Monday, January 10, 2011

from vaaramalar.

வாழ்க்கை வசப்பட
பகைவர்கள் மிக நல்ல நண்பர்களாய் மாறலாம்
பழைய தொவிகளின் பாரங்கள் நீங்கலாம்
எத்தனை இழந்தாலும் இழந்த பொருளை மீட்கலாம்
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்
பதறாத மனம் தான் புதுமைகள் நினைக்கும்
புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்
செயல்கள் சிறந்தால் சாதனை பிறக்கும்
சாதனை பிறந்தால் வாழ்க்கை இனிக்கும்
சரிவுகள் தானே சரி செய்துவிடலாம்
சவால்கள்தானே சந்தித்து விடலாம்
சதிகள்தானே முறியடித்து விடலாம்
சிக்கல்கல்தானே சீர் செய்துவிடலாம்
புதிய நட்புகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள்
பழைய நண்பர்களை கொண்டாடுங்கள்
இரவல் வாங்குபவற்றை திரும்ப கொடுங்கள்
 நாளொன்றுக்கு மூன்று பேரையாவது பாராட்டுங்கள்.
நிரந்தரமான மகிழ்ச்சி
துணிவான முடிவுகளில் இருக்கிறது
பணிவான வார்த்தைகளில் இருக்கிறது
கனிவான அணுகுமுறையில் இருக்கிறது
பரிவான உதவிகளில் இருக்கிறது
தொல்வி வந்தால் பொறுமை அவசியம்
வெற்றி வந்தால் பணிவு அவசியம்
எதுவந்தாலும் நம்பிக்கை அவசியம்
இது என்னுடைய வேண்டுகோள்
புதுவருடத்தில் ஒரு சபதம் எடுத்துக்கொள்வோம்
தயவு செய்து , மிக்க நன்றி,மன்னித்து கொள்ளுங்கள்
இம்மூன்று வார்த்தைகளையும் அந்தந்தத ச்டந்தர்பர்த்தில் தவறாமல் பயன் படுத்துவோம்
பஸ் கண்டக்டர் ஆட்டோ டிரைவர் ஹோட்டல் சர்வர் இவர்களுக்கு ஒரு நன்றி சொல்லுங்கள்
பணம் கொடுக்கும்போது இருந்த முக மலர்சியைவிட அதிகமாக முகம் மலர்வார்கள்
அதைக்காணும் நமக்கும் அகம் மகிழும்
பெற்ற பிள்ளயிடமானாலும் ஒரு வேலை சொல்லும்போது
ப்ளீஸ் என்று போட்டு சொல்லி பாருங்கள் மறு வார்த்தையின்றி
உடனே செய்வார்கள்
நாம் செய்தது தவறு என நம் மனசாட்சி சொல்லும்போது வயது பதவி எதயும் பாராம் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புகேளுங்கள். பிறகு குற்ற உணர்வு மனதை விட்டு ஓடியே போய்விடும்

No comments:

Post a Comment