ஆறரை மணிக்கு கங்கைக்கு ஆரத்தி பூஜா விசேஷம் என்றார்கள், மறுபடி கால்வலியை பொருட்படுத்தாமல் கங்கை கரைக்கு சென்றோம் அங்கு படித்துறையில் நம்மூர் தெப்பத்துக்கு படிகளில் இடம் பிடித்து உட்காருவதுபோல் ஜனங்கள் உட்கார்ந்திருந்தார்கள் படகில் சிறிது தூரம் சென்று எதிரே தெரியும் பூஜையை பார்ப்பது நன்றாகஸ் இருக்கும் என்று போனோம் அய்ந்து இடங்களில் திருநங்கையர் போல் உள்ளவர்கள் கங்கையை நோக்கி தூபம் தீபம் சாமரம் வீசுதல் பஜன் பாடுதல் என்று ஒரு மணிநேரம் செய்தார்கள். பிறகு காண்கையில் அகல் விளக்குகளை ஏற்றி மிதக்க விட்டார்கள்,
அத்துடன் அன்றைய ட்ரிப் முடிந்து ரூமுக்கு வந்து படுத்து விட்டோம்
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment