மணியும் பாண்டியனும் விமான நிலையம் அழைத்து
சென்றார்கள். சரியாக இரவு ஒன்றே முக்காலுக்கு விமானம் கிளம்பியது. ஜன்னலோர சீட் எனக்கு. விமானம் மேலே போகப்போக ஒரே ஒளிமயமாக காட்சியளித்தது. இன்னும்கொஞ்சம் மேலே போனதும் ஒரே நீல வானம் தான். ஜன்னல்களை மூடிவிட்டார்கள். அந்த இரண்டு மணிக்கு கூட இரவு உணவு சாப்பிட தந்தார்கள். விடியற்காலை என் கடிகாரத்தில் மூன்றரை மணிக்கு தொலைவில் நீல வான ஓரத்தில் சிவப்பு தெரிகிறது. அதாவது போழுவிடிவதர்கான அறிகுறி. நாலரைக்கெல்லாம் பொலபொலவென விடிந்துவிட்டது.
செயின்ட் லூயிஸ் விமான நிலையம் வந்துவிட்டது. உள்ளூர் மணி ஆறேகால். கடிகாரத்தை திருப்பி வைத்துக்கொண்டோம் நாங்கள் இறங்கியது C 18 கேட் செல்ல வேண்டியதோ D 20 எதிர்திசையில் இருக்கிறது. ஆக மொத்தம் 38 கேட்கள் போக வேண்டும். ஒரு விமானி நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தவர் பத்து அடி தொலைவு எங்களுடன் வந்து கண்ணாடி வழியாக நாங்கள் போக வேண்டிய விமானத்தை சுட்டிக்காட்டி அந்த வராந்தாவின் கடைசிக்கு நிதானமாக செல்லுங்கள் என்று அன்புடன் கூறினார். அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு அதுவும் முதியவர்களுக்கு காட்டும் அக்கறை வியப்பூட்டுகிறது. அதை நாமும் கடைபிடிக்க வேண்டும்.
ஏழே முக்காலுக்கு கிளம்பி பத்தரை மணிக்கு நியூ ஜெர்சி சேர்ந்தோம். என்னவொரு அற்புதமான காட்சி. முதலில் பஞ்சு மூட்டை பிரித்து கொட்டியது போல் மேகங்கள். பிறகு கீழே இறங்க ஆரம்பித்ததும் பெட்டிகள் அடுக்கியதுபோல் கட்டிடங்கள். Map இல் எப்படி ஆறுகள் மலைகள் பச்சை புல்வெளிகள் போட்டிருக்குமோ அதுபோல் அழகுற தோன்றியது. மகன் Florida சென்றிருப்பதால் எங்களையே டாக்சி பிடித்து வந்துவிட சொல்லியிருந்தான். ஒரு பயமுமில்லை. Address தந்துவிட்டால் அவரே கொண்டுவிடுவார். லதா பணம் கொடுத்து விடுவாள் என்று சொல்லியிருந்தான். டிரைவர் தன கையில் உள்ள போன் லதாவை வழிகேட்டு சரியாக ஐம்பது
No comments:
Post a Comment