கீழ் தளம் பூராவும் கடைகள் லிப்டில் மேல் தளத்துக்கு சென்றோம். அங்கிருந்து வேகாசின் அழகிய தோற்றத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு புறம் வரிசை வரிசையாக சர்கஸ் கேலரி போன்று சிகப்பு விளக்குகள் அருகில் வெளிர் மஞ்சள் விளக்குகள். முதலில் என்ன என்றே புரியவில்லை. பிறகு நானாகவே கண்டுபிடித்தேன். தொலைவில் வேகஸ் நோக்கி வரும் ப்ரீ வே காட்சிதான். ஒருபுறம் செல்லும் கார்களின் பின்புற சிகப்பு விளக்குகளும் வரும் கார்களின் மஞ்சள் விளக்குகளும். மாடியை விட்டு இறங்கி வரவே மனசில்லை. கீழே வந்ததும் எதிரில் உள்ள பார்க்கில் இசைக்கு ஏற்ற வாறு நடனம் ஆபும் நீரூற்று. மிக ரம்மிய மாக உள்ளது. இரவு நேரமாகி விட்டதால் ஹோட்டலுக்கு திரும்பி விட்டோம்.
காலையில் காலைகடன் முடித்து அருகில் உள்ள ஹோட்டல் ஆம்லெட்டுக்கு பெயர் பெற்ற இடமாம். அங்கு போய் சாப்பிட்டோம்.மறுபடி சுற்ற கிளம்பிவிட்டோம். சிசர்ஸ் பேலஸ் என்ற காசினோவுக்கு சென்றோம். அங்கு ஒரு மணிக்கு ஒரு முறை ஒரு காட்சி. வான் வெளியில் இடி மின்னல் மழை தோன்றுவதை சித்தரிக்கும் காட்சி. அது முடிந்ததும் அங்கு ஹால் நடுவில் உள்ள சீசர் மன்னனின் சிலை வை திறந்து பேசுவதும் பணிப்பெண்கள் பணிவிடை செய்வதுமான காட்சி. பிறகு அளடின் என்ற காசினோ சென்றோம் ஒரு காசினோவுக்கும் மற்றொரு காசினோவுக்கும் செல்ல மெட்ரோ ரயில் வசதி.அளடின் காசினோவில் மாலை பெல்லி டான்ஸ் மற்றும் அத்லேடிக்ஸ். பளுதூக்குதல் ஜிம்னாஸ்டிக் போன்று பல காட்சிகள். அடுத்து திரீசூர் அய்லாந்து என்ற காசினோ. அங்கு ஒரு காட்சி இரவு ஏழுமணிக்கு ஒருமணி நேரம் முன்பிருந்தே மக்கள் இடம்பிடித்து உட்கார்ந்து விடுகிறார்கள். ஒரு பெரிய கப்பலை ஒரு சிறய படகில் வரும் கொள்ளையர்கள் கொள்ளயடுக்க முயற்சிக்கிறார்கள். இருண்டு தரப்பும் சுட்டுக்கொண்டும் ஈட்டி அம்பு வீசிக்கொண்டும் சண்டை நடக்கிறது. இறுதியில் கொள்ளையர் கப்பல் எரிந்து சாம்பலயுகிறது. அத்துடன் காட்சி முடிவடைகிறது. எவ்வளவோ நாகரிகம் வளர்ந்து விஞ்ஞானம் வளர்ந்த நாடு மக்களாக இருந்தாலும் இந்த கட்சியை காண சிறுவர் முதல் பெரியார்வரை ஆவலுடன் வீதியோரம் இடம் பிடித்து உட்கார்ந்து காசினோ உள்ளே வராமலே பார்த்துவிட்டு திரும்புகிறார்கள்.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment