என் பெரியப்பாவின் மணிவிழா. எல்லோருக்கும் புத்தாடை வாங்கி தந்தார். முன் நாள் இரவு என் சித்தி இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு அக்கா மாமாவின் மனிவிழவிர்க்கு வந்தார். பெரியப்பவிற்கோ சித்திக்கு ஒரு புது புடவை வாங்கித்தர ஆசை. நேரமும் இல்லை.பணமும் இல்லை. பெரியவர்கள் பேசிக்கொண்டதை கேட்டு நான் அப்பா என்னுடைய புடவைய சித்திக்கு கொடுங்கள். நீங்கள் இதுவரை எனக்கு எத்தனையோ புத்தாடை எடுத்து தந்து இருக்கிறீர்கள். நாளை இருப்பதில் நல்ல புடவையாக உடித்திக்கொண்டு இதுதான் புதுசு என்று சொன்னால் போயிற்று என்றேன். என் பெரியாபவும் பெரியம்மாவும் என்னை ஆரத்தழுவிக்கொண்டு அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நீ எங்கள் வயிற்றில் மகளை பிறந்து இதுபோலவே அன்பு செலுத்தவேண்டும் என்றார்க அடுத்த ஜென்மம் என்ன ஏழு ஜென்மங்களுக்கும் என் பெரிப்ப பெரியம்மாவின் பாசமிகு மகளாக பிறக்கவே இறவனி வேண்டுகிறேன். அவர்கள் இருவரல் தான் தாயற்ற எங்கள் ஐவரின் வழக்க சிறப்புற அமைந்தது.
No comments:
Post a Comment