இந்ததொடரில் இருவரை பற்றி நான் குறிப்பிட்டு ஆகவேண்டும். ஒருவர் ஏன் கணவர். என மாமி யார் தொண்ணூற்று மூன்று வயது வாழ்ந்தார். அவ ர சாகும்வரை என கணவர் அம்மா பக்கத்தல் உட்கார்ந்து நாடு நடப்புகள் அரசியல் கிரிக்கட்டு குடும்ப கதைகள் என்று பெச்க்கொண்டு இருப்பார். அவர் நண்பர்கள் கூட கேட்பார்கள். என்னப்பா விஷயம் ரெண்டுவேளையும் அம்மாவிடம் பேசுவே என்று . சிரித்து மழுப்பி விடுவார். வயதான தாய் காகவே எட்டு வருடங்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் அழைப்பை ஏற்று போகாமல் இருந்தார். மற்ற்ரோருவன் என அண்ணன் மகன். என அண்ணி சக்கரை நோயாளி. இரவெல்லாம் கால் வலி என்று தூக்கம் இன்றி தவிபபார். மனைவியை அம்மாவை எழுப்ப கூடாது என்று சொல்லிவிடுவான். ஏழு மணிக்கு வேலைக்கு கிளம்பு முன் அம்மாவை எழுப்பி உடல் நலம் விசாரித்துவிட்டு சில நமிடங்கள் கால் பிடித்து விடுவான். அப்போது அந்த தாய் முகத்தில் காணும் சந்தோஷத்தை பார்த்து உண்மையிலேயே நான் பொறாமை பட்டதுண்டு. என்ன தவம் செய்தார்கள் இதுபோல் ஒரு பிள்ளை பெற என்று.
No comments:
Post a Comment