Saturday, February 26, 2011

nayagaraa and boston trip

என் தம்பி மகன் ரமணன் பாஸ்டனில் உள்ளான்  அவனை நியு ஜெர்சி வந்து எங்களை அழைத்துபோக சொன்னோம்
இளங்கோ காரில் இடம் போதாது.,நீண்ட பயணம் பின் சீட்டில் நான்கு பேர் உட்கார்ந்து போவது குற்றம் . காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டு மாலை மூணு மணிக்கு பப்பால்லோ என்ற இடத்தை அடைந்த்தோம் அதுதான் நயாகர நீர்வீழ்ச்சி இருக்கும் இடம். சமதரையிலிருந்துநூற்றி முப்பத்து நாலு ௧  அடி கீழே லிப்டில் இறங்கி தண்ணீர் துறைக்கு வந்தோம். எல்லோருக்கும் வீசி எறிந்துவிடும் மழைகோட்டுகள் தந்தார்கள், அமெரிக்க பக்கம் உள்ள ஏரியிலிருந்து ஆரவாரமாக நூற்றி இருபது அடி  உயரத்திலிருந்து ஒரு இடத்திலும் நூற்றி இருவது அடி உயரத்திலிருந்து ஹுஒருஇடத்திலும் விழுகிறது. இரண்டாவதுதான் குதிரை லாடம் போன்று வடிவம் உள்ளது. ஒரு மனிதரை பக்கவாட்டில் பார்ப்பதுபோல் உள்ளது. கனடா பக்கம் சென்றால் எதிரே புறப்பட்டு வந்து வீழும் அழகை ரசிக்கலாம். ரமணன் ஏற்கனவே சொல்லியபடி இளங்கோ எங்கள் இருவருக்கும் விசா 
வாங்கியிருந்தான் நாளை அங்கு போகப்போகிறோம்.படகில் ஏற்றி நீர்வீழ்ச்சி கொட்டும் இடம் நோக்கி அழைத்து சென்றார்கள். அனால் எவ்வளவு  அருகில் என தெரியவில்லை. ஒரே புகை மூட்டமாக ஜோ என்ற காதைபிளக்கும் இரச்சலுடன் விழுவதை பார்க்கவே பயங்கரம். நன்றாக நனைந்து விட்டோம். பத்து நிமிடங்கள் கழித்து கரைக்கு அழைத்து வந்து விட்டான். ஆறு மணிக்கு கனடா பக்கமிருந்து நீர்வீழ்ச்சியின்மேல் வண்ணவிலக்கொலி  அடிக்கிறார்கள். அதை பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம் நல்ல இந்திய உணவு கிடைத்தது.

1 comment: