Friday, September 10, 2010

ஒருவர் மிக உயர்ந்த இடத்தில இருக்கிறார் என்றால் அவர் மிக அதிகமாக வேதனைகளை துரோகங்களை அனுபவித்திருப்பார் என்று தான் அர்த்தம் ஆனால் மிக
மிக வலிமையான மனவுறுதியின் காரணமாக அனைய்தையும் தாண்டி அந்த
இடத்திற்கு வந்திருக்கிறார் என்பதே அர்த்தம்

தன்னால் அடையமுடியாத ஒன்றை மற்றவர்கள் அடைந்தால் அதைக்கண்டு சகியாத
மன நிலைக்கு பொறாமை என்று பெயர்
ஒரு மனிதனுடைய மேன்மைகளைஎல்லாம் பொறாமை தேய்த்துவிடுகிறது
மற்றவர்களது முன்னேற்றத்தை கண்டு மகிழ்கிற அளவே ஒரு மனிதன் முன்னேற்ற
மடைகிறான்  பகவத் கீதை
செல்வம் சேருதல் தொடர்ந்து ஆரோக்யமாக இருத்தல் பிறியமுடையவளும் இனிமையாக பேசுபவளுமாகிய அனுகூலமான மனைவி பணிவுள்ள புதல்வன் நல்லறிவு அவ்வறிவும் பொருளீட்டவோ ஞானம் பெறவோ உதவியாக இருத்தல் இவ்வாறு அம்சங்களும் மனிதனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன
விதுர நீதி.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மதுரதேமொழி மாதர்கள் எல்லாம்
வாணி பூசைக்குரியன பேசீர்
எதுவும் நல்கி இங்கேவகையாலும்
இப்பெரும்பணி நாட்டுவம் வாரீர்
கல்விப்பணிக்காக பாரதி
கதிர்களை சுமந்து நிற்கும்போது பயிர் அழகு பெறுகிறது
தாமரையை சுமந்து நிற்கும்போது குளம் அழகு பெறுகிறது
நாணத்தை சுமந்து நிற்கும்போது பெண் அழகு பெறுகிறாள்
அறத்தை சுமந்து நிற்கும்போதுதான் மனிதன் அழகுடையவனாகிறான்
நான்மணிக்கடிகை     

1 comment:

  1. அத்தை விதுர நீதி மிக அருமை!!!! .

    ReplyDelete