திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு நகை சீர்வரிசை என தாய் வீட்டார் செய்யவேண்டும் என்ற நம் நாட்டு கொள்கையில் கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது. இரண்டு பேர் திருமணமான பிறகு இணைந்துவாழ போகிறோம். அதற்கு பெண்ணை பெற்றவர்கள் எதற்குநகை பணம் திருமண செலவு என்று செய்யவேண்டும். உன் வீட்டில் . வசதி இல்லை அதனால் அப்படி நினைக்கிறாய் என்கிறார்கள். வசதி உள்ள தாய் தகப்பன் மகளுக்கு திருமண அன்பளிப்பாக எதுவேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் மணமகன் வீட்டார் அதை வற்புறுத்தி வாங்குவதை தான் மனதார வெறுக்கிறேன், ஆண் வேலையில் உழைக்கிறான். பெண் வீட்டில் அதைவிட அதிகமாக உழைத்து குடும்பத்தை உருவாக்குகிறாள் உன்னுடைய வாரிசை சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்குவதற்கு ஆண் மகன் அல்லவோ பெண்ணுக்கு நன்றி சொல்லவேண்டும். அதனால் தான் அந்த நாச்ட்க்களில் பரிசம் போடுவதென்று பெண்ணை பெற்று வளர்த்து தரும் வீட்டுக்கு பணம் கொடுத்து மணமுடித்தார்கள் இடையில் வந்த வழக்கம் தான் பெண் வீட்டாரிடம் நகை சீர் வரிசை என பிடுங்குவது.எனனை பொறுத்தவரை திருமணமாகி 45 வருடங்களில் ஒரு சிறு துரும்பு கூட தாய் வீட்டிலிருந்து கேட்டு பெற்றத்தில்லை. திருமணத்தின் போது செய்த சீர்வரிசைகளை பெற்றுகொண்டேன். பிறகு ஆறு குழந்தைகளை வளர்த்து நன்கு படிக்க வைத்தோம். இரண்டு பெண்களை மணமுடித்து கொடுத்தோம். தாய் வீட்டில் வசதியாக இருந்தும் கடனாக கூட ஒரு பைசா யாரிடமும் பெற்றதில்லை. அந்த விழயத்தில் நான் தீர்மான மான முடிவோடு இருந்தேன், சிக்கனமாக குடும்பம் நடத்தினோம். பெற்றோர் கஷ்டம் தெரிந்த பிள்ளைகள் ஒரு தொல்லையும் தராமல் மணியாக படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்தது உள்ளார்கள். நாங்கள் செய்த தவப்பயன் இரண்டு மருமகன்களும் எதுவும் நாங்கள மனமுவது செய்த சீர்வரசைகளை ஏற்று இன்றுவரை எங்களை தங்கள் பெற்றோர் போல் அன்பு பாராட்டுகிறார்கள். நங்கள் நாலு பில்லைகல்லுக்கும் மனம் முடித்த போது பெண் வீட்டாரிடம் உங்கள் விருப்பம் போல் உங்கள் பெண்ணுக்கு செய்யுங்கள் சொல்லிவிட்டோம். அதனால் நான்கு மருமகள்களும் எங்கள் மேல் நல்ல பாசம் கட்டிவருகிறார்கள். பிள்ளைகளை படிக்கவைத்த போது செலவு சமாளிக்க முடியாமல் என் கணவர் திணறுவார். என் தாய் வீட்டில் போட்ட நகைகள் எதற்கு உள்ளன. விற்று படிப்பு செலவை சமாளிப்போம் என்று தைரியம் சொல்லி எல்லா நகைகள் வெள்ளி சாமான்கள் அனைத்தையும் விற்று படிக்க வைத்தோம். பெரிய பிள்ளை வேலைக்கு போனது என் அண்ணனிடம் தைரியமாக கடன் வாங்கி திருமணம் முடித்து இரண்டு வருடங்களில் கடனை திருப்பி தந்தோம். எதற்கு இதை எல்லாம் எழுதுகிறேன் என்றால் படித்த எந்த ஆண் மகனும் தன பெண்டாட்டிக்கு சோறு போட்டு துணி எடுத்து கொடுத்து சம்பளம் வாங்காத வேலைக்காரி போல் நடத்த பெண் வீட்டாரிடம் கேட்க வெட்கப்பட வேண்டும்,
No comments:
Post a Comment