Sunday, March 14, 2010

மகளாக

என்னுடைய இரண்டாவது பருவம் மகள். என் அம்மா என்னுடைய பத்தாவது வயதில் இறந்துவிட்டார். கூட்டுக்குடும்பத்தில் எனக்கு அம்மாவின் நெருக்கமான உறவே கிடைக்கவில்லை. அத்தையே பள்ளிக்கு தயார் பண்ணுவது சாப்பாடு போடுவது தூங்கவைப்பது என கவனித்துகொண்டதால் தாயின் முகமே நினைவில் இல்லை.இரண்டுசம்பவங்கள் தான் இன்னும் நினைவில் நிற்கின்றன . உட்பால் நலம் சரியில்லாமல் இருந்தபோது என் அம்மா என்னிடம் "தாத்தாவிடம் போய் என்னை பார்க்க வரச்சொல்லு வரும்போது ஒரு ஹார்லிக்ஸ் வாங்கி வரச்சொல்லு" என்றார்.ஏனென்றால் என் முதல் மனைவியின் மகா. பதிமூம்ற்று வயதில் திருமணமாகி வந்துவிட்டவர். பதினாறு வயதில் நானும் அடுத்தடுத்து நான்கு பிள்ளைகளை பெற்று விட்டார். இரண்டாம் தரத்துக்கு பயந்து என் தாத்தா மகளை பார்க்ககூட அதிகம் வரமாட்டார். அம்மா சொன்னதை கேட்டுவிட்ட என் அத்தை உன்னை என்ன குறைவாக வைய்த்திருக்கிறோம் அம்மா என் அப்பாவிடம் கேட்கிறாய் என சண்டை பிடித்தார். அதனால் அந்த சம்பவம் என் நினைவில் நின்றுவிட்டது. மற்றது அம்மா ஒரு காலை வேளையில் முனகும் சப்தம் கேட்டு நான் என்ன அம்மா என்று கேட்டேன். ரொம்பவும் தலைவலிக்கிறது அம்மா என்றார். நான் தலையை  பிடித்துவிடுகிறேன் என்று பிடித்துவிட்டுகொண்டு இருந்தேன். திடீரென விழ்த்து எழுந்த என் அப்பா விவரம் அறிந்து கிட்டே வந்து அம்மாவை உசுப்பினார். அம்மா நினவு தவரிவிட்டிருந்தர், பிறகு எழவே இல்லை. ஒரு மணி நேரத்தில் உயிர் விட்டார்.இந்த இரண்டு சம்பவங்கள் தவிர வேறுதுவும் அம்மா மகள் என்ற உறவின் அடையாளமாக நினைவில்  இல்லை.
                                                        தாயுமாகி நின்றார் என் அப்பா. பெரியப்பா பெரியம்மாவின் தியாகத்தால் அமைந்தது எங்கள் வாழ்க்கை, வெளியூரில் வேலை பார்த்த பெரியப்பா தன குடும்பத்தை கொண்டு போகவில்லை. அதுமுதல் நாங்கள் ஆறு சகோதரர்களிரண்டு சகோதரிகள் எரியாப்பவ்ன் பிள்ளைகலாணோம்.
                                                          குட்டி தம்பி பால் மறந்த ஒன்றரை வயது குழந்தை. சதா அழும் நான்கு வயது ஒரு தம்பி. தாய் ஸ்தானத்தை பத்து வயது அக்க நான் ஏற்று கொண்டேன். குளிப்பாட்டுவது சாதம் ஊட்டுவது இடுப்பில் சுமந்து திரிவது. பள்ளிக்கு மணிஅடிக்கும் ஒலி கேட்டு ஓடுவது வாடிக்கை.
                                                           வகுப்பில் முதல் மாணவி என்பதால் ஆசிரியைகளும்
என் நிலை அறிந்து வீட்டுபாடம் செய்ய சொல்வதில்லை.அம்மாவும் வேறு ஒருவேலையும் என்னை இடுவதில்லை. பதினான்கு வயதிலேய பத்தாம் வகுப்பு எழுதவேண்டும்  தன சலுகை பெற்று எழுதினேன். வகுப்பில் முதல் மதிபெண் பெற்று பத்தாம் வகுப்பு தேறினேன்.
                                                                என் அப்பா இத்தனை நாளும் உன் பெரியம்மா பெற்ற  மகளை விட போற்றி வளர்த்தார்க. நாளைமுதல் காலையில் எழுந்துவிடவேண்டும். அம்மாவுக்கு உதவியாக வீடு வேலைகள் செய்யவேண்டும் என அறிவுரை கூறினார். தாய் அற்ற பிள்ளை சீரற்றது என்ற பழமொழியை நீ மாற்றிக்காட்டி உன் பெறியம்மவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
                                                                   சின்னத்தம்பி பள்ளிக்குபோகும் வயதகிவிட்டான். போக்குவரத்து மிகுந்த சாலையில் நானும் என் தங்கையும் நன்கு தம்பிகளையும் ஆட்டு குட்டிகளை மேய்த்து செல்வதுபோல் அழத்துபோவதை தெருவே வேடிக்கை பார்க்கும். வறுமை காரணமாக தம்பிகளுக்கு பயிண்டு செய்த நோட்டு புத்தகங்களும் எனக்கும் தங்கய்க்கும் பேப்பர் வங்கி தத்த புத்தகமும் தான்
                                                                      நான் பத்தாவது படிக்கும்போது ரூ நோட்சு வாங்கவில்லை.சொந்த பந்தங்கள் எல்லாம் இவர்களைப்போல் பெண்கள் எத்தனைபேர் இருந்தாலும் என்ன கவலை என்று சொல்வார்கள். வளையல்கார செட்டியாரிடம் விளைகேட்காமல்தேர்ந்து எடுக்கமாட்டோம். தய்யல்கார பாய் சொல்லுவார் உன் பெண்கள் ரெண்டுபேரும் உலகத்திலேயே திருத்தி தைக்க சொல்லாத பெண்கள்லப்பா என்பார்.
                                                                         அடுத்து எனக்காக மணமகன் தேர்ந்து எடுத்தார்கள். சற்றே ஒல்லியான தோற்றம் கொண்டவர். உறவினர்கள் எல்லாம் தாயற்ற பெண் அவள் விருப்பம் அர்ந்துக்ன்டீர்கா என்று கேட்டார்கள். என் தாதகப்பன் எனக்கு எது நன்மை என்று தெரிந்து செய்வார்கள். என் எண்ணம் என்று தனியாக ஏதும் ல்லை என்று சொல்லி மனமுவது ஏற்றுக்கொண்டேன்.
                                                                   திருமணமாகி சென்றபிறகும் ஒரு துரும்பு கூட தாய் வீட்டிலிருந்து கேட்டவள் இல்லை. புகுந்த இடத்தில் எல்லோரிடமம் நல்ல பேர் எடுத்து வாழ்ந்தேன். என் தாய்வீட்டில் எதாவது பிரச்னை என்றால் இருங்கள் அப்பாவின் செலல மகள் வருவாள் வந்து அப்பாவை சரிக்கட்டிவிடுவாள் என்று என் வருகைக்காக காத்திருப்பார்கள்.

No comments:

Post a Comment