Wednesday, October 20, 2010

Los Vegas Trip

ஜூன் மாதம் 15 தேதி காலை லாஸ் வேகாசுக்கு இரண்டு கார்களில் புறப்பட்டோம். பாண்டியன் குடும்பம் ஒரு காரிலும் மணிமாறன் குடும்பம் ஐரோ கர்ரிளுமாக கிளம்பினோம். அப்பா ஒரு பிள்ளை காரிலும் அம்மா ஒரு பிள்ளை காரிலும் சென்றோம். பேத்தி நந்திதா தாத்தாவை அவர்கள் காரில் அழைத்து கொண்டாள்.
லாஸ் ஏன்ஜெலேச்சிலிருந்து அதிக திருப்பங்கள் இல்லாத நேர் சாலைதான். ஆனால் மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த சாலை முன்னால் போகும் கார் தெரியாத அளவு சரிவான சாலை. பக்கத்திலேயே பெரிய லாரிகள் பக்கத்து லேனில் வரும்பொழுது பயமாக இருந்தது. ஆனால் பாண்டியனும் மணியும் அருமையாக கார் ஒட்டி வந்தார்கள்.
அமெரிக்காவில் அங்காங்கு தங்குமிடங்கள் அமைய்த்துவுள்ளர்கள். அதைப்பற்றிய அறிவிப்பு பலகை இரண்டு மைல் முன்னாடியே வந்துவிடும். கார் ஓட்டுபவர்கள் அதற்க்கு தகுந்தபடி ஓரசாலைக்கு ஒதுங்கி தங்குமிடத்தில் நிருத்தி கொள்வார்கள். ஒன்பது மணிக்கு ஒரு தங்குமிடத்தில் நிறுத்தி கையில் கொண்டு போன காலை ஆகாரத்தை சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.
லாஸ்வேகாஸ் நெருங்குவதற்கு சில மைல்கள் முன்பாகவே காசினோக்கள் கேளிக்கைகூடங்கள். வர ஆரம்பித்துவிட்டன. எப்போதும் குழந்தய்களை  பின் சீட்டில்  பெல்ட் போட்டு உட்கார வைக்கவேண்டும்  முதலில் நந்திதா அழுவலாம். இப்போது தானாகவே உட்கார்ந்து கொண்டு பெல்ட் அணிந்து கொள்கிறாள்.
சரியாக 12 மணிக்கு சென்று விட்டோம். ஏற்கனவே புக்  செய்த ஹோடேல்லுக்கு சென்று கொண்டு சென்ற மதிய உணவை உண்டுவிட்டு ஒரு மணிக்கு வெளியே சுற்ற கிளம்பி விட்டோம்.
நியூ ஜெர்சியிலிருந்து இளங்கோ பேசினான். அப்பா அம்மா வேண்டாம் என்பார்கள். வற்புறுத்தி ஸ்லாட் மெஷினில் விளையாட சொல்லுங்கள் என்றான். ஆளுக்கு 20 டாலருக்கு சில்லறை மாற்றி தனது விட்டார்கள். வார நாளாக இருக்கவே சுலபமாக இடம் கிடைத்தது வரிசை வரிசையாக ஸ்லாட் மெஷின்கள். ஒரு குவாட்டர் நாணயத்தை போட்டு விட்டு கைபிடியை சுற்ற வேண்டும். நிற்கும் இடத்துக்கு எற்றர்போல் பணம் சில்லரையாக கொட்டும். பெரும்பாலும் ஒன்றும் விழாது. சிலநேரம் ஒன்றுக்கு பத்து இருபது மடங்காக கலகலவென்று கொட்டும். எந்நேரமும்
காசு கலகலவென்று கொட்டும் சப்தமே ஒரு கவர்ச்சி தான். இன்னும் பலப்பல சூதாட்டங்கள். சீட்டுக்கட்டு.ரோல்லர் சுற்றுதல்.என பல உள்ளன.
எகிப்திய பிரமிடு போன்ற தோற்றத்தில் ஒரு பெரிய காசினோ. மண்டலே பே  என்ற பெரிய காசினோ அல்லடின் என்று காசினோ ஈபில் டவர் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு காசினோ. உள்ளே சென்றால். பிரமிப்பிலும் பயத்திலும் வாயடைத்து நின்றுவிட்டேன்.வானம் கீழே இறங்கி இரண்டு மாடி உயரத்தில் வந்துவிட்டது போன்று இருந்தது.
.

No comments:

Post a Comment