Monday, October 25, 2010

new york trip

அங்கு ஒரு ஸ்கை ரைட் இருந்தது.அதாவது நாற்காலியில் நாம் உட்கார்ந்து இருப்போம் ஆனால்ப்ளேனில் பறந்து நியூயார்க் நகர வீதிகளில் சுற்றி பார்ப்பது போன்று இருக்கும். பயம் ஒன்றும் இல்லை என்றார்கள். நான் புது இடத்தில் மயக்கம் லேசாக வந்தாலும் அனைவருக்கும் தொல்லை. என்று கூறி குழந்தையுடன் கீழேய உட்கார்ந்து விட்டேன்.  பஸ் பிடித்து அருகில் உள்ள ஒரு பார்க்கில் கொண்டுபோன மதிய உணவை சாப்பிட்டோம்.
   மறுபடி ரயிலேறி வேர்ல்ட் trade சென்டர்  போய் சேர்ந்தோம். அங்கு உச்சிக்கு போக  கட்டணம் செலுத்த வேண்டும்.இப்போதுதானே empire ஸ்டேட் பில்டிங் மீது இருந்து நியூயார்க் பார்த்தோம். மறுபடி செலவு எதற்கு என்றேன். ஆனால் இளங்கோ விடவில்லை. இதன் உச்சி 107 வது மாடி. பறந்து விரிந்த தளம். நூற்றுக்கணக்கான பேர் சுற்றிவந்து வீடியோ போட்டோ எடுப்பதும் திருவிழா கூட்டம்தான். அங்கிருந்து பார்த்தால் empire ஸ்டேட் பில்டிங்கும் லிபர்டி சிலையும் மற்ற கட்டிடங்களும் சிறியதாக தெரியும் ஆச்சர்யம். உலகத்தின் உச்சி என்றே ஆங்காங்கு குறிப்பிட்டு எழுதியுள்ளது. இளங்கோ யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.நான் அமெரிக்காவின் ஒரு கரையிலும் தம்பிகள் மறுகரையிலும் இருப்பதால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை பார்க்க முடிகிறது.
செப்டம்பர் முதல் தேதி முதலே நிறைய பேரை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். சிலருக்கு ஒருவாரம் லீவு கொடுத்து சம்பளம் பிடித்து கொண்டார்கள். அதுபற்றி நாங்கள் வருத்த மடைந்தோம். அமெரிக்காவை எல்லோரும் சுற்றி பார்த்தோம் சில காலம் படகு காரில் சவாரி சகல வசதிகலுடன்  வாழ்க்கை கடவுள் சில காலம் அளித்தார். மறுபடி திரம்ப பெற்றுக்கொண்டார் என எண்ணி இநதியா வந்து வேலை தேடிக்கொள்வோம். நீங்கள் கொஞ்சமும் கவலைபட்பாமல் அமெரிக்க பயணத்தை அனுபவியுங்கள் என்று மகன்கள் சொன்னார்கள். உச்சியில் நின்று போட்டோ எடுத்துகொண்டோம். கீழே வந்ததும் தயாராக இருந்தது, பணம் செலுத்தி வாங்கி கொண்டோம். 

No comments:

Post a Comment