சொல்லிவிட்டு போய் விட்டான். எங்கு கேட்டாலும் படிகள் கிடையாது. என்று சொல்லி விட்டார்கள். பயம் என்று உச்சியிலே உட்கார்ந்திருக்கவா முடியும். லதாவின் கையை ஒரு கையிலும் உயிரை ஒரு கையிலுமாக பிடித்து கொண்டு இறங்கினேன்.
நிதினை பார்பர் ஷாப்புக்கு அழைத்து போனோம்.இங்கு AIDs பயத்தினால் கத்தி போட்டு ப்ளேடு போட்டு மொட்டை அடிக்க மாட்டார்களாம். O என்று வைத்து மெஷினால் மொட்டை அடித்தார்கள். நம் ஊரில் மொட்டை போட்ட அன்று மாலையில் சொரசொரப்பாக தெரியுமே அப்படி இருந்தது. அன்று அந்த பெண்மணி இவனுக்காக என்று வந்தார்கள். அதனால் நாங்கள் வழக்கத்தை விட அதிக பணம் தர யோசித்திருந்தோம் நம்முடைய கலாச்சாரம் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டார்கள் ஊரில் காண்பிக்க என்று வீடியோ எடுத்தோம். அதையெல்லாம் பார்த்து மிக மகிழ்ச்சி அடைந்து ஒரு டாலர் கூட வாங்கவில்லை.
சரியென்று அடுத்த இரண்டு நாளில் தேதிப்படி பிறந்த நாள். அன்றுகேக் வாங்கி கொடுத்தோம்.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment