ஒரு பெண்ணின் வாழ்வில் பல கட்டங்களை கடக்க வேண்டி உள்ளது. தாய் வீட்டில்
பேத்தியாக மகளாக சகோதரியாக என்றும் புகுந்த வீட்டில் மருமகளாக மனைவியாக தாயாக பிறகு மாமியராக பாட்டியாக என பலஉருவம் எடுக்க வேண்டி உள்ளது. எனக்கு எழுபது வயதாகிறது. நான் கடந்துவந்த பாதையை சற்றே திரும்பி பார்க்கிறேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு தந்தை வழி தாத்தா மட்டும்தான் இருந்தார். வீட்டில் நான் முதல் பெண் குழந்தை எனவும் ஆவலோடு தன் அம்மாவின் பெயரை பங்கஜம் என்று வைத்துவிட்டு சதா அம்மா அம்மா என்றே அழைப்பார். எனக்கு நான்கு வயது முடிவதற்குள் தமிழ் எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்கள் எழுத படிக்க கற்று தந்தார்.நிறங்கள், உடல் உறுப்புகள் பூக்கள் பழங்கள் உறவுகள் வீடு உபயோக சாமான்கள் என அனைத்தையும் சொல்லி கொடுத்தார். நானும் பொறுமையாக கற்றுக்கொண்டேன். ஐந்து வயது முடிந்ததும் பள்ளியில் சேர்க்க அழைத்துப்போனார். தன் பேத்தியின் திறமையை பெருமையுடன் தலைமை ஆசிரியருடன் சொல்லி காட்டினார்.. அவர்கள் எனக்கு இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள்.
பிறகு நடந்த வேடிக்கையை கேளுங்கள். வகுப்பில் முதல்மாணவியாகஇருப்பேன். ஒரு நாள் கைவேலை வகுப்பிற்கு ஆசிரியை வளையல் துண்டுகளும் பனை ஓலையும் கண்டு வரசொன்னார். நான் மறந்துகொண்டு போகவில்லை, என்னைப்போல் வராத பிள்ளைகளை கையில் பிரம்பால் அடித்தார்கள். என்னைமட்டும் முதல் மாணவி என அலட்சியமா என்று கன்னத்தை நன்றாக திருகிவிட்டர்கள். மத்யம் வீட்டுக்கு போனதும் தாத்தா விசாரணையில் உண்மையை சொல்லிவிட்டேன். வந்ததே கோபம். நேராக ஆசிரியையிடம் போய் இது ஒரு பெரிய குற்றமா குழந்தைகளை தண்டிக்க என்று கேட்டார்
எல்லா குழந்தையையும்தான் அடித்தேன். உங்கள் பேத்தி செல்லம் என்றால் வீட்டிலேயே வைத்துபடிக்க வையுங்கள் என்றார். நேராக தலைமை ஆசிரியையிடம் முறையிட்டார் அவர்களும் ஆசிரியைக்கு ஆதரவாக பேசவும்
மாற்று சான்றிதழ் வாங்கி விட்டு மூன்று மாதங்கள் வீட்டில் பாடம்சொல்லி அடுத்த வருடம் மூன்றாம் வகுப்பு வேறுபள்ளியில் சேர்த்தார்.
என் அப்பவை அழைத்து என் பேத்தியை பத்தாவதுவரை படிக்கவை என்றார் . அந்த நாட்களில் பெண்வயதுக்கு வந்து விட்டால் பள்ளி படிப்பை நிறுத்தி விடுவார்கள். பாட்டு சொல்லிகொடுத்தார். ஓவிய ஆசிரியராக பச்சையப்பன் பள்ளியில் வேலை பார்த்தவர். அதனால் ஓவியம் சொல்லி தருவார் . தன் பேத்தி சகலகலவல்லியாக விளங்கவேண்டும் என்று கனவுகண்டார்.
வயதான காரணத்தால் கை
கால் பிடித்துவிட சொல்வர் தண்ணீர் குடிக்க கொண்டுவர சொல்லுவர். நான் இன்முகத்தோடு செய்வேன். அதற்கு பரிசாக கதைகள் சொல்லுவார் . அனால் என்னுடைய பத்தாவது வயதில் தாத்தாவை இழந்துவிட்டேன்.
அவர் சொல்லித்தந்த சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை, பொறுமை, இவையெல்லாம் துணையாக இருந்து என் வாழ்வில் உயர்வை தந்துள்ளது.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
as you said its true in ma life too.....you hav taught me how to live and i'll surely make you proud one day!!!!
ReplyDeletelove you paati!!!
rahue thank you for your comment and bless you to become a good personalirt in future
ReplyDelete