சரியாக ௧௨ மணிக்கு படகில் ஏறினோம் இருபது மைல் போகும்வரை குளிரவில்லை. நான்மட்டும் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டேன். எடுத்துப்போன சாப்பாட்டை சாப்பிட்டோம். சில நாட்களில் ஒரு திமிங்கிலம் கூட கண்ணில் தென்படாதாம். ஒருமணிநேரம் சென்று கரைக்கு திரும்பிவிட வேண்டியதுதான், ஆனால் இருபது டாலர் கட்டணம் ஆகையால் எல்லோருக்கும் பாஸ் கொடுத்து மற்றொரு நாள் வர அனுமதிப்பார்கலம். ஒஉள்ளூர் வாசிகள் என்றால் அடுத்த வார இறுதியில் வருவார்கள். நம்மைபோன்று வெளியூர்வாசிகளுக்கு லக் இருந்தால் பார்க்கலாம்.
சின்ன வகுப்புகளில் பூமி உரைநடை என்பதற்கு கடற்கரைக்கு சென்று பார்த்தால் கப்பல் சிறிது சிறிதாக கண்ணுக்கு மறைவதைகாநலம்.அதிலிருந்து பூமி உரைண்டைவடிவம் என்பது தெரியும் என படித்தும் இருக்கிறோம் பார்த்தும் இருக்கிறோம் .இங்கு நேர்மாறாக படகு கடலில் போக போக கரையிலிருக்கும் கட்டிடங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறைந்துனான்கள் ஐம்பது கல் தூரம் போனதும் முற்றிலுமாக மறைந்துவிட்டன. பூகோள உண்மை.
குறிப்பிட்ட இடம் வந்ததும் படகின் என்ஜினை நிறுத்திவிடுகிறார்கள். உடனே படகு அலைகளின் வேகத்தினால் ஆடத்தொடங்கிவிட்டது. நான் பயந்துபோய் ஒரு ஓர இருக்கையில் உடகார்ந்து விட்டேன், அப்பாவும் ரமணனும் த்ய்ரியாமாக படகின் ஓர கைபிடியை பிடித்துகொண்டு நின்று கொண்டே வந்ததார்கள்/
ஒரு திமிங்கிலம் வருகிறது நன்றாக பாருங்கள் வீடியோ ரெடி செய்து கொள்ளுங்கள் என்று அறிவிக்கிறார்கள். ஆ வந்துவிட்டது முப்பத்தைம்து அடி நீளமுள்ள திமிங்கிலம் வாழ் பகுதிமட்டும் கடல் அலைகளுக்கு மேலே ட்டிஹெரின்தது. அதற்குள் அடுத்த பக்கம் அறுபத்தைந்து அடி நீளமுள்ள பெவ்ரிய திமிங்கிலம் உடலை புரட்டிக்கொண்டும் தலை வாழ் என்று மாறி மாறி நீருக்கு மேல் எழும்பி விளையாடியது அற்புதமான காட்சி. ஒரே ஆரவாரத்துடன் எல்லோரும் படகின் ஒரே பகுதிக்கு செல்வதால் படகு சாய்கிறது நான் ரங்கே ரசித்தேன் உய்ருடன் ஊர் போய சேருவோமா என்று ஆகிவிட்டது. ஐந்து நிமிடங்கள் மிஞ்சி போனால் பத்து நிமிடங்கள் தான் படகை திருப்பிவிட்டார்கள்.
ரமணன் தயவில் யாருக்கும் எளிதில் கிடைக்காத கட்சி. நன்றி
No comments:
Post a Comment