Thursday, February 28, 2013

இந்தவாரம் குமுதம் இதழில் பட்டுகோ ட்டை பிரபாகரன் தன குறுநாவலில் கூறுகிறார் எது நடந்தாலும் ஏற்கும் பக்குவம் எ தையும் எதிர்பார்க்காத மனநிலையும் மரணம் பற்றிய பயமும் இல்லாதவர்களுக்கு கடவுள் ஒரு அவசியமற்ற ஆசாமி இது அவருடைய கதாநாயகன் ஒரு போலீஸ்ஆபிசர் பேசும் பேச்சு. அதே ஆபிசரின் மனைவியும் மகளும் இருக்கும் ஒரு மாலில் குண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிந்ததும் கடவுளே எதுவும் நிகழ கூடாது சத்தியமாக உன்னை பிரார்த்திக்கிறேன் என்று கதறி அழுகிறாராம் . மனிதனால் ஒன்றுமே செய்ய முடியாத சூழல் வரும்போது கடுவுள் துனையை நாடியே தீருவான்.

Monday, February 25, 2013

நான் எழுதுவதை படிப்பவர்கள் எல்லாம் என்னைவிட வயதில் சின்னவர்கள் ல்தான் இருந்தாலும் எழுதுகிறேன்.
அறுபது வயதானால் மூலையிலுள்ள செல்கள் அழிய ஆரம்பிக்கின்றனவாம்.
அதனால்தான் கவனக்குறை மறதி.எதையும் புதிதாக கற்றுக்கொள்ள இயலாமை எல்லாம் என்கிறார்கள்.
புத்தியை தீட்டுவோம்.குறுக்கெழுத்து போட்டிகள் ஆறு வித்தியாசம் போன்றவற்றை அனுப்பாவிட்டாலும் எழுதி வைத்துக்கொண்டு நம் விடைகளை சரிபார்த்து மகிழ்வோம். sudaku  போட்டு ப்ழகுவோம்.முதுமையை விரட்டுவோம்.


.

Sunday, February 17, 2013

இளம் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு தேர்வுகள் ஆரம்பித்துவிடும். இன்னும் இரண்டு மாத ங்களுக்கு அவர்களுக்கும் ஓயவில்லை உங்களுக்கும் தூக்கம் இல்லை,
தேர்வுகள் முடிந்ததும் அவர்களை எந்த கோடை விடுமுறை வகுப்பில் சேர்க்கலாம் என்று திட்ட மிதாதீர்கள்.
வழக்கமாக எல்லோரும் கூறுவதுதான் நான் ஒன்றும் புதிதாக கூறப்போவதில்லை.
இரண்டுமாதங்கள் குழந்தைகள் மகிழ்வுடனும் ஓய்வாகவும் இருக்கத்தான் விடுமுறை. இந்த ரெண்டு மாதம்  சொல்லி தரும் ஒரு மொழியோ ஒரு கலையோ ஒன்றும் உபயோகப்படுவதில்லை. அவர்களை உங்கள் சொந்த ஊருக்கு பெற்றோர் அல்லது உறவினர் இருக்கும் ஊருக்கு அழைத்துசெல்லுங்கள்
படங்களில் பார்த்த மிருகங்களைடிவிஎஸ்  50 வந்தது கழு தை காணாமல் போயிற்று  ஆட்டோ வந்தது மாட்டுவண்டி குதிரைவண்டி மறைந்து போயிற்று பேக்கட் பால் வந்தது பசுமாடு காணோம்tractor வந்தது எருதைக்கா னோம். இப்படி எத்தனை எத்தனை காணோ மகள்.
கொ டியில் பாம்பு போல் தொங்கும் புடலை  தாரா க தொங்கும் வாழை
குலை குலையாக  காய்த்திருக்கும் தென்னை  இவற்றை எல்லாம் உங்கள் குழநதிகள் அதிசயமாக பார்ப்பார்கள்.
அதோடு பேரப்பிள்ளைகளை கண்டதும் உங்கள் அம்மா செய்து தரும் ஆப்பம் குழை புட்டு பணியாரம் நாட்டுக்கோழி குழம்பு புது சா பிடித்த மீன் குழம்பு
ம் நீங்களும் ரசித்து சாப்பிடுங்கள்.
பக்கத்தில் உள்ள வயல் வெளிக்கு போய்  பம்ப் செட்டில் ஆசை தீர குளியுங்கள் கட்டு சாதத்தை ருசித்து விட்டு மாலை வரை ஓடியாடி விளையாடுங்கள். வஞ்சனையின்றி ரெண்டு தாத்த வீட்டிலும் பதினைந்து நாட்கள் இருக்கட்டும் கடைசி 15 நாட்கள் நகர்புறத்து கேளிக்கைகளையும் காட்டுங்கள். இந்த இரண்டு மாத கொண்டாட்டம் அடுத்த பத்து மாதங்களுக்கு தாங்கும். அதுத்த விடுமுறை எப்போது வரும் என்று மனது எங்கும் உங்களுக்கு  ம்தான். வேலைக்கு போகுக் பெற்றொர இப்போதே உங்களுக்கு 15 விடுமுறை சொல்லி விடும்கள். உங்கள் குழந்தைகளின் பேச்சுக்கள் சாகசங்கள் எல்லாவறதிரையும் உங்கள் பெற்றோரும் ஊர் மக்களும் வாய் பிளந்து பார்க்க வேண்டாமா.



Friday, February 15, 2013

ஆங்கில அகராதியில் புகழ் பெற்றது ஆக்ச்போர்ட் கலாசாலை தொகுத்துள்ள அகராதி தான் என்பது எல்லோரும் அறிந்த செய்தியே
அதன் பின்னணியில் மகத்தான அதிசயிக்க தக்க ஒர் உண்மை அடங்கி உள்ளதாம்
ஜேம்ஸ் முர்ரே என்பவர் அகராதியை  உருவாக்கி கொண்டு இருந்தபோது
ஒரு நபரிடமிருந்து ஆக்கபூர்வமான அருமையான கருத்துக்கள் தினமும் வந்தவண்ணமிருந்தன.
முர்ரே அந்த அறிவாளியை நேர்ல் சம்தித்துநன்றி கூற விரும்பினார். அவரோ தான் உட ல் நலமின்றி இருப்பதால் பயணம் செய்து வர இயலாது என்று தன விலாசத்தை கூறி நேரில் வந்தால் சந்தி க்க ஆர்வமுடன் இருப்பதா கம் கூறி இருந்தார்
முர்றேவும் குறிப்பிட்ட விலாசத்திற்கு நேரில் சென்றார். அது ஒரு மனநோயாக்ளிகள் காப்பகம் என்றும் அந்த குறிப்பிட்ட நபர் மினார்ஸ் என்பவர் குநமடைந்து  வரும் ஒரு மன நோயாளி என்றும் கூறி அவரிடம் அழைத்து சென்றார்கள்.படிப்பதில் அவருக்கிருந்த ஆர்வமரிந்து நிறைய புத்தகங்களை வழங்கினார்கள் .அகராதி தயாராகும் செய்தி அறிந்து அவர் மனம் ஒரு பரபரப்பையும் மகிழிச்சியும் உண்டாகி உங்களுக்கு  பல யோசனைகள் கூறி கடிதம் போட  ஆரம்பித்தார் . நாங்களும் அலட்சியப்படுத்தாமல் உங்களுக்கு அனுப்பி வைத்தோம் என்றார்கள். இரு மாமேதை களுக்கிடையேயான   சந்திப்பு நீண்ட நேரம் நடந்த்தது பிறகு அவர்கள் சந்திக்கவே இல்லை.மினார்ஸ் மனநலம் தெளிந்து வாழ்நாள் முமுழுதும் த்யானத்தில் ஈடு பட்டார்.

Wednesday, February 13, 2013

நேற்று நானும்தான் கமலஹசனின் விஸ்வரூபம் பார்த்தேன் கமலின் தீவிர ரசிகை நான். இருந்தும் ஒரு உண்மையை சொல்லியே ஆகவேண்டு.ம்
கமலின் ரசிகர்களில் 25 விழுக்காடு ரசிகர்களையே திருப்திப்படுத்தும் அதுவும் ஹாலிவுட் படங்களை பார்க்கும் படித்தவர்கள் தான் அவற்றுடன் இதை ஒப்பிட்டு அஹா ஓஹோ  என்று பாராட்டமுடியும். நாயகனிலும் தேவர்மகனிலும் பார்க்காத நடிப்பா சலங்கை ஒழி யில் ஆடாத ஆட்டமா.
பக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை வைத்துக்கொண்டுதான்  படம் பார்க்க வேண்டும்போல் உள்ளதுகதை யிலும் என்ன புதுமையா கிடையாது
பாவம் கமலை பாராட்டி மறுபடி ஏகத்துக்கு நஷ்டப்படவைக்காதீர்கள். கமலிடமிறந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பததெல்லாம் மிகைப்படுத்தாத நடிப்பு ஒன்றே. 

Tuesday, February 12, 2013

ஒரு முதியவர் தினமும் மதியவேளையில் இரண்டு குழந்தைகளுக்கு உணவு அளித்துவந்தார்.
 ஒரு நாள் சரியான குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை. முதியவருக்கோ வேறு வேலைகள் காத்திருந்தன. இருந்தும் குழந்தைகள் ஏமாற்றமடய்ந்து விடுமே என்று காத்திருந்தார். அந்த எட்டு வயது சிறுமி மூன்று மூன்று வயது பையனை  இடுப்பில் சுமந்து வந்தாள் வரும் வழியில் சிறுவன் காலில் முள் குத்தி நடக்க முடியாமல் போனதாகவும் அவனை தூக்கி கொண்டு  நடந்து வர தாமதமாகி விட்டதென்றும் மன்னிப்பு கேட்டாள் முதியவர் நீயோ சின்ன பெண் அவனை தூக்குவது பளுவாக  இல்லையா என்று கேட்டார். சட்டென்று அவன் என் தம்பியாயச்சே  என்று கூறி அச்சத்திநாள்
 இதைதான் கவியரசு பாடினார் மண்ணுக்கு மரம் பாரமா எகொடிக்கு காய் பாரமா என்று 

Monday, February 11, 2013

என் பேரன் அஸ்வத்துக்கு ஏழு வயதாக இருந்த பொது தெருவில் ஒரு கழைகூத்தை இருவரும் ரசித்து பார்த்தோம். ஒரு கம்பியின் மேல் ஆறு வயது பெண்  தலைமீது ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று கப் சாசர்களை ஏந்தி ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு நடந்து சென்று எல்லோர் பாராட்டையும் பெற்றாள்  கீழே இறங்கி வந்து காசு வசூலிக்க  ஆரம்பித்தால், நானும் கையில் பத்து ருபாய் வைத்து காத்திருந்தேன். என் பேரன் அதை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு அருகில் உள்ள கடைக்கு போ ய் இரண்டு கேக்குகளை வாங்கி வந்து அந்த குழந்தையிடம் சாப்பிடு பாப்பா என்று தந்தான், அந்த குழந்தை முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி. சாரி பாட்டி அந்த ரூபாயை தட்டில் போட்டிருந்தால் அந்த குழந்தைக்கு பத்து பைசா மணிலா பயறு கூட வாங்கி தருவானோ சந்தேகம் தான் அதனால் தான் உன்னிடம் கூட சொல்லாமல் செய்துவிட்டேன் என்றான். தகப்பன் சாமிகள் என்றும் உண்டு. அன்றுமுதல் குழந்தையுடன் பிச்சை கேட்பவர்களுக்கு ஒரு பன்னோ பாலோ வாங்கித்தருவேன் காசு கொடுப்பதில்லை 
எங்கயோ படித்தவை
உங்கள் குழந்தைகளுக்கு உணவை உண்பதற்குமுன் அதை அளித்தகடவுளுக்கு நப்ற்றி சொல்வதுடன் அதை உண்ணுவதற்கு பசியையும் அளித்தமைக்கு நன்றி கூற பழகுங்கள். ஏனென்றால் பசி இருப்பவனுக்கு வேலைக்கு உணவு கிடைப்பதில்லை. பல்சுவை உணவுகள் உன்ன வசதி படைத்தவனுக்கு பசி எடுப்பத்தில்லை. இரண்டும் பெற்றவன் பெரிய பாக்ய சாலி அல்லவா.

ஓய்வு என்பது கைகாலை நீட்டி படுப்பது தான் இல்லை. ஒரு வேலை தொடர்சியாகசெய் வதிலிருந்தி அதை விட கொஞ்சம் எளிமையான வேலைக்கு மாறினாலே ஓய்வுதான்.
பெரிய பொறுப்பான பதவி வகிப்பவர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு நஅங்கு மணி நேரம் தூங்காமல் உழைக்கிறார்கள்.


Sunday, February 10, 2013



  • inspiration என்ற வார்த்தைக்கு தூண்டுகோல் அல்லது முன்னுதாரணம் என்று எண்ணு கிறேன் லிப்கோ கையகராதியில் பார்த்தால் உள்ளுணர்வு ஆதமவலர்ச்சி என்று ஏதேதோ போட்டுள்ளது.
    நமக்கு பெரிய ஆட்கள் தான் inspiration ஆகா இருக்க வேண்டு என்ற அவசியமில்லை
    என்னுடைய 73வது வயதில் கொஞ்சம் சோர்வாக எண்ணினால் உடனே என் மாமியாரை நினைத்துக்கொள்வேன் 86வயதிலும் அடுப்படியில் புகுந்து அருமையாக் சமைப்பார்கள். தன்னக்கு வேநீர்வைது எடுத்து ஊற்றிக்கொண்டு குளிப்பார்கள். துணிக்கு சோப்பு போட்டு ஊறவைப்பார்கள் அதையல்லாம் எண்ணிக்கொண்டு நமக்கு என்ன 73 வயதில் சோர்வு என உடனே எழுந்து சுருசுருப்பாகிவிடுவேன்.
    எங்கள் வீட்டிலிருந்து பெருமாள் கோயில் சிறிது தொலைவுதான். போகும்போது விரைவாக போய்விடுவேன். திரும்பும்போது சற்று தளர்வாக உணர்வேன். அங்குகோயிலுக்கு பக்க த்தில் என் வயது மூதாட்டி ஒருவர இட்லி வியாபாரம் செய்கிறார். ஒரு மூதாட்டி இடுப்பில் கூடையில் காய்கறி சுமந்துகொண்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் விற்கிறார்.
    அவர்கள் இருவரையும் பார்த்ததும் கடவுள் நம்மை எவ்வளவு வசதியுடனும் ஆரோஞமாகவும் வைத்திருக்கிறார். இன்னும் குறைந்த பட்சம் பத்தாண்டுகளாவது வேலை செய்யவேண்டும் என்று எண்ணிக்கொள்வேன்.
    Like ·  ·  · Promote · 4 minutes ago · 
என் எஸ் கிருஷ்ணன் வாழ்க்கையில் நடந்த வேறொரு சம்பவம்
 கலைவாணர் ரஷ்யா சென்றிருந்தபோது மொழிப்ப்ரச்னை. உணவகத்தில் உள்ளோருக்கு ஆங்கிலம் தெரியாது. கலைவானரும் நண்பரும் தெரியாத பொருள் எதை கேட்டு சாபிடுவது பேசாமல் கோழிமுட்டைகள் வாங்கி சாப்பிட்டு சற்றே வயிறு நிரப்பலாம் என்று சைகையில் சொல்லி புரிய வைக்க பார்த்தார்கள். முட்டை தவிர ஏதேதோ கொண்டு காட்டு  கிரான் உடனே கலைவாணருக்கு ஒரு ஐடியா தோன்றியது நண்பரிடமிருந்த பேனாவையும்
தாளையும் வாங்கி ஒரு கோழி படம் போட்டு பக்கத்தில் நன்கு முட்டைகள் படம் போட்டு காண்பித்தார் அடுத்த ரெண்டாவது நிமிடம் முட்டைகள் வந்து சேர்ந்தன. படிப்பறிவு என்பது வேறு பொது அறிவு என்பது பிறப்போடு வருவது.
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.
ஒரு நாள் அவர் நண்பருடன் அவர் வீட்டு முகப்பில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ஒரு வயதான மூதாட்டியும் ஒரு இளம் கர்ப்பிணி பெண்ணும் வந்தார்கள். அந்த பெண்ணுக்கு நிறை மாதம் என்றும் ஏ தாவது பொருள் உதவி செய்யுமாறும் கெஞ்சி கேட்டார்கள். ஐந்து நிமிடங்கள் சென்றதும் இருபது ரூபாய் தந்தார் அந்தகாலத்தில் இருபதுரூபை என்பது பெரிய தொகை. ரொம்ப மகிழ்வோடு இருவரும் வணக்கம் சொல்லி கிளம்ப இருக்கும்போது ஏனம்மா பணம் கொடுத்து விட்டேனே இடுப்பில் சுற்றியுள்ள தலையணையை அவிழ்த்துவிட்டு நிம்மதியாக போ என்றார். இரண்டு பெரும் நாடு நடுங்கி அவர் காலில் விழுந்து மன்னிப்புகேட்டு விட்டு இடுப்பில் இருந்த துநிமூரையை அவிழ்த்தார்கள். நண்பர் அ வர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்தும் இவ்வளவு  நேரம் பேசிவிட்டு பணமும் கொடுக்கிறீர்களே என்று கேட்டார். அவர்கள் நடிப்பை கொஞ்ச நேரம் ரசித்தேன். அவர்களை பாராட்டி பரிசளிக்கவில்லை என்றால் நான் கலைஞனே அல்ல .என்றார்.

Wednesday, February 6, 2013

மனிதன் தன்னுடைய அறுபது வயதுவரை நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட நேரமில்லை. ரசித்து ஓரி பாட்டையோ கேட்க நேரமில்லை
ஒரு படத்தையோ இயற்க்கை காட்சியையோ பார்க்க நேரம்ல்லை.
ஓடியட்டி உழைத்த கால்களுக்கோ நாலு இடம் செல்ல வலுவில்லை.
காது மந்தமாகி விடுகிறது கண் பார்வை குறைந்து விடுகிறது நடையில் தள்ளாட்டம் வந்துவிடுகிறது
ஆனால்  இந்த நாக்கு மட்டும் கூர்மையாகி விடுகிறது.
உடம்புக்கு ஒத்துகொள்ளது எனதெரிந்தும் ஆசைப்படுகிறது  நம் பேச்சு
எடுபடாது என தெரிந்தும் பேச துடிக்கிறது.
அந்த நாக்கை மட்டும் அடக்கி வாழ்ந்தால் கவாழ்க்கை இன்பமே.

Saturday, February 2, 2013

அதோ அந்த மரம் வெட்டுப்பட்ட அடையாலங் களோடு நிற்கிறது எங்கலை ய்ப்போல
அருகில் நட்ட கன்றுகள் செழித்து வளருகின்றன உங்களைப்போல
மரம் ஒரு பெருங்காற்றை எதிர்பார்த்திருக்கிறது கன்றுகள் மேல் பூமாரிப்பொழிய

அடுப்பு என்னவோ அதே அளவில் தான் உள்ளது
அடுப்பின்மேல் வைக்கும் பாத்திரங்கள்தான் நல்லுக்கு நாள் இலட்துவருகின்றன














எங்கேயோ படித்தவை
சீனாக்காரனின் கண்டுபிடுப்புகளியே மிகச்சிறந்தது கொசு பேட் மட்டுமே. அதுவோன்றால்தான் கொசுவைகொல் ல் முடிகிறது.