Saturday, February 26, 2011

waashungton trip

அடுத்து கொரியா போர் இரண்டாவது உலகப்போர் வியட்நாம் போர இவற்றில்உயிரிழந்த வீரர்களின் நினைவு இடங்களை பார்த்தோம். உலகின் பெரிய வல்லரசான அமெரிக்காவில் எவ்வளவு உயிர் த்யாகங்கள் என்று கண்ணீர் வராமல் இல்லை. டூரிச்ட்காரனே காலையிலேயே குரூப் டிக்கட் வாங்கி விட்டார். திருப்தி shed  மாதிரி மூன்றாவது செட்டில் உட்கார்ந்து இருந்தோம். சரியாக 12 மணிக்கு ஜனாதிபதி மாளிகை பார்க்க உள்ளே விட்டார்கள், ஒரு இடத்தில மட்டும் சோதனை பெரிய கெடுபிடி ஒன்றுமே இல்லை. அங்கு மூன்று அறைகள் சிவப்பு அறை பச்சை அறை நீல அறை என்று பெயரிடப்பட்டு அதற்க்கேற்றர்ப்போல் சுவர் அலங்கார பொருட்கள் தரை வியப்பு எல்லாம் அந்தந்த நிறத்தில் வெகு அழகாக இருந்தன, ஒரு சார்ஜென்டிடம் என் பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளார்கள் ஜனாதிபதி எங்கு உள்ளார் என அறிய ஆவலாக உள்ளார்கள் என்றுஇளங்கோ கேட்டான்.உடனே அவர் மிக மரியாதையுடன் பக்கத்து அறையில் மதிய உணவு உட்கொள்கிறார் என்று கூறுங்கள் என்றார். அது அமெரிக்கா நம் ஊர் கவுன்சிலர் வீடு பக்கம் கூட சாமான்யன் நெருங்க முடியாதே மூன்று அறைகளையும் சுற்றி பார்த்து விட்டு வெளியே வந்த்தோம் அங்கு ஒரு வாடா இந்திய தம்பதியினர் ஜார்ஜ் புஷ் கிளிண்டன் இருவரின் கட் அவுட்களுடன் நின்றிருந்தார்கள். அதன் பக்கத்தில் நின்றுகொண்டு நம் காமராவில் படம் எடுத்துக்கொள்ள காசு நாங்களும் எடுத்துக்கொண்டோம். சொன்னாலொழிய யாருக்கும் தெரியாது அவ்வளவு நேர்த்தியாக உள்ளது. 
u

No comments:

Post a Comment