என் பேரன் அஸ்வத்துக்கு ஏழு வயதாக இருந்த பொது தெருவில் ஒரு கழைகூத்தை இருவரும் ரசித்து பார்த்தோம். ஒரு கம்பியின் மேல் ஆறு வயது பெண் தலைமீது ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று கப் சாசர்களை ஏந்தி ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு நடந்து சென்று எல்லோர் பாராட்டையும் பெற்றாள் கீழே இறங்கி வந்து காசு வசூலிக்க ஆரம்பித்தால், நானும் கையில் பத்து ருபாய் வைத்து காத்திருந்தேன். என் பேரன் அதை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு அருகில் உள்ள கடைக்கு போ ய் இரண்டு கேக்குகளை வாங்கி வந்து அந்த குழந்தையிடம் சாப்பிடு பாப்பா என்று தந்தான், அந்த குழந்தை முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி. சாரி பாட்டி அந்த ரூபாயை தட்டில் போட்டிருந்தால் அந்த குழந்தைக்கு பத்து பைசா மணிலா பயறு கூட வாங்கி தருவானோ சந்தேகம் தான் அதனால் தான் உன்னிடம் கூட சொல்லாமல் செய்துவிட்டேன் என்றான். தகப்பன் சாமிகள் என்றும் உண்டு. அன்றுமுதல் குழந்தையுடன் பிச்சை கேட்பவர்களுக்கு ஒரு பன்னோ பாலோ வாங்கித்தருவேன் காசு கொடுப்பதில்லை
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment