காண பரம்பரை கதைகள் என்றால் செவிவழிகேட்ட கதைகள் என்று பொருள்.என்னிடம் கதைகேட்கும் வயதில் உள்ள பேரப்பிள்ளைகள் எல்லாம் கண் காணா தொலைவில் உள்ளார்கள். இதைபட்டிப்பவர்கள் எல்லாம் என் பிள்ளைகளே பேரப்பிள்ளைகளே. எனக்கு பிடித்த கதைகளை தினம் ஒன்றாக சொல்லுகிறேன். ஒரு அரசரும் மந்திரியும் கட்டு வழி சென்றுகொண்டிருந்தர்த்கள் அரசர் ஒரு மரத்திலிருந்த காய் ஒன்றை கத்தியால் பறித்தார்.சுண்டுவிரலில் காயம் பட்டு ரத்தம் கொட்டியது. மந்திரி கட்டுபோட்டுவிட்டு எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்வோம் என்றார் என் கையில் ரத்தம் வருவது உனக்கு நன்மையாக தெரிகிறதா தொலைந்துபோ என்று காலால் எட்டி உதைத்தார் மந்திரி பக்கத்தில் இருந்த ஒரு கிணற்றிற்குள் விழுந்து விட்டார். சிறிது நேரத்தில் உந்த வழியாக வந்த நரபலி சாமியார்கள் நால்வர் அரசரை பார்த்து நாம் தேடிவந்த ராஜலக்ஷ்ணம் பொருந்திய ஆள் கிடைத்துவிட்டான் என்று கூச்சலிட்டு அரசரை உடல் முழுதும் சோதித்தார்கள் விரலில் இருந்த வெட்டு காயத்தை பார்த்து அடடா இவன் பின்னப்பட்ட உருவம் பலிக்கு உதவமாட்டான் என்று விட்டு சென்று விட்டார்கள் ராஜா உடனே கிணற்றருகில் சென்று மந்திரியை வெளியே தூக்கி விட்டு நீர் சொன்னது சரிதான் என் கையில் காயம் பட்டதா ல் இன்று உயிர் பிழைத்தேன் நான் உம்மை கிணற்றஇல் தள்ளியதற்காக மன்னித்துவிடு என்றார். அதுவும் நன்மைக்கே மகராஜா என்றார். அது எப்படி என கேட்டார். நான் வெளியே நின்றிருந்தால் உங்களை விட்டு அடுத்ததாக என்னை அல்லவோ பிடித்துபோயிருப்பர்கள் என்று கூறினார். அரசுரும் மந்திரியை பாராட்டினார். எதையும் நன்மைக்கே என்று எடுத்து கொள்ளுவோம்.வாழ்வில் முன்னேறுவோம்.
Amma Superb!! I'll read this story to Ashu & Annu
ReplyDeleteமிக நன்றாக உள்ளது........பாட்டி இப்பொழுதும் உன் கதைகள் என்ரால் எனக்கு ரொம்ப பிடிக்கும்
ReplyDelete