பரண்மேல் போட்ட சைக்கிளை கீழே இறக்குங்கள், அதை உபயோகப்படுத்துவதால் உடற்பயிற்சி செய்தது போலவும் ஆச்சி பணமும் மிச்சம்.
மாலையில் குழந்தைகளை பள்ளியிலோ வீட்டிலோ மற்ற பிள்ளைகளுடன் விளையாட சொல்லுங்கள்.
அதனால் அவர்களுக்கு மற்றவஸ்ர்களுடன் பழுகும் தன்மை விட்டு கொடுக்கும் தன்மை எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணம் எல்லாம் ஏற்படும்.
வயதானவர்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உபயோகமற்ற சீரியல்களை பார்பதை விட்டு குழந்தைகளை அருகில் உள்ள கோவிலுக்கோ பூங்காவுக்கோ அழைத்து செல்லுங்கள்
நல்ல காற்றை சுவசித்தர்போலவும் இருக்கும் வீட்டிலுள்ள இளம் தாய்க்கு உதவினார்போலவும் இருக்கும்.
இரவில் சப்பாத்தி சாப்பிடனும் இட்லி தோசை சாப்பிடனும் என்றெல்லாம் வயதாவர்களுக்கு கட்டாயமில்லை ரசம் சதாமும் மோர் சாதமும் அளவோடு சாப்பிட்டால் ஒன்றும் செய்யாது.
குழந்தை களுக்கு கூடியவரை பழங்கள் கொடுங்கள் பாட்டிலில் அடைத்த ஜூஸ் கொடுக்காதீர்கள்.
மதத்தில் ஒருமுறை வ்ண்டுமானால் வெளியில் அவரவர் வசதிக்கேற்ற இடத்தில் சாப்பிடுங்கள். ஆனால் வீட்டில் சுத்தமான எண்ணையில் தயாரித்த முறுக்கு தட்டை வடை போன்றவற்றை கொடுங்கள்
இரவில் கோரை பாயில் படுங்கள் அல்லது இலவம்பஞ்சு மெத்தையில் படுங்கள் இவை இரண்டும் தான் உடல் நலத்திற்கு நல்லது..டு
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment