Saturday, September 25, 2010

எங்கேயோ படித்தவை

மாங்கல்யம் 9  இழைகளை  கொண்டது.
  1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளல் .
  2. மேன்மை                  
  3. ஆற்றல்.                     
  4. தூய்மை
  5. தெய்வீக குணம்
  6. உத்தமகுணங்கள்
  7. விவேகம்
  8. தன்னடக்கம்
  9. தொண்டு மனம்
இவற்றை ஒரு பெண் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம்
அமைக்கப்பட்டுள்ளது.

 
  • செருப்பு தேயும்போது கால் ஜாக்கிரதை ஆகி விடவேண்டும்.
  • வயது ஏறும்போது பண சேமிப்பு பத்திரமாக இருக்கவேண்டும்.
  • மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல விடாமுயற்சியினால்தான்.
  • பசி வந்திடப்பத்தும் பறந்து போகும். மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை மற்றும்  காமம் இவையே அந்த பத்தும்
  • பயமும் தயக்கமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  • பிடிவாதக்காரன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். 
  • வளமையில் வலது கை உழைப்பு இடது கை சிக்கனம்
  • பசித்தவனுக்கு சமாதானம் கூற முடியாது. பசித்தவனுக்கு காதுகள் கிடையாது                                                 
சாணக்யன்


முப்பது வருடங்களுக்கு முன் தினத்தந்தியில்  தினமும் சாணக்யன் சொல் என்று படத்துடன் ஒரு  சொல் வெளிவரும். என பிள்ளைகளை பிடிவாதக்கார குழந்தைகள் என்று யாரவது சொன்னால் நான் உடனே பிடிவாதக்காரன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் நான் சொல்லவில்லை சாணக்யன் சொல்லிப்போயிருக்கிறார் என்று சொல்வேன்.
அதனால் தான் எந்த வயதிலும் படிப்பை ஒரு சவாலாக ஏற்று படித்து  ஜெயித்து  காட்டுகிறார்கள். இதை நினைத்து  நான் பெருமைப்படுகிறேன்.

No comments:

Post a Comment