சுவையான சம்பவங்களே இருந்தால் எப்படி. கொஞ்சம் கஷ்டப்பட்ட சம்பவமும் சொல்கிறேன். நாங்கள் இருவரும் ரமணனுடன் பப்பாலோ விலிருந்து பாஸ்டன் வந்ததும் லதாவின் பர்ஸ் உங்களிடம் தவறி வந்துவிட்டத என்று போன்
இல்லை என்று நாங்கள் சொன்னதும் திருடு பொய் விட்டதென்று தெரிய வந்தது அதற்குள் இருந்த இருநூறு டாலர் பணமும் க்ரடிட் கார்டில் ரெண்டாயிரம் ரூபாய்களும் திருடு போனது தெரிந்தது. நம் நாடுபணத்திற்கு ஒரு லட்சம் ஆயிற்றே என்று நாங்கள் ல்துடித்து போய்விட்டோம் ரமணன் மட்டும் அவர்கள் கட்டாயம் இன்சூர் செய்திருப்பார்கள். முழு பணமும் கிடைத்துவிடும் என்றான். லதா பர்ஸ் தொலைந்ததை கண்டுபிடித்து தன அக்கவுண்டை ப்ளாக் செய்ய சொல் வதற்குள் பலே திருடன் எடுத்த பத்தாவது நிமிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஜீன்சும் மற்ற ஆயிரம் ரூபாய்க்கு எதோ ஒன்றும் வாங்கி விட்டிருக்கிறான். நல்லகாலம் பாங்கில் பணம் எடுக்க முயற்ச்சித்து தோற்று விட்டான்.திருடு போனது பைசா பாக்கியில்லாமல் கிடைத்துவிட்டது அதுதான் அமெரிக்கா வாழ்க.
No comments:
Post a Comment