Sunday, January 30, 2011

kanchi

காஞ்சி  காஞ்சியில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்.
காசியில் இறந்தால் மோட்சம் காஞ்சியில் பிறந்தால் மோட்சம்
என்பது வழக்கு. செத்த பிறகு எங்கே போகிறோம் என்பது யாருக்கு தெரியும்

எப்படிப்பட்ட புண்ணிய பூமியில் பிறந்துள்ளேன் என்று பெவ்ருமிதம் கொள்கிறேன்.
நகரேஷு காஞ்சி --அதாவது இந்தியாவின் தலை சிறந்த ஏழு நகரங்களில் முதன்மயானாது
காஞ்சி.உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமென்று பெயர் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர்களாக சென்ட்டிரவர்கள் காஞ்சியிலிருந்துதான்

பிறப்பால் மனிதன் உயர்ந்தவனில்லை எவன் ஒருவன் வேதங்களையும் சாத்திரங்களையும் படித்து அதன்படி வாழ்கிறானோ அவனே பிராமணன் என்று புரட்சி செய்து வேடம் படித்து தேறியவர்களை பூணுல் அணிவித்து பிராமணனாக ஏற்றார் ராமானுஜர். அவர் குருவாக ஏற்று வேடம் சத்திரம் பயின்றது திருகாசி நம்பி என்று காஞ்சியில் பிற ந்தவரிடம் தான்.

ஒருவரை சந்திப்பது கடினமாக இருந்து சந்திக்கும்போது என்ன காஞ்சி சி கருட சேவை
பார்ப்பது போல் உள்ளது என்பார்கள்.
போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் கருட சேவை  பார்க்க போவது நீண்ட நாள் திட்டமாகவும் ஆசையாகவும் இருந்தது.
 பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் என்றாள் ஆதிக்க உலகில் பெயர்த் பெற்றவர். அதாவது ஆத்திக வாதங்களில் அவர் உட்கார்ந்ததால் எதிரே இருப்பவர்கள் அஞ்சி நடுங்குவார்களாம்.

திருவள்ளுவர் சொன்னாரே அதன் பொருள் இன்றுவரை புரியவில்லை. யாராவது சொன்னால் நன்று
தோன்றிற் புகழோடு தோன்றுக ஏன்று  பிறப்பது நம் கையிலா உள்ளது  இனம் மதம் செல்வம் நாடு என பிறப்பை தீர்மானிப்பது ஆண்டவன் செயல்.  ஆனால் நன்கு கல்வி கற்று கற்றதன்படி நடந்து தன திறமைகளை வளர்த்துக்கொண்டு புகழோடு வாழ்ந்து மறைவது நம் கையில் தான் உள்ளது.
அப்படி ஒரு சாதாரணகு டும்பத்தில் பிறந்து  கல்வி கற்று தேர்ந்து வாழ்வில் புகழின் உச்சிக்கே சென்று இறப்பிலும் கின்னஸ் சாதனை படைத்த பேரறிஞர் அண்ணா பிறந்தது காஞ்சிக்கே பெருமை.

பண்டைய காலம்தொட்டே பட்டு என்றாள் காஞ்சிபட்டுதான் பட்டு. பார் புகழும் பட்டு புடவைகள் அசல் தங்க வெள்ளி சரிகை சேர்த்து நெய்யப்பட்டு  வந்தன. காலப்போக்கில் தங்கம் விலை தொட முடிய உயர்த்துக்கு சென்று விடவே மாற்று சரிகை போட்டு மின் தறியில்  யில்  புடவைகள் நேத்து நடுத்தர வர்கத்தினரும் வாங்கும் படி உற்பத்தி செய்கிறார்கள்.
காஞ்சிக்குபோனால் காலாட்டி பிழைக்கலாம் என்பது பழமொழி. எந்த நாளிலும் பிழைப்பு தேடி காஞ்சிக்கு வந்து விடடால் காலாடி என்பது தறி நெய்து என்பதை குறிக்கும். இன்றைய இளம் தலைமுறையினரும் கம்பியுட்டரில் டிசயின் செய்து பிரமாதமான ஒஉடவைகள் நெய்குரார்கள். அன்று எலிசபெத் ராணியிலிருந்து இன்றைய மிச்சேல் ஒபாமாவரை காஞ்சி பாபத்தை உடுத்தாதவர்களே கிடையாது,

காஞ்சிபுரம் இட்லியும் பேர்தான் காசி அல்வா பூசணி அல்வாவும் காஞ்சிக்கே உரிய சிறப்பு பலகாரங்கள்.
காஞ்சியில் கருடசேவையின் போது  மதுரை சோமு பாடினாரே பாடிப்பழயவேத்ம தேடிப்பின்னேவர ஒது ம தமிழ் மறை தேடி நீ செல்வதேன்னே என்று.
காஞ்சி வரதராஜர் பத்து நாட்கள் உர்த்சவத்தை பார்க்கவேண்டுமே இன்றும் கட்டுக்குடுமியும் நெற்றியில் திருமன்னுமாக வாய் நிறைய திவ்யப்ரபந்தம் அல்லது ரிக் வேதம் பாடிசெல்பவர்கள் எல்லாம் சாமானியர்கள் என்று எண்ணி விடாதீர்கள் டெல்லியிலும் அமெரிக்காவிலும் பெரிய பெரிய பதவி வகிப்பவர்களும் அடக்கம்.
கைலாசநாதர் கோவில் மன்னர்களும் மலையத்து நின்ற அதிசயம்.
இன்னும் எவ்வளோவோ உள்ளன. டயிப் அடித்தது ஓடிவிடப்போகிறது முடித்து கொள்கிறேன்.


kanchi

Friday, January 28, 2011

from viveka chinthaamani

மாற்றானிடம்   உள்ள செல்வம்  பொருளாசை கொண்ட பெண்கள்,உடன் பிறவா சகோதரன்
ஆகியவை ஒருவனுக்கு கை கொடுப்பதில்லை.
ஆசிரியர் தந்த பாடம் செய்த தர்மம் குரு உபதேசித்த மந்த்ரம் மற்றவர்களின் கஷ்டம் இவைகளை வெளியில் சொல்ல கூடாது
பெற்றெடுத்தவள் மட்டும் தாயல்ல சகோதரனின் மனைவி குருபத்னி வேலைக்கு
ஊதியம் வழங்கும் முதலாளியின் மனைவி பெண் கொடுத்த மாமியார்
ஆகியோரும் தாய்க்கு சமமானவர்களே.
பணமில்லாத வாழ்க்கை குறிப்பறிதல் இல்லாத மனைவி விருந்தாளி வராத வீடு
வளர்ச்சி இல்லாத வாணிபம் இவற்றால் பயன் விளைவதில்லை
கற்றுக்கொடுத்த ஆசிரியரை மாணவன் கல்வி கற்றதும் மறந்து விடுகிறான்
நோய்க்கு மருந்து தந்து வைத்தியம் செய்த மருத்துவரை குணமடைந்த
நோயாளியும் மறந்து விடுகிறான்.
நல்லவர்களின் மனதை கெடுப்பது பெற்றவர்களின் மனதை வருத்துவது
ஒருவனின் கல்வி வளர்ச்சியை தடுப்பது போன்றவை பெரும் பாவசெயலாகும். 
இதைப்போல் இன்னும் ஆயிரம் ஆயிரம் சொல்லலாம் மொத்தத்தில் எல்லோர்க்கும் பசி நீங்கி வயிறு    குளிர்ந்து நாளை ப ற்றிய கவலையின்றி இருப்போர்க்குதான் உலகின் அழகுகள் எல்லாம் கண்ணுக்குத்தெரியும்
ஏழை கண்ணிருந்தும் குருடனே 
இடுப்பொடிய நாற்று நாட்டு எழும் பெண்ணிடம் நாற்று வரிசை
நாற்று வரிசை அழகு இல்லையா என்றால் அவள் கூறுவாள் ---இல்லை
பகலெல்லாம் உழைய்த்து வீடு திரும்பும் பெண் இரவு சமையல் என்ன செய்யலாம்
என்று யோசனையில் ரயிலில் வரும் பெண்ணிடம் அந்திவானத்து வானவில்
அழகாக உள்ள தே என்றால்  அவள் கூறுவாள்--இல்லை 

paarvaiyin koname verudhaan

பார்வையின் கோணமே வேறுதான்.
காலைத்தூக்கத்தை கதகதப்பான போர்வையில் அனுபவிக்கும் பேரனைக்
கேளுங்கள் மாமரச்த்துக்குயில் கூவுவது இனிமையா என்று --இல்லை என்பான்
பாடாளியை எழுப்பி பழைய கஞ்சியை குடிக்க கொடுத்துகொண்டே உதய சூரியன்
அழகா என்று கேட்கட்டும் --இல்லை என்பான்
.

Thursday, January 27, 2011

kavidhai illai en karutthu

ஆணின் அழகு
பிடரி முடி சிலிர்க்க பீடு நடை போட்டு வரும் சிங்கம்
பீலியில் அழகெல்லாம் தெரிய மழை மேகம் கண்டு ஆடி வரும் மயில்
கொண்டையை சிலுப்பி கொக்கரக்கோ என்று காலை கூவி வரும் சேவல்
நீண்ட தந்தம் கொண்டு காதுகள் விசிறியாக வீச ராஜநடை போட்டு வரும் யானை
உயர்ந்த திமிலும் கூரிய கொம்பும் கொண்டு சீறி வரும் காலை
மனிதனும் ஆசை பட்டு வைக்கும் குறுந்தாடி கொண்ட ஆடு

தூக்கி கட்டிய முடியும் நீவி விட்ட தாடியும் கொண்ட திருவள்ளுவர்
முறுக்கிய மீசையும் தீ உமிழும் கண்களும் கொண்ட பாரதி
சிம்ம நடை நடந்து சிம்ம குரல் கொண்டு சிங்காரமாய் வாழ்ந்த சிவாஜி கணேசன்
எல்லா ஆண்களும் ஆசை பட்டு வைத்துகொண்ட மீசைக்கு சொந்தகார் ரன் வீரப்பன்
ராமாயணம் தொடரை ராமன் அழகுக்காகவே பார்க்கும் ரசிகைகள் பலர் உண்டு
எல்லா விளம்பரங்களிலும் நவரசம் காட்டி நடிக்கும் குட்டிப்பையன்
பெண்ணே கண்டு மயங்கும்படி ஆண் வேடம் போட முடியும்
பெண் என்னதான் ஆணாக வேடம் போட்டாலும் பெண்ணின் கனிவு முகம் மாறாது
ஆணாக பிறந்து பெண்ணாக மரியா கதை பலவுண்டு
பெண் ஆணாக மாறியதாக கதை அறிதன்றோ
அது கடவுள் செய்த சதி