Friday, October 29, 2010

new york trip

ராக் பெல்லேர் டவர் போய் பார்த்தோம். அது இரண்டு தெருக்களை முழுக்க ஆக்ரமித்து உள்ள ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். தெருவில் ஜனங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருப்பதை அமெரிக்காவில் இந்த ஒரு ஊரில்தான் பார்க்க முடியும். சிறிது நேரம் போக்குவரத்து போலீசார் கட்டுப்படுத்தினார்கள். என்ன ஆச்சர்யம் அலங்கரித்த மூன்று ரதங்கள். விநாயகர் அம்மன் கிருஷ்ணர் ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்ற கோஷம். இந்தியர்களும் அமெரிக்கர்களும் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி சென்றார்கள்.
               எங்கு போனாலும் escalateril  தான் செல்ல வேண்டும். இளங்கோ எனனை தைரியம் சொல்லி இறங்க சொல்லுவான். நான் எல்லாவற்றையும் கேட்டு தலையாட்டி விட்டு மேல் படியிலேயே நின்றுவிடுவேன். இளங்கோ இறங்கி விட்டு எனனை படிகள் வழியாகவே வரசொல்லுவான். அப்பா எனனை கோபித்து கொள்ளுவார். அதற்க்கு மனிதன் என்றால் ஏதாவது ஒன்றிற்கு பயம் இருக்க தான் செய்யும் வயதானவர் திட்டாதீர்கள் என்பான்,
                ஒரு வேடிக்கை சொல்ல விட்டு விட்டேன். trade center மேலே போக எனனை பக்கத்தில் இருந்த படிவழியாக வரச்சொல்லிவிட்டு எல்லோரும் மேலே போய் விட்டார்கள். நான் படிகளில் கால் வைத்ததும் எங்கிருந்தோ ஒரு பெண்மணி ஓடி வந்து இது அவசரகால தேவை மற்றும் அங்கு வேலை பார்பவர்களுக்கு தான். போடு மக்களுக்கு அனுமதி  கிடையாது என்று தடுக்கிறார். சிறிது நேரம் பயத்தில் தடுமாறி விட்டு ஏதோ எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எனக்கு escalator என்றால் பயம் என்னோடு வந்தவர்கள் எல்லாம் எனனை விட்டு போய் விட்டார்கள். நீங்கள்தான் தயவுசெய்து எனனை விடவேண்டும் என கேட்டேன். சிரித்து கொண்டே ஓல்ட் லேடி go on quickly என்று விட்டு விடடாள் திரும்பி வரும்போது லதாவை அம்மாவை படிவழியாக அழய்த்துவா என்று சொல்லி விட்டு

No comments:

Post a Comment