Sunday, April 21, 2013

சேவை கைம்மாறு  கருதாத  தாக  இருக்க வேண்டும். செய்த சேவையை வெளிப்படுத்துவதும் அதற்காக பாராட்டை எதிர்பார்ப்பதும் கூடாது  சாய் பாபா.
 ஆ னால் பெற்ற உதவிக்கு உடனே நன்றி சொல்வது மனிதனுடைய தலையாய கடமை அதையும் மறக்க கூடாது. பங்கஜம்
பற்றில்லாத வாழ்க்கையில் தான் திருப்தி இருக்கிறது. சாய் பாபா
எதிர்பார்ப்புகள் குறைய குறைய எஏ மாற்றங்களும் குறையும்.பங்கஜம்
மனித நேயம் நல்லொழுக்கம் கருணை ஆகிய குணங்கள் மனிதனுக்கு அவசியம். இவற்றை  க்கற்றுத்தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை. சாய் பாபா.
இதைதான் வள்ளுவர்  உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல கற்றும் கள்ளன் அறிவிலாதான் என்று கூறி உள்ளார்.
ஔவையார் முதல் வரியில் ஏற்பது இகழ்ச்சி என கூறி விட்டு அடுத்த வரியில் ஐயமிட்டு உன் அன்று கூறி உள்ளாரே இது என்ன முரண்பட்டு என எண்ணிக்கொள்வேன்.
நானே மறுபடி மிக அதிக தேவை என்றாலோழிய ஏற்பது இகழ்ச்சி என கொள்ளவேண்டும்.
வசதி படைத்தவன் ஐயமிட்டு உன் பசியோருவனுக்கு உணவிட்டுதான் அவன் சாப்பிடவேண்டும் என்ற பொருள் கொள்ளவேண்டும் என எண்ணிக்கொள்வேன் சரிதானே பங்கஜம்
தயவுசெய்து , நன்றி, மன்னிக்கவும் என்ற மூன்று வார்த்தைகளை அவ்வபோது பயன் படுத்தினால் நம்மை சுற்றி நிறைய நண்பர்கள் இருப்பார்கள். 
சூரிய உதயத்திற்கு  முன் எழுபவர் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். அவ்வையார்.
புத்துணர்வு பெற வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வோம். வாரியார்.
வாழும் காலத்திலேயே நல்லது செய்துவிடுங்கள். வள்ளுவர்.
பணியாள் மீது இறக்கம் கொள்ளுங்கள். நபிகள்நாயகம்.
கடந்த காலத்தை எண்ணி வருந்தாதீர்கள்.  ஸ்ரீ அன்னை.
நேர்மை இருந்தால் இறையருள் கிடைப்பதை உணரலாம். ஸ்ரீ அன்னை

மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் சமைக்கப்படும் உணவிற்கு சுவை அதிகம்  சாய்பாபா. அதுதான் தாயின் சமையல் ருசிக்க காரணம் இது பங்கஜம். .

Saturday, April 13, 2013

சரியானதோர் திட்டம் சாலையின் வரைபடம் மாதிரி
உங்கள் இலக்கை சென்றடைய அதுவே சிறந்த வழி
அறிவாற்றலின் பயன் அறிதாக்வே இனங்கா னப்படுகிறது
அது கடின காரியங்களையும் எளிதாக்கும் திறன்.

வாழ்க்கையை உருவாக்க பயன்படும் காலத்தை வீனாக்காதீர்கள்.
உங்களால்  முடிந்தவரை ஒவ்வொரு கனத்தையும் பயனுள்ளதாக்குங்கள் அது
அளவின்றி வழங்கப்படவில்லை நம் கைகளில்

யார் வாக்கு தவராதவனோ நேர்மையாய்  சிந்திக்கிரவனோ
வெளிப்படையாய் பேசுகிறவனோ மக்கள் அவனையே மதிக்கின்றனர்
அவனிடம் நம்பிக்கை வைக்கின்றனர்
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடா முயற்ச்சியை நண்பனாக்கி கொள்ளுங்கள்
அனுபவத்தை ஆலோசகராகி கொள்ளுங்கள் அச்ச்சரிக்கை சகோதரனாக இருக்கட்டும். நம்பிக்கை அறிவு மிக்க பாதுகாவலரை இருக்கட்டும்.
பயன் படுத்தாத துணிவு தன்னால் குறைந்துவிடும்.
பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு பாழாகி போய் விடும்.
மதிப்பு மிக்க எதுவும் எளிதாய் கைக்கு வந்து விடாது உழையுங்கள்'
தொடர்ந்து உழையுங்கள் கடினமாய் உழையுங்கள் அதுவே நிலையான
பலன்களை தரும்இவை யெல்லாம் சிகரம் எட்ட என தினமலரில் வந்த கருத்துக்கள்.




பாலம் நொறுங்கி விழும் காட்சி என்றால் நாம் போகும் பஸ்ஸே பாலாதில் திடீரென விழுகிறது வெள்ளம் என்றால் பஸ்சின் உள்ளே தண்ணீர் புகுந்து நம் நம் துணிகளை நனைத்து விடுகிறது நெருப்பு என்றால் கண்ணெதிரே பெரிய பெரிய என்னை பீப்பாக்கள் வெடித்து சிதறும் தீயை அள்ளி கொட்டும் எல்லாம் ஒரு நிமிடம்தான் அடுத்த நிமிடம் மாயஅஜாலம் போல் அனைத்தும் மறைந்து விடும். இதையெல்லாம் பார்க்க நாங்கள் என்ன புண்ணியம்  செய்தோமோ.நல்ல மக்களை பெற்று அவர்கள் நல்ல நிலையில் இருந்து நாங்களும் ஆரோகயா  முடன் இருப்பது கடவுள் அருளே. 

Tuesday, April 9, 2013

universal  studio தொடர்ச்சி.
பல வருடங்களுக்கு முன் மிக பிரபலமாக ஓடிய ET  என்ற science fiction film எடுத்ததை அப்படியே வைத்திருக்கிறார்கள்.
ஓடு கயிற்றில் தொங்கும் தொட்ட்ளில் சைக்கில் போன்ற அமைப்பு.
பத்திரமாக உட்காரவைத்து கம்பி சீட் பெல்ட் எல்லாம் போட்டு விடுகிறார்கள். மேடு பள்ளம் திடீர் இருட்டு திடீர் வெளிச்சம் சர்ரென்று கீழே சரியும் பிறகு மேலே ஏறும் கடைசியில் வானவெளியில் நாம் பறந்து போவது போல் உணர்ச்சி கீல்ழே பார்த்தால் பூமி சுற்றிலும் நட்சத்திரங்கள் நிலா நாம் வான் வெளியில் மிதந்து கொண்டே போகிறோம்  மூச்சை பிடித்துகொண்டு தைரிய மாக எலாவற்றியும் பார்த்தேன்.  ஏற்கனவே என்மகன் சொல்லி இருந்தான் இங்கு எல்லாம் மிக ஜாக்க்ரதையாக அமைதிருப்பர்ர கல்  நம் உடம்பில் ஒரு சின்ன கீறல் சிராய்ப்பு விழுந்தாள் கூட லட்சகணக்கில் நஷ்ட ஈடு தரவேண்டி வரும் எல்லாவற்றையும் மிக safe அக வைத்திருக்கிறார்கள்
4 D தியேட்டர் போனோம் மழை வரும்போது நம் மீது தண்ணீர் சிதறல் துப்பாக்கி அல்லது குண்டு வெடிக்கும்போது ஓசையுடன் வெடி மருந்தின் நெடி
எலிக்கூட்டம் ஓடிவந்தாள் நம் கால்களை பல எலிகள் பிராண்டுவது போன்ற உணர்வு.
கடைசியாக studio டூர் என்று ட்ரெயினில் studio முழுக்க சுற்றிக்காட்டுகிறார்க.ள்
பல சினிமாக்களில் வந்த நியூயார்க் நகர வீதிகள் வாஷிங்டன் கோர்ட் நகர வீதிக ரப்பரால் கட்டப்பட்ட செட்டிங் வீடுகள் கடைத்தெரு போலீஸ் ஸ்டேஷன்  பாழடைந்த கோட்டைகள்  லாண்டரி சலூன் ஹோட்டல் ஸ்கூல் காசினோக்கள் என எல்லாமே ரப்பரால் செய்த செட்டிங்குகள். வெயிலாலோ மழையாலோ பாதிக்கப்படாமல் புத்தம் புதிது போல் உள்ளன.என்தேன்த்த சீன எந்த படத்தில் எடுத்தது என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
வெள்ளம் என்றால் நாம் உட்கார்ந்துள்ள  .

Monday, April 8, 2013

ஹாலிவுட் பயணம்  ஹாலிவுட் என்பது ஊரின் பெயர் அதில் முழுக்க முழுக்க
universlstudio  தான் ஆக்ரமித்துள்ளது,
ஸ்டுடியோவுக்கு முன் உள்ள கடைத்தெருவே ஏதோ சினிமா செட்டிங் போல அழகு.
ஒரு இடத்தில் சினிமா ஷூட்டிங் எப்படி எடுக்கிறார்கள் என்பதை நடித்துகாடுகிரார்கள்.
ஒரு ஹீரோயினை வில்லன் கடத்திக்கொண்டு போவது  ஹீரோ எப்படி நெருப்பில் குதித்து தண்ணீரில் நீந்தி பெரிய காயிற்று ஊஞ்சலில் ஊசலாடி மீட்கிறான் என்பதை நடித்து கட்டுகிறார்கள்.
திடீரென தெருக்களில் வெள்ளம் சீறிப்பாய்ந்து வருவது ஒருநிமிடத்தில் வீடுகளின் கூரை மீது மழை பொழிகிறது தெருக்கோடியிலிருந்து வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது அடுத்த நிமிடம் எல்லாமே மாயமாக மறைகிறது அதிசயம்.
உண்மையாகவே ஒரு ரயில்வே ஸ்டேஷன் ஒரு ரயில் எஞ்சினும் ஒரு லாரியும் பயங்கரமாக பெரும் ஓசையுடன் மோதிக்கொள்கின்றன.
எல்லாமே அடுத்த நிமிடம் காணாமல் போகின்றன. 

Tuesday, April 2, 2013

காந்திஜியின் பொன்மொழிகள்.
1.தன்னம்பிக்கையும் அடக்கமும் ஒருவனிடம் இருக்குமானால் அவனது வாழ்வு தித்திக்கும்
2.படைபலத்தால் கிடைய்க்கும் வெற்றியைவிட மனதில் இருக்கும் ஆசை கோபம் ஆகிய இரண்டு உணர்சிகளையும் வெல்வது மேலானது.
3.அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்கு சமம். தலனை ஏற்கும் தகுதி பெற முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்.
4. நாணயமாக சம்பாதித்தால் எந்த வேலையும் இழிவானது அல்ல
5.அறிவைவிட ஒழுக்கம் உயர்வானது.  ஒழுக்கமின்மை பல தீமைக்கு வழி வகுக்கும்
6ஒழுக்கத்தை வெறும் படிப்பறிவால் பெற்றுவிட முடியாது 7கைம்மாறு கருதாமல் பிறருக்கு நன்மை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
8எதை மனிதன் விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுப்பான் என்பது விதி.அதிலிருந்து தப்ப முடியாது.
9.அநியாயத்தை எதிர்த்து நிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
10 மனதிற்கு சாந்தி அளிப்பதர்க்ககவே இசை நடனம் முதலிய கலைகள் உருவாக்கப்பட்டன.
பிள்ளைகள எழுத்துப்பிழை மன்னியுங்கள் இங்கு உள்ள கறன்ட் கட்டில் டைப் அடித்து முடிப்பதற்குள்ளாகவே நேரம் போதவில்லை திருத்த எது நேரம்?