Saturday, March 26, 2011

holywood trip

பாண்டியன் வீட்டிலிருந்து ஹாலிவுட் அரை மணி நேர பயணம் தான். சரியாக இடம் பார்த்து காரை நிறுத்த ஒருமணி நேரம் ஆகிவிட்டது அவ்வளவு கூட்டம். ஹாலிவுட் என்பது ஊரின் பெயர். அதில் முழுக்க முழுக்க யுநிவேர்சல் ஸ்டுடியோவின் அமைப்புதான். உள்ளே நுழைவதற்கு முன் உள்ள கடைத்தெருவே எதோ சினிமா செட்டிங் போல் ஒரு அழகு. ஏற்கனவே டிக்கட் கையில் இருந்ததால் மிக நீண்ட கியூ தவிர்க்கப்பட்டது. எல்லா ஏற்பாடுகளையும் நிஷா கனகச்சிதமாக முடித்துவைத்திருந்தது பாராட்டப்படவேண்டிய விஷயம்.  எத்தனை மணிக்கு எது திறம்திருக்கும் எதை முக்கியமாக பார்க்கவேண்டும். என்ட்டிறு திட்டமிட்டு வைத்திருந்தாள்
              மிக பிரபலமான படங்களை எப்படி எடுத்தார்கள் என்பதை ஒவ்வொரு இடத்திலும் வர்ணனையோடு காட்டுகிறார்கள். ஆங்கிலப்படங்கள் பார்த்து பழகிய நிஷாவும் பாண்டியனும் மிகவும் ரசித்தார்கள். சில ரைடுகளில் நான் ஏறவில்லை. ரிஸ்க் இல்லாத ரைடுகளுக்கு என்னை அழய்த்துப்போனார்கள். அடுத்து இன்ன காட்சிவரும் பயப்படாதீர்கள் என எனக்கு முன்பாகவே சொல்லிவிடுவார்கள். 
   ஒரு கதாநாயகியை வில்லன் க டத்தி போய்விடுவான். அவளை கதாநாயகன் எப்படி தண்ணீரில் நீந்தி நெருப்பில் குதித்து பெரிய கயிற்று ஊஞ்சல்களில் ஊசலாடி மீட்டு வருகிறான் என்பதை நடித்து காட்டுகிறார்கள்.