Wednesday, September 22, 2010

காசி யாத்திரை- 2

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும் என்பதால் காலை உணவை கட்டி தந்து விடும்படி கேட்டோம். ஒரு சண்ட்விச் ஒரு கேக் ஒரு ஆப்பிள் மற்றும் ஜூஸ் என கட்டி ரெடியா ஹாலில் வைய்துவிட்டர்கள் நாங்களும் எழரைகேல்லாம் புறப்பட்டுவிட்டோம் வழியில் ஒரு மரத்தடியில் சில மேசைகளும் நாற்காலிகளும் போட்டிருந்தன. அங்கு கொண்டுவந்த உணவை உண்டு அருகில் இருந்த தேநீர் விடுதியில் தேநீர் அருந்திவிட்டு புறப்பட்டோம். 123 கிலோமீட்டர் தொலைவு அலஹபாத்  பதினோரு மணிக்கு போனோம் அன்குய் ஸ்நானம் செய்தால் துணிகளை தானம் செய்துவிட வேண்டும் என்று சிலரும் வேண்டாம் என்று சிலரும் சொன்னார்கள்,
நான் பலரும் குளித்த இடத்தில் நாம் குளித்துவிட்டு ஈரவுடைகளை காரில் சுமந்துவந்து எங்கு தோப்போம் எங்கு உலர்த்துவோம் அதனால் சுமாரான துணிகளை உடுதிப்போய் அங்கு போட்டு விட்டு வந்துவிடுவோம் என்றேன் அது போலவே எல்லோரும் உடுத்தி சென்றோம்.
யமுனைகரையோரம் படகோட்டிகள் நிற்கிறார்கள் நம்மை ஒரு படகில் அரை கிலோமீட்டர் தொலைவு அழைத்து சென்று அங்கு நிலையாக நிற்கும் ஒரு படகில் கையை பிடித்து இறக்கிவிடுகிரார்கள், அங்கு இருபது அடி அஆழம்.  நிலையாக நிற்கும் படகில் நான்கு அடிக்கு நான்கடி துவாரம் போட்டு உள்ளே ஒரு பலகையை
கட்டி உள்ளே தொங்கவிட்டிருக்கிராரகள் நம்மை இருவர் இருவராரக கையை பிடித்துகொண்டு இறங்க சொல்லி பத்திரமாக இறக்கி விடுகிறான். இடுப்பளவு தண்ணீரில் நிற்கிறோம் அப்படியே மூழ்கி எழ வேண்டியதுதான். மிகுந்த பயத்துடன்
மூன்று முறை முழுகி எழுந்தோம் தீர்ந்த்தது திருவேணி சங்கம ஸ்நானம் என்று கரை ஏறி உடை மாற்றிக்கொண்டு ஈர உடைகளை அங்கு கொடுத்துவிட்டோம். தல 350 படகோட்டி வாங்கி கொண்டான்.
       காசிக்கு திரும்ப பயணமானோம் வழியில் விந்த்யச்சல் என்ற சக்தி பீடம் பார்த்தோம் 108 சக்திபீடங்களில் ஒன்றாம் ஹோடேல்லுக்கு வரும் வழயில் ஒரு இடத்தில் காசிவந்த நினைவாக ஒன்றிரண்டு புடவைகள் வாங்கினோம்.
கைடைவிட்டே அன்னபூரணி சின்ன சிலய்களும் காசி தீர்த்தமும் வாங்கி கொண்டோம். பக்கத்தில் உள்ள உணவு விடுதியில் இரவு உணவை முடித்து கொண்டோம். மறுநாள் காலை ஆறு மணிக்கே கிளம்பினால்தான் கங்கா ஸ்நானம் முடித்து எல்லா ghaat  என்கிற படித்துறைகளை பார்த்துவிட்டு வழியில் சாரநாத் பார்த்துவிட்டு விமானநிலையம் செல்ல நேரம் சரியாக இருக்கும்  என்று கிடு சொன்னார்
.

No comments:

Post a Comment