அடுத்து Ferry இல் பக்கத்தில் உள்ள கட்டடத்திற்கு போனோம். ஆரம்ப காலத்தில் அதுதான் அமெரிக்காவின் நுழைவு வாயில் கப்பல் மூலம் குடியேற வரும் பயணிகளுக்கு இமிக்ரேஷுன் ஆபீசாக இருந்தது. நாநூ று வருடங்களுக்கு முன் கையோடு காலோடு பிழைக்க வந்த ஆண்களும் பெண்களும் தான் இன்றைய அமெரிக்க கோடீஸ்வரர்கள். எந்த ஆண்டு எந்த நாட்டிலிருந்து எவ்வளவு பேர் வந்தார்கள் என்ற பட்டியலும் போட்டோக்களும் அவர்கள் கொண்டுவந்த பெட்டிகள் ஓலை பெட்டிகள் தோல் பெட்டிகள் எல்லாம் காட்சி பொருளாக உள்ளன. லிபர்ட்டி சிலை இருக்கும் இடம் முன்பு ஜெர்சி சிட்டி என்னும் ஊர்தான் அதை நியூ யார்குடன் சேர்த்த பிறகு நியூ ஜெர்சி என்ற இடத்தை உருவாக்கி விட்டார்கள்.
No comments:
Post a Comment