்.
பிறகு நடந்த வேடிக்கையை கேளுங்கள். வகுப்பில் முதல்மாணவியாகஇருப்பேன். ஒரு நாள் கைவேலை வகுப்பிற்கு ஆசிரியை வளையல் துண்டுகளும் பனை ஓலையும் கண்டு வரசொன்னார். நான் மறந்துகொண்டு போகவில்லை, என்னைப்போல் வராத பிள்ளைகளை கையில் பிரம்பால் அடித்தார்கள். என்னைமட்டும் முதல் மாணவி என அலட்சியமா என்று கன்னத்தை நன்றாக திருகிவிட்டர்கள். மத்யம் வீட்டுக்கு போனதும் தாத்தா விசாரணையில் உண்மையை சொல்லிவிட்டேன். வந்ததே கோபம். நேராக ஆசிரியையிடம் போய் இது ஒரு பெரிய குற்றமா குழந்தைகளை  தண்டிக்க என்று கேட்டார்
எல்லா குழந்தையையும்தான்  அடித்தேன். உங்கள் பேத்தி செல்லம் என்றால் வீட்டிலேயே வைத்துபடிக்க வையுங்கள் என்றார். நேராக தலைமை ஆசிரியையிடம் முறையிட்டார் அவர்களும் ஆசிரியைக்கு  ஆதரவாக பேசவும்
மாற்று சான்றிதழ் வாங்கி விட்டு மூன்று மாதங்கள் வீட்டில் பாடம்சொல்லி அடுத்த  வருடம் மூன்றாம் வகுப்பு வேறுபள்ளியில் சேர்த்தார்.
என் அப்பவை அழைத்து என் பேத்தியை பத்தாவதுவரை படிக்கவை என்றார் . அந்த நாட்களில் பெண்வயதுக்கு வந்து விட்டால் பள்ளி படிப்பை நிறுத்தி விடுவார்கள். பாட்டு சொல்லிகொடுத்தார். ஓவிய ஆசிரியராக பச்சையப்பன் பள்ளியில்  வேலை பார்த்தவர். அதனால் ஓவியம் சொல்லி தருவார் . தன்  பேத்தி சகலகலவல்லியாக  விளங்கவேண்டும் என்று கனவுகண்டார்.
வயதான காரணத்தால் கை
கால் பிடித்துவிட சொல்வர் தண்ணீர் குடிக்க கொண்டுவர சொல்லுவர். நான் இன்முகத்தோடு செய்வேன். அதற்கு பரிசாக கதைகள் சொல்லுவார்  . அனால் என்னுடைய பத்தாவது வயதில் தாத்தாவை இழந்துவிட்டேன்.
அவர் சொல்லித்தந்த சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை, பொறுமை, இவையெல்லாம் துணையாக இருந்து என் வாழ்வில் உயர்வை தந்துள்ளது.

சிக்கனமே சிறப்பு தரும்

ஒரு ஊரில் இரண்டு பெண்கள் பால் வியாபாரம் செய்து வந்தார்கள்ஒருத்தியிடம் ஆறு பசுக்களும்ஒருத்தியிடம் இரண்டு பசுக்களும்இருந்தனஇரண்டு பசுக்கள்
வைத்திருந்தவள் பெயர்சுமதி . ஆறு பசுக்கள் வத்திருன்தவள் பெயர் ஆண்டாள்.சுமத் காசி செல்ல புறப்பட்டாள். தன்னிடம் இருந்த 5000ரூபாய்களை சுமதியிடம் தனது கச்யிளிருந்து வந்து வாங்கி கொள்வதாக கூறி சென்றாள் ஆறு மாதங்கள் சென்று திரும்பி வந்து பணத்தை கேட்டால் " நீ பணமே தரவில்லை என்று விட்டாள் இந்தவழக்கை சுமதி பஞ்சாயத்தரிடம் கூறி முறையிட்டாள்
பஞ்சாயத்து தலைவர் மறுநாள் காலை இருவரையும் வரச்சொன்னார் ஆண்டாள் "நான்ஆறு பசுக்கள் வைத்திருப்பவள் இவள் பணத்தை ஏமாற்றுவனா என்று கூறினாள் மறுநாள் அவர்கள் வரும் வழியில் தன்னிர்கொட்டி செராக்கி வைத்தார். இருவருக்கும் ஒரு ஒரு செம்பு தண்ணிர் தந்து கால் கழுவி வர சொன்னார். சுமதி கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு கால்களை சுத்ததிக்கொண்டு மீதம் கொஞ்சம் நீரும் வைத்தாள் ஆனால் ஆண்டாள் நீரை கொட்டிகவிழ்த்து கால்களை சீராக கழுவாமல் வந்தாள் அதா கவனித்த நீதிபதி சுமதி இரண்டு பசுக்கள் வைத்ருந்தலும் பணம் சேர்த்து உன்னிடம் கொடுத்திருப்பல். உண்மையை கூறிவிடு இல்லையென்றால் பெரிய தண்டனை கொடுப்பேன் என்றார் ஆண்டாள் பயந்து உண்மையை ஒத்துக்கொண்டு பணத்தை திருப்பி கொடுத்தாள்.

Thursday, March 4, 2010

இரண்டாவது கதைபுத்திமானே பலவான் . ஒரு மழை மிகுந்த மாலைப் பொழுதில் ஒரு ஆடு தன இரண்டு குட்டிகளுடன் ஒரு குகைக்குள் ஒதுங்கியது சிறிதுநேரத்தில் அந்த குகையில் வசிக்கும் புலி தொலைவில் வருவதைப்பார்த்து ஆட்டு குட்டிகள் பயத்தால் நடுங்கின ஆடு பயப்படாதீர்கள் என்று சொல்லி விட்டு உரக்க "இ ப்போதுதனே ஒரு புலியை முழுதாக சாப்பிட கொடுத்தேன். மறுபடி பசி என்று அழுதால் நான் என்ன செய்வேன்.இந்த குகையில் வசிக்கும் புலி வரட்டும் அதை அடித்து தருகிறேன்" என்றது. அதை கேட்ட புலி தலை தெறிக்க ஓடியது. வழியி ல் பா ரத்த நரி விவரம் கேட்டது. புலியும் நடந்தவற்றை கூறியது. நரி கலகலவென சிரித்துவிட்டு நீங்க எமந்திரகள் நான் ஒரு ஆடும் அதன் இரண்டு குட்டிகளும் குகைக்குள் செல்வதை இபோதுதான் பார்த்தேன். என்னுடன் வாருங்கள் என்றது. புலி நம்பவில்ல. நீ எப்போதுமே தந்திரக்காரன் என்னை ஏமாற்றி விட்டு விட்டு ஓடி விடுவாய் என்றது நரி நீங்கள் நம்பாவிட்டால் உங்கள் வாலுடன் என் வாலை கட்டிகொள்ளுங்கள் என்றது புலியும் அதுபோல் செய்தது இரண்டும் குகைல்க்கு அருகில் சென்றன மறுபடி ஆடுகுட்டிகள் பயந்து அழுதன ஆடு உரக்க "நான் சொன்னதுபோல் நரி மாமா புலியை கட்டி இழுதுவருகிறார் பார்த்திர்களா சற்று பொறுங்கள் புலியை அடித்து தருகிறேன் என்றது. இதை கேட்ட புலி தலை தெறிக்க ஓடிற்று அதன் ஓட்டத்த்க்கு ஈடு கொடுக்க முடியாம நரி படுகாயம் அடைந்தது . ஆடு தன அறிவால் புளிய்டமிருந்து பிழைத்தது

Wednesday, March 3, 2010

எல்லாம் நன்மைக்கே

காண பரம்பரை கதைகள் என்றால் செவிவழிகேட்ட கதைகள் என்று பொருள்.என்னிடம் கதைகேட்கும் வயதில் உள்ள பேரப்பிள்ளைகள் எல்லாம் கண் காணா தொலைவில் உள்ளார்கள். இதைபட்டிப்பவர்கள் எல்லாம் என் பிள்ளைகளே பேரப்பிள்ளைகளே. எனக்கு பிடித்த கதைகளை தினம் ஒன்றாக சொல்லுகிறேன். ஒரு அரசரும் மந்திரியும் கட்டு வழி சென்றுகொண்டிருந்தர்த்கள் அரசர் ஒரு மரத்திலிருந்த காய் ஒன்றை கத்தியால் பறித்தார்.சுண்டுவிரலில் காயம் பட்டு ரத்தம் கொட்டியது. மந்திரி கட்டுபோட்டுவிட்டு எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்வோம் என்றார் என் கையில் ரத்தம் வருவது உனக்கு நன்மையாக தெரிகிறதா தொலைந்துபோ என்று காலால் எட்டி உதைத்தார் மந்திரி பக்கத்தில் இருந்த ஒரு கிணற்றிற்குள் விழுந்து விட்டார். சிறிது நேரத்தில் உந்த வழியாக வந்த நரபலி சாமியார்கள் நால்வர் அரசரை பார்த்து நாம் தேடிவந்த ராஜலக்ஷ்ணம் பொருந்திய ஆள் கிடைத்துவிட்டான் என்று கூச்சலிட்டு அரசரை உடல் முழுதும் சோதித்தார்கள் விரலில் இருந்த வெட்டு காயத்தை பார்த்து அடடா இவன் பின்னப்பட்ட உருவம் பலிக்கு உதவமாட்டான் என்று விட்டு சென்று விட்டார்கள் ராஜா உடனே கிணற்றருகில் சென்று மந்திரியை வெளியே தூக்கி விட்டு நீர் சொன்னது சரிதான் என் கையில் காயம் பட்டதா ல் இன்று உயிர் பிழைத்தேன் நான் உம்மை கிணற்றஇல் தள்ளியதற்காக மன்னித்துவிடு என்றார். அதுவும் நன்மைக்கே மகராஜா என்றார். அது எப்படி என கேட்டார். நான் வெளியே நின்றிருந்தால் உங்களை விட்டு அடுத்ததாக என்னை அல்லவோ பிடித்துபோயிருப்பர்கள் என்று கூறினார். அரசுரும் மந்திரியை பாராட்டினார். எதையும் நன்மைக்கே என்று எடுத்து கொள்ளுவோம்.வாழ்வில் முன்னேறுவோம்.

Saturday, February 27, 2010

என் மாமனார் எண்பத்தாறு வயது வாழ்ந்தார். யோகா செய்ததில்லை வாக்கிங் என்று போனதில்லை சப்பாத்தி சாப்பிட்டதில்லை இரண்டுமுறை ஜுரம் வந்தது தவிர ஒரு நாளும் வீடு சென்றதில்லை . எப்படி? காலை ஐந்து மணிக்கு எழுந்து விடுவார். காலைகடன் முடித்து ஒரு காபி அருந்திவிட்டு குளித்து முடிப்பார். சரியாக ஆறு மணிக்கு டியூஷன் படிக்க பிள்ளைகள் வந்துவிடுவார்கள். ஆறு மணி முதல் எட்டு மணிவரை குரலெடுத்து பாடம் நடத்துவார். அதுவே மூச்சுபயிற்சி.பெரும்பாலும் இட்லி தோசை காலை உணவு. பத்து மணிவரை ஹிந்து பேப்பரை ஒருவரி விடாமல் படிப்பார் .ஒரு வார்த்தைக்கு சரியான பொருள் தெரியவல்லை என்றால் சோம்பல் படாமல் டிக்ஷனரி எடுத்து பொருள் அறிவார். பிறகு எந்த வேலைக்கும் ஒருமைல் வரை நடந்தே சென்று திரும்புவார். ஒரு மணிக்கு சாதம் சாம்பார், ரசம்,தயிர், ஒரு போரியல் என எளிய உணவு திருப்தியாக சாப்பிடுவார். அரைமணி நேரம் குட்டிதூக்கம் . எண்டு மணிமுதல் பாடம் எடுக்க தேவையானவற்றை எழுதி வைத்துக்ல்வார். கடைசி வரை கொஞ்சமும் நடுக்கமின்றி எழுத முடிந்தது. மாலை ஐந்து மணிமுதல் அக்கம்பக்கம் ஏழை மாணவர்குக்கு பாடம். ஆத்மா திருப்தி ஏழரை மணிக்கு சாதம்,ரசம், மோர் என இரவு உணவு. மறுபடிபள்ளிமாணவன் பரிக்ஷைக்கு
படிப்பதுபோல் ஆங்கில புத்தகங்கள படிப்பார் . எட்டரை மணிக்கு ஒரு குவளை பால்.படுக்கைக்கு சீக்கிரம் போ சீக்கிரம் ஏழு என்ற ஆங்கிய பழமொழிக்கு உதரணமாக வாழ்ந்தார். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. காலை முதல் இரவுவரை குறித்த நேரத்தல் குறித்த வேலையை செய்து வந்தால் யோகா செய்யவேண்டாம் வாக்கிங் போகவேண்டாம் சப்பாத்தி சாப்பிடவேண்டாம் மாத்திரை விழுங்கவேண்டம் என் மாமனார் போன்றே அவர் பிள்ளைகள் இருவரும் எழுபத்திரண்டு எழுபதிஎழு வயதில் ஆரோகியமாக் வழுகிரர்க. இனியும் வாழ்வார்கள் .

Thursday, February 25, 2010

சிறு குறிப்புகள்.

சின்ன குழந்தையை ஒரு வயதுவரை நேரம் கிடக்கும்போதேல்லாம் மடியில் தூக்கி வைத்து பேச்சு கொடுக்கவேண்டும். கால்களை மெதுவாக பிடித்து விடவேண்டும.படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்ககூடாது. புட்டியி பா ல் கொடுப்பதானாலும்மடியில்தூக்கி வைத்துக்கொண்டு கைகளால் அரவணைத்துக்கொண்டு தரவேண்டும். தூளியை தாழ்வாக கட்டவேண்டும். தூளி பழகாமல் இருப்பது நன்று முகத்தில் பவுடர் போடகூடாது. காதில் பட்ஸ் போட்டு துடைக்காமல் மெல்லிய துணிய திரித்து போட்டு சுத்தம் செயலாம். ஆறு அல்லது ஏழாம் மாதம் சாதம் கொடுக்கும் போது கரண்டியால் நன்றாக மசித்து கொடுத்து பழக வேண்டும். மிக்சிய்ல் அடித்து கொடுத்து பழகிவிட்டால் வெகு நாட்களுக்கு அதேபோல் குழந்தை கேட்கும். போகும் இடத்திலெல்லாம் சாப்பிட முடியாமல் சிரமப்படும்.

Tuesday, February 23, 2010

சன்ன சின்ன குறிப்புகள் : குழந்தைவாயில் எதை யாவது போட்டு கொண் டு தொண்டையில் சிக்கிக்கொண்டால் கைவிட்டு எடுக்க ப்பதோ தண்ணீர் கொடுபதோ தவறு. உடனே தலை கீழாக தூக்கி பிடித்து முதுகில் பலமாக ரெண்டு தட்டு தட்டுங்கள். சிக்கிய பொறு வெளிய வந்துவிடும். மூக்கில் எதாவுது போட்டுகொண்டால் மறுபக்கம் மூக்கில் துணியை திரித்து ஒட்டு ரெண்டு மூன்று தும்ம ல் போடா வையுங்கள். கத்தில் எதுபோட்டுகொண்டலும் நாமாக எடுக்க முயற்சிக்க கூடாது. கண்ணில் எது விழுந்தாலும் எடுக்க முயற்சிக்ககூடாது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அயன் பாக்ஸ் , ஷேவிங் செட்,காய்கறி நறுக்கும் கத்தி போன்ற வைகளை உடன உரிய இடத்தல் வைத்துவிட வேண்டும்.
இரண்டு குழந்தைகள் வீட்டில் இருந்தால் சின்ன குழந்தை சதா உங்கள் கண் காணிப்பில் இருக்க வேண்டும் பெரிய குழந்தை கீழே போடும் பென்சில் சிறிய ரப்பர் துண்டுக்கள்,விளையாட்டு பொருட்கள் சன்ன குழந்தை எடுத்து வாயல் போட வாய்ப்பு உள்ளது
சாலையில் செல்லும்போது குழந்தையை இடதுபக்கம் இருக்கும்படி பார்த்து ல்கொள்ளல் வேண்டும். அவர்கள் கரத்தை நாம்தான் பிடித்துக்கொள்ள வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தி ல் தனியாக விட்டு விட்டு பக்கதில்தனே ஏதாவது வாங்கி கொண்டோ பேசிக்கொண்டோ இருக்க கூடாது.

Saturday, February 20, 2010

என் கவிதை யார் படிப்பார் உன்ன விட்டால்

என் வயதோ எழுபது தோற்றமோ அறுபது கேட்கும் பார்க்கும் திறனுக்கோ வயது ஐம்பது ஓடியாடி வேலை செய்யும் உடலுக்கு வயது நாற்பது ஆனால் வுள்ளத்த்ற்கோ வயது பத்து நிறைவேறாத ஆசைகள் பலவுண்டு அவற்றில் சில தாய் மடிஇ ல் படுத்து கதை கேட்க ஆசை தந்தை கை பிடித்து கடலாட ஆசை கட்டம் போட்டு பாண்டி ஆட ஆசை கா கொலுசு சத்தம்ஒ லிக்க ஓடி ஆட ஆசை ரங்கராட்டினம் ஏறி சுற்றிவர ஆசை குச் சிஐசு வாங்கி மெதுவாய் சுவைத்து தின்ன ஆசை ரெட்ட சடை போட்டு ரிப்பன் வக்க அசை கல்லுரி சென்று முதுகலை பட்டம் பெற ஆசை நிறைவேறா ஆசைகள் நிறைய உண்டு என் மனதில் அனால் இன்றிருக்கும் ஆசையோ ஒன்றே ஒன்றுதான் வீடு போ என்று சலிப்புற்று சொல்லுமுன் காடு சென்று விட கொண்டுளேன் ஓர் ஆசை

Wednesday, February 17, 2010

முதிய வயதில் தன்மையில் இருக்கவேண்டி உள்ளதா? புத்தகங்களை துணையாக நினையுங்கள் . அண்டை அயல் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுங்கள் கோயில் அல்லது பூங்கா என் மக்கள் கூ டும் இடங்களுக்கு செல்லுங்கள் .உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு சிரமம் பாராமல் செல்லுங்கள் . நண்பர்கள் உறவினர்களை பார்த்தால் மனம் மகிழும். தனியாக் வாழும் பெண் என்றால் இரண்டு அல்லது மூன்று மாணவி களை பணம் கொடுத்து தங்கும் விருந்தினராக ஏற்று கொள்ளுங்கள் . துணைக்கு துணையும் ஆயிற்று.உங்கள்ளுக்கு சமைக்கவும் ஆர்வம் வரும்.அதுவும் முடியாத நேரம் வரும்போது கவுரவம் பாராமல் தகுதிக்கு ஏற்ற முதியோர் இல்லத்தில் சேருவதே புத்தி சாலித்தனம். வயதான காலத்தில் பேச்சு துணை தான் மனம் நாடும். இந்த அவசர உலகில் தன மாணவி மக்களுடனே பேச நேரம் இன்றி ஓடும் பிள்ளய்க்கு நம்மோடு தினமும் பேச நேரம் எது ?

Wednesday, February 10, 2010

என்னைப்பற்றிய குறிப்பு

பெயர் பங்கஜம் வயது எழுபது இல்லத்தரசி பத்தாம் வகுப்பு தேர்ச்சி