Tuesday, December 28, 2010

engayo paditthavai.

வாரமலர் கவிதை சோலையில் நான் ரசித்துப்படித்தது
வருத்தப்படவில்லை மகனே உன் சொல்லும் செயலும் நியாயமானது
உலகம் ஆயிரம் சொல்லட்டும உற்றார் உறவினர் எப்படியும் ஏசட்டும் கவலைப்படாதே
மனக்கசப்புடன் மருமகள் ஒட்டாத பேரன் பேத்திகள் இனியும் உழைக்க
ஒத்துழைக்காத உடம்பு
திண்ணையும் புல்தரையும் காணாமல் அகதியாய் அடுக்குமாடி குடியிருப்பில்
நகரத்து நரக வாழ்க்கை
இவை எதுவுமின்றி இப்போது நலமாய் இருக்கிறேன் மகனே உனக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்
 மழை வெயில் தெரியாத இருப்பிடம் வேளாவேளைக்கு உணவு வேலையின்றி அமைதியான ஒய்வு நல்லதொரு வயதான நட்பு வட்டம்
பொழுது போக பூஜை பஜனை தாராள மருத்துவம் இன்னும் என்ன குறை எனக்கு
நீ மட்டும் மாதம் ஒரு முறை குடும்பத்துடன் வந்து முகம் காடு உள்ளபடியே நான் மகிழ்வுடன் இருக்கிறேன் இந்த முதியோர் இல்லத்தில்.
எழுதியவர். சொல்கேளான் எ வி  கிரி சென்னை,
ஆசிரியருக்கு ரொம்பவும் ஆசைதான். வாரம் ஒருமுறை என்று எழுதி இருந்தார்.
பெண்டாட்டி பிள்ளைகூட கழிப்பதற்கே வார இறுதி போதாது. அதனால் நானாகவே மாதம் ஒருமுறை என மாற்றி விட்டேன்.

No comments:

Post a Comment