வாஷிங்டனில் அங்கங்கு காரை நிறுத்துவது சிரமம் அதனால் பேக்கேஜ்
டூர் பஸ்ஸில் மறுநாள் போகலாம். இன்று அதில் விடுபட்ட இடங்களை பார்த்துவிடலாம் என்று கிளம்பினோம்.
வாஷிங்டன் ரயில் நிலையம் மிகப் பிரம்மாண்டமான கட்டிடம்.
அழகிய வேலைபாடுகள் மிக்க கூரை நடுவில் உள்ளது. நான்கு புறமும் மிக நீண்ட வராந்தாக்கள். பெருபாலும் பாதாள ரயில்தான்.முதலில் ஜார்ஜ் வாஷிங்டன் நினைவு ஸ்தூபி. வியட்நாம் போரில் உயிரிழந்தவர்களுக்காக கட்டப்பட்டது. 2 லைட் ஹவுஸ் உயரம் எதோ பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்ததால் உள்ளே அனுமதிக்கவில்லை. இல்லையென்றல் லிப்ட் மூலம் உச்சிக்கு சென்று பார்க்கலாம்.நான்குபுறமும் ஒரு ஜன்னல்கூட கிடையாது. உச்சியில் ஒரே ஒரு சாளரம்.
அதன் பிறகு அருகே உள்ள ஐ மாக்ஸ் திரையரங்கு. 200 எம் எம் டுபளை என்ற
படம் மனிதன் முதன்முதலில் எப்படி கிளைடரில் பறக்க முயற்ச்சித்தான் என்றும் இன்று எப்பெடி விமானமூலம் அமெரிக்க உள்ளது என்று சுற்றிக்கட்டுவதுபோல் முடிகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள் உலக அதிசயமான கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்கு நயாகரா நீர்வீழ்ச்சி என அமெரிக்காவின் பார்க்கவேண்டிய அனைத்து இடங்களையும் உட்கார்ந்த இடத்திலேயே காட்டிவிட்டார்கள்.
No comments:
Post a Comment