நண்பர்கள் இருப்பது நல்லது. ஆனால் அவர்கள் உதவியை நாடுவது நல்லதல்ல
ஒருவன் மற்றவர்களைவிட உயர்ந்தவனாக இருப்பதற்கு மற்றவர்கள் நலனுக்காக அவன் செய்யும் தியாகமே காரணம்
வேறு எதிரிகள் தேவையில்லை.உன் சுயநலமே உன் எதிரி.
வேறு நண்பர்கள் தேவையில்லை உன் மனசாட்சியே உனது நண்பன்.
வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்
௧. நாம் விருபுகிறபடி சீட்டுகள் விழுவதில்லை. எந்த சீட்டு விழவேண்டும் என்று நாம் தீர்மானிக்க முடியாது. அதே போல நாம் எப்படி இருக்கவேண்டும் எந்த குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடியாது.
௨. கிடைக்கிற சீட்டுகளை வைத்துதான் ஆட வேண்டும்.அதேபோல நாம் பிறந்த சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதைவைத்து வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும்.
3 சீட்டு விளையாட்டை அதற்குரிய சில நியதிகளுடன் தான் விளையாட வேண்டும்.அதைப்போல் வாழ்க்கையிலும் சிலக நியதிகளை கடைப்பிடித்துதன் வாழவேண்டும்.
சீட்டில் அமைகிற ஜோடிகளை வைத்து வெற்றியடைய முயல்வது போல் நமக்கு அமைகிற துணையையும் நண்பர்களையும் வைத்தே நாம் வாழ்க்கையை வெற்றிகர மாக்க வேண்டும்.
௪கிடைத்த சீட்டு எதுவானாலும் வென்றாலும் தோற்றாலும் நாம் உற்சாகமாக வாழ கற்று கொள்ள வேண்டும்.
டாக்டர் ராதாக்ருஷ்ணன்.
நம்மை ஒருவர் முந்தும்போதுதான் நாம் மெதுவாக செல்கிறோம் என்பதே நமக்கு புரிகிறது.
வெற்றியில் கர்வம் மீண்டும் தோல்வியின் ஆரம்பம்.
செல்வம் பெற்றதில் கர்வம் வளமை வற்றுதலின் ஆரம்பம்.
சமயம் வரட்டும் பல நற்செயல்களை ஒன்றாக செய்துவிடலாம் என்று காத்திருப்பவன் என்றுமே எச்சமயத்திலும் எதுவும் செய்யமாட்டான்.
மழை அழகுதான் வீடு ஒழுகாதவரை.
தென்றல் அழகுதான் புயலாக மாறாதவரை
மின்னல் அழகுதான் கண்ணை பறிக்காதவரை
மலர் அழகுதான் முள் குத்தாதவரை
மழலை அழகுதான் அதிகம் பெறாதவரை
எதுவுமே அழகுதான் எல்லை தாண்டாதவரை.
சண்டீப்ராஜ் ஆலர்த்தம்பாடி.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment